ஸ்மார்ட்போன் ப்ரண்டான ரியல்மீ அதன் Realme 11 Pro Plus இதே வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்தது, இதன் போன் 30 ஆயிரம் விலையில் அறிமுகமாகியுள்ளது. இதே விலையில் Samsung Galaxy F54 அறிமுகம் செய்தது, இந்த இரண்டு போனிலும் சிறப்பம்சங்கள் அட்டகாசமாக கொடுக்கப்பட்டுள்ளது, மற்றும் இதில் கேமரா பிரமாதமாக கொடுக்கப்பட்டுள்ளது, இருப்பினும் இந்த போனில் அப்படி என்ன வித்தியாசம் இருக்கு பார்க்கலாம்.
Realme 11 Pro Plus ஆஸ்ட்ரல் பிளாக், சன்ரைஸ் பீஜ் மற்றும் ஒயாசிஸ் கிரீன் வண்ண விருப்பங்களில் வருகிறது.மற்றும் இந்த போனின் 8/256 வேரியண்ட்டின் ஆரம்ப விலை 27,999 ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது.
Samsung Galaxy F54 இது மேட் Blue மற்றும் Stardust Silver நிறங்களில் வருகிறது, இதில் 8GB ரேம் உடன் 128 ஸ்டோரேஜின் விலை 27,999 ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது.
Realme 11 Pro Plus யின் இந்த போனில் 6.7 இன்ச் அமோலெட் டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த போனில் டிஸ்பிளேவுடன் 120 ஹெர்ட்ஸ் அப்டேட் வீதம் மற்றும் டால்பி அட்மோஸிற்கான ஆதரவு உள்ளது.
Samsung Galaxy F54 யில் 6.7 இன்ச் HD பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே உள்ளது. 120Hz அப்டேட் வீதத்துடன் டிஸ்பிளே கொண்டுள்ளது மற்றும் இதில் ப்ரொடெக்சனுக்கு கொரில்லா க்ளாஸ் 5 கிடைக்கிறது
மீடியாடெக் டிமென்சிட்டி 7050 ப்ரோசெசர் , ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான ரியல்மி யுஐ 4.0, இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களுக்கான ஆதரவை இந்த ஃபோன் கொண்டுள்ளது.
Samsung Galaxy F54 யில் 5nm Exynos 1380 ப்ரோசெசர் உள்ளது. பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் போனில் உள்ளது.
Realme 11 Pro Plus யில் 200 மெகாபிக்ஸல் பிரைமரி கேமரா (OIS) கொடுக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த போனில் 8 மெகாபிக்ஸல் அல்ட்ரா வைட் மற்றும் 2 மெகாபிக்ஸல் மேக்ரோ சென்சார் வழங்கப்படுகிறது, மேலும் இந்த போனில் 32 மெகாபிக்ஸல் செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.
Samsung Galaxy F54 யில் 108 மெகாபிக்ஸல் பிரைமரி (OIS),கேமரா கொடுக்கப்பட்டுள்ளது மேலும் இந்த போனில் 8 மெகாபிக்ஸல் அல்ட்ரா வைட் என்கில் கொண்டுள்ளது, மற்றும் இந்த போனில் 2 மெகாபிக்ஸல் மேக்ரோ சென்சார் வழங்கப்பட்டுள்ளது, இந்த போனிலும் செல்பிக்கு 32 மெகாபிக்ஸல் கொடுக்கப்பட்டுள்ளது.
Realme 11 Pro Plus யில் 5,000mAh பேட்டரியுடன் வருகிறது , இதனுடன் இது 00W பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வருகிறது
Samsung Galaxy F54: யில் 6000mAh பேட்டரியுடன் இதில் 25W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது
ஒட்டுமொத்தமாக இந்த இரண்டு போனிலும் அசத்தலான டிஸ்பிளே மற்றும் கேமரா அமைப்புடன் வருகிறது, பேட்டரி பவர் விஷயத்தில் Samsung Galaxy F54: முன்னே இருக்கிறது, இருப்பினும் ரியல்மீ போனிலும் பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது, அதுவே Realme 11 Pro Plus யில் 200MP கேமரா கிடைக்கிறது Samsung Galaxy F54:யில் 108MP விட சிறப்பாக இருக்கிறது, ப்ரோசெசர் விஷயத்தில் ரியல்மீ முன்னே இருக்கிறது