Realme 12 Pro Plus VS Redmi Note 13 Pro Plus: இந்த இரு போன்களுக்கு இடையில் எது பெஸ்ட் ?
Realme அதன் மிட்ரேன்ஜ் Realme 12 Pro Plus ஜனவரி 29 அன்று இந்தியாவில் அறிமுகம்
இந்த ஸ்மார்ட்போனில் ஒரு புதிய ஸ்டைலிஷ் டிசைன் மற்றும் அப்க்ரேட் கேமரா கொண்டிருக்கிறது
இப்பொழுது நாம் இந்த போனை Redmi Note 13 Pro Plus ஒப்பிட்டு பார்க்கப்போகிறோம்
Realme அதன் மிட்ரேன்ஜ் Realme 12 Pro Plus ஜனவரி 29 அன்று இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது, இந்த ஸ்மார்ட்போனில் ஒரு புதிய ஸ்டைலிஷ் டிசைன் மற்றும் அப்க்ரேட் கேமரா கொடிருக்கிறது, இப்பொழுது நாம் இந்த போனை Redmi Note 13 Pro Plus ஒப்பிட்டு பார்க்கப்போகிறோம் இந்த போனும் கடந்த மாதமே அறிமுகம் செய்யப்பட்டது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் சுமார் 30000 பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்பட்டது சரி வாருங்கள் பார்க்கலம் இந்த இரண்டு மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன்களில் எது பெஸ்ட் என்று பார்க்கலாம்.
Realme 12 Pro Plus VS Redmi Note 13 Pro Plus: Comparison
Realme 12 Pro Plus VS Redmi Note 13 Pro Plus Design
இந்த இரண்டு ஸ்மார்ட்போனும் கடந்த ஜெனரேசன் ஒப்பிட்டு பார்ப்பதில் இந்த போனில் ரெப்ராஸ் ரேட் டிசைன் உடன் வருகிறது. ரியல்மி போன் மூன்று கலரில் வருகிறது சப்மரைனர் ப்ளூ, எக்ஸ்ப்ளோரர் ரெட் மற்றும் நேவிகேட்டர் சீட் போன்றவற்றில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த போனின் மிக பெரிய சிறப்பு அதன் டிசைன் ஆகும். இதற்காக பிரபல சொகுசு வாட்ச் தயாரிப்பாளரான Ollivier Savéo உடன் நிறுவனம் ஒத்துழைத்தது. இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தை உருவாக்க அவர் உதவினார். இந்தச் சாதனத்தில் நீங்கள் பிரீமியம் வேகன் லெதர் பேக் மற்றும் அழகான வட்ட வடிவ கேமரா மாட்யூலைப் வழங்குகிறது இந்த போன் 8.5 மிமீ தடிமன் மற்றும் 195 கிராம் எடை கொண்டது. இது டஸ்ட் மற்றும் தண்ணீரிலிருந்து பாதுகாப்பதற்கான IP65,ரேட்டிங்கை கொண்டுள்ளது.
அதன் மறுபக்கத்தில் Redmi யின் Note 13 Pro+ ஒரு லெதர் பேக் உடன் வருகிறது, மற்றும் இந்த போன் மூன்று கலர் ஒப்சனில் வருகிறது. Fusion Black, Fusion Purple மற்றும் Fusion White ஆகிய நிறங்களில் கிடைக்கும். பிளாக் அண்ட் ஒயிட் வகைகளில் திட நிற பின் பேனல் உள்ளது, அதே சமயம் ஃப்யூஷன் பர்பில் சற்று வித்தியாசமான பின்புறத்தைக் கொண்டுள்ளது. அதன் பின்புறத்தில் வெள்ளை மூன்று கலர் ஊதா, பச்சை மற்றும் நீலம் கொடுக்கப்பட்டுள்ளது. கேமராக்கள், எல்இடி ஃபிளாஷ் மற்றும் ரெட்மி பிராண்டிங் ஆகியவற்றைப் பிரிக்கும் மூன்று மாட்யுல் அதன் பின்புறத்தின் மேல் பகுதியில் உள்ளன. இது 8.9 mm திக்னஸ் மற்றும் 199 கிராம் எடை கொண்டது. நோட் 13 ப்ரோ+ ஸ்மார்ட்போன் IP65 விட சிறந்ததாக IP68 என ரேட்டிங் செய்யப்பட்டுள்ளது
Display
Realme 12 Pro+ யில் 10-பிட் கலர் , 120Hz ரெப்ராஸ் ரேட் சப்போர்ட் மற்றும் 950 nits உச்ச பிரகாசம் ஆகியவற்றை வழங்கும் 6.7-இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே கிடைக்கும். இதற்கிடையில், ரெட்மி போன் சிறந்த டிஸ்ப்ளே உடன் வருகிறது. இது 6.7 இன்ச் 1.5K AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, இது 68 பில்லியன் கலர் 120Hz ரெப்ரஸ் ரேட் டால்பி விஷன் மற்றும் HDR10+ ஆகியவற்றை ஆதரிக்கிறது. இது 1800 nits ஹை ப்ரைட்னாஸ் வழங்குகிறது மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் மூலம் பாதுகாக்கப்படுகிறது.
Performance
Realme ஸ்மார்ட்போனில் 12GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்ட Snapdragon 7s Gen 2 ப்ரோசெசர் மூலம் இயக்கப்படுகிறது. இது தவிர, இது ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்ட சமீபத்திய Realme UI 5.0 யில் இயங்குகிறது.
இஹன் பிறகு Redmi போன் பர்போமன்சுக்கு இதில் மீடியாடேக் டிமான்சிட்டி 7200 அல்ட்ரா சிப்செட் உடன் வருகிறது. Xiaomi இந்த போன மூன்று ஸ்டோரேஜ் வகைகளில் வழங்குகிறது; 8ஜிபி 256ஜிபி, 12ஜிபி 256ஜிபி மற்றும் 12ஜிபி 512ஜிபியில் சலுகைகள். சாப்ட்வேர் பொறுத்தவரை, இந்த போன் ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான MIUI 14 யில் வேலை செய்கிறது. இருப்பினும், சீன பிராண்ட் விரைவில் இந்த போனுக்கு Android 14 அடிப்படையிலான HyperOS ஐ வழங்கும்.
Camera
12 ப்ரோ+ கேமரா அதன் இரண்டாவது யுஎஸ்பி மற்றும் பிராண்ட் அதை ” “The Portrait Master” என்று அழைக்கிறது. PDAF மற்றும் OIS சப்போர்டுடன் 50MP பிரைமரி கேமரா, 3x ஆப்டிகல் ஜூம் கொண்ட 64MP பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ சென்சார் மற்றும் 8MP அல்ட்ராவைட் லென்ஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய டிரிபிள் கேமரா செட்டிங் பின்புறத்தில் உள்ளது. மொபைலின் முன்பக்கத்தில் 32எம்பி செல்ஃபி ஷூட்டர் உள்ளது.
மறுபுறம், Redmi ஃபோனில் மூன்று பின்புற கேமரா செட்டப் உள்ளது, ஆனால் இதில் 200MP ப்ரைம் கேமரா, 8MP அல்ட்ராவைடு லென்ஸ் மற்றும் PDAF மற்றும் OIS சப்போர்டுடன் 2MP மேக்ரோ லென்ஸ் ஆகியவை அடங்கும். இந்த போனில் செல்ஃபி எடுக்க 16MP முன்பக்க கேமரா உள்ளது.
Battery
இந்த இரு போனின் பேட்டரி பவர் பற்றி பேசுகையில் எந்த வித்தியாசமும் இல்லை ஏன் என்றால் இந்த இரு போனிலும் ஒரே மாதுரியான 5000mAh பேட்டரியுடன் வருகிறது, இருப்பினும், ரெட்மியை வித்தியாசமாகவும் சிறப்பாகவும் மாற்றும் ஒரு விஷயம் உள்ளது, அதுவே அதன் வேகமான சார்ஜிங் ஆகும். Realme ஃபோன் 67W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது, அதே சமயம் Note 13 Pro+ ஆனது 120W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்டை கொண்டுள்ளது.
இதையும் படிங்க: Valentine’s Day 2024: Google உருவாக்கியுள்ளது சிறப்பு டூடுல்
Realme 12 Pro Plus VS Redmi Note 13 Pro Plus: விலை மற்றும் விற்பனை தகவல்
Realme 12 Pro Plus நிறுவனம் இந்தியாவில் அதன் அதிகாரபூர்வ வெப்சைட்டில் 29,999 ரூபாய் ஆரம்ப விலையில் வாங்கலாம். ஒப்பிடுகையில், Redmi Note 13 Pro+ ஐ Xiaomi இந்தியா வெப்சைட்டிலிருந்து இருந்து 31,999 ரூபாய்க்கு வாங்கலாம்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile