Realme 14x 5G vs POCO M7 Pro 5G: இந்த வாரம் டிசம்பரில் வந்த இரு போனில் எது பெஸ்ட்
இந்த ஆண்டு டிசம்பரில் பல ஸ்மார்ட்போன்கள் அறிமுகமானது அந்த வகையில் Realme மற்றும் Poco அதன் என்ட்ரி லெவல் போனை அறிமுகம் செய்துள்ளது அந்த வகையில் இந்த வாரம் Realme அதன் Realme 14x 5G மற்றும் இதன் மறுபக்கம் POCO M7 Pro 5G ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்தது Realme 14x 5G மற்றும் POCO M7 Pro 5G இந்த இரு போனையும் ஒப்பிட்டு எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம் வாங்க.
Realme 14x 5G vs POCO M7 Pro 5G: டிஸ்ப்ளே
- Realme 14x 5G யில் 6.67-இன்ச் HD+ IPS LCD ஸ்க்ரீன் உடன் 120Hz ரெப்ராஸ் ரேட் உடன் இதில் 625 நிட்ஸ் மற்றும் இதன் ஸ்க்ரீன் டு பாடி ரேசியோ 89.97 இருக்கிறது
- அதுவே இதன் மறுபக்கம் POCO M7 Pro 5G போனில் அதே மாதுரியான 6.67 இன்ச் உடன் முழு -HD+ AMOLED டிஸ்ப்ளே உடன் இதில் 120Hz ரெப்ராஸ் ரேட் கொண்டிருக்கிறது இதனுடன் Dolby Vision மற்றும் HDR10+ சப்போர்ட் மற்றும் 2,100 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடன் வருகிறது.
Realme 14x 5G vs POCO M7 Pro 5G: ப்ரோசெசர்
- Realme 14x 5G யின் ப்ரோசெசர் பற்றி பேசினால் இதில் MediaTek Dimensity 6300 சிப்செட்டுடன் இதில் 8GB யின் RAM உடன் வருகிறது இதன் ஸ்டோரேஜை 10GB ரேம் வரை அதிகரிக்கலாம், மேலும் இந்த புதிய போனில் 128GB வரையிலான இன்டெர்னல் ஸ்டோரேஜ் வழங்குகிறது
- அதுவே இதன் மறுபக்கம் POCO M7 Pro 5G போனில் MediaTek Dimensity 7025 Ultra ப்ரோசெசருடன் இந்த போனில் 8GB யின் ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது
இதை தவிர இந்த இரு போனிலும் Android 14 உடன் இதில் ரியல்மி Realme UI 5.0 பயன்படுத்தியுள்ளது மற்றும் போக்கோ இதில் HyperOS கஸ்டம் ஸ்கின் பயன்படுத்துகிறது.
Realme 14x 5G vs POCO M7 Pro 5G: கேமரா
- Realme 14x 5G போனில் 50MP ஆட்டோபோகஸ் மெயின் கேமரா மற்றும் செகண்டரி கேமரா இருக்கிறது இதை தவிர இதில் செல்பிக்கு 8MP முன் கேமரா இருக்கிறது
- அதுவே இதன் மறுபக்கம் POCO M7 Pro 5G போனில் 50MP வைட் சென்சாருடன் ஆப்டிகல் இமேஜ் ஸ்டேப்லைசெசன் OIS மற்றும் 2MP டெப்த் சென்சார் உடன் வருகிறது இதன் முன் பக்கத்தில் 20MP செல்பி கேமரா இருக்கிறது
Realme 14x 5G vs POCO M7 Pro 5G: பேட்டரி
- Realme 14x 5G போனில் 6000mAh பேட்டரியுடன் 45W வயர்ட் சார்ஜிங் மற்றும் 5W ரிவர்ஸ் வயர்ட் சார்ஜிங் உடன் வருகிறது
- அதுவே POCO M7 Pro போனில் 5110mAh பேட்டரியுடன் 45W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் செய்கிறது.
Realme 14x 5G vs POCO M7 Pro 5G: விலை
- Realme 14x 5G இன் 6GB + 128GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.14,999 மற்றும் 8GB + 128GB ஸ்டோரேஜ் வகையின் விலை ரூ.15,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட் மற்றும் ரியல்மியின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் விற்பனைக்கு கிடைக்கிறது. வெளியீட்டு சலுகையின் கீழ், அனைத்து வங்கிகளின் கார்டுகளிலிருந்தும் ரூ.1000 இன்ஸ்டன்ட் தள்ளுபடி கிடைக்கும். வண்ண விருப்பங்களைப் பொறுத்தவரை, தொலைபேசி கிரிஸ்டல் பிளாக், கோல்ட் க்ளோ மற்றும் ஜூவல் ரெட் ஆகிய நிறங்களில் கிடைக்கிறது.
- POCO M7 Pro 5G யின் வெளியீட்டு விலை ரூ.13,999 முதல் தொடங்குகிறது. இந்த விலை அதன் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆகும். இதன் இரண்டாவது வேரியண்டில் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டெர்னல் மெமரி உள்ளது. இதன் விலை ரூ.15,999 ஆக வைக்கப்பட்டுள்ளது. இந்த போன் டிசம்பர் 20 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் விற்பனைக்கு கிடைக்கும். இதன் விற்பனை பிளிப்கார்ட் மூலம் நடைபெறும்.
இதையும் படிங்க:Realme 14x 5G VS Lava Blaze Duo 5G: இந்த இரு லேட்டஸ்ட் போனில் எது பக்கா மாஸ்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile