Poco X7 Pro vs Poco X6 Pro: இந்த இரு போனில் என்ன வேறுபாடு எது பெஸ்ட் வாங்க பாக்கலாம்

Updated on 10-Jan-2025

நேற்று POCO அதன் POXO X7 Series ஸ்மார்ட்போன் இந்த சீரிஸ் கீழ் POCO X7 Pro மற்றும் POCO X7அறிமுகம் செய்யப்பட்டது. இந்த இரு போனும் ஸ்டைலிஷ் லூக்டன் அறிமுகமாகியது இந்த போனின் முந்தைய வெர்சனான Poco X6 Pro இந்த இரு போனையும் ஒப்பிட்டு இந்த போனில் இருக்கும் டிஸ்ப்ளே, கேமரா, ப்ரோசெசர் மற்றும் பேட்டரி போன்ற அம்சங்களை ஒப்பிட்டு இதில் என்ன புதுசா அப்க்ரெட் செய்யப்பட்டுள்ளது என்பதை பார்க்கலாம் வாங்க.

Poco X7 Pro vs Poco X6 Pro: டிஸ்ப்ளே

Poco X7 Pro 5G போனில் 6.73-இன்ச் 1.5K AMOLED பிளாட் டிஸ்ப்ளேவுடன் வருகிறது, இது 3200 nits ஹை ப்ரைட்னாஸ் மற்றும் 120Hz ரெப்ராஸ் ரேட்டிங்கை சப்போர்ட் செய்கிறது. அதுவே இதன் மறுபகம் Poco X6 Pro பற்றி பேசினால் இதில் 6.67 இன்ச் 1.5K AMOLED டிஸ்ப்ளே உடன் 120Hz ரெப்ராஸ் ரேட் மற்றும் 1800 நிட்ஸ் ப்ரைட்னாஸ் வழங்குகிறது

Poco X7 Pro vs Poco X6 Pro: பர்போமான்ஸ்

Poco X7 Pro போனில் MediaTek Dimansity 8400 Ultra ப்ரோசெசருடன் இதில் Poco X7 Pro 5G இன் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வழங்குகிறது, இதேபோல், Poco X6 Pro ஆனது MediaTek Dimensity 8300 அல்ட்ரா ப்ரோசெசர் கொண்டுள்ளது, இது 12GB RAM மற்றும் 512GB ஸ்டோரேஜ் உடன் வெளியிடப்பட்டது.

Poco X7 Pro vs Poco X6 Pro: கேமரா

Poco X7 Proவின் இரட்டை கேமரா செட்டிங் 50MP Sony LYT-600 OIS ப்ரைமரி சென்சார் மற்றும் 8MP அல்ட்ரா-வைட் கேமராவையும் கொண்டுள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ காளிர்காக 20எம்பி முன்பக்க கேமராவும் உள்ளது, அதுவே X6 Pro யில் இது 64MP ப்ரைமரி கேமரா, 8MP அல்ட்ராவைடு லென்ஸ் மற்றும் 2MP மேக்ரோ சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது மற்றும் செல்பிக்கு இதில் 16MP கேமராவையும் கொண்டுள்ளது. இரண்டு கேமராக்களிலும் நல்ல வீடியோக்கள் மற்றும் செல்ஃபி போன்றவற்றை எடுக்கலாம்.

Poco X7 Pro 5G VS POCO X6 Pro compared

Poco X7 Pro vs Poco X6 Pro: பேட்டரி

Poco X7 Pro ஆனது 6,550mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 90W ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது . அதே நேரத்தில், Poco X6 Pro 5000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 67W பாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது . இரண்டு போன்களிலும் சக்திவாய்ந்த பேட்டரிகள் உள்ளன.

Poco X7 Pro vs Poco X6 Pro: விலை ஒப்பீடு

Poco X7 Pro 5G இன் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி சேமிப்பு மாறுபாடு ரூ.24,999க்கு வெளியிடப்பட்டுள்ளது. அதேசமயம் அதன் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி சேமிப்பு மாறுபாட்டை ரூ.26,999க்கு வாங்கலாம், அதுவே இதன் மறுபக்கம் Poco X6 Pro 5G யின் ஆரம்ப விலை 26,999ரூபாயாக இருக்கிறது.

இதையும் படிங்க:OnePlus 13 vs OnePlus 13R இந்த இரு போனில் எது பெஸ்ட் எதை வாங்கலாம்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :