Poco X6 Vs Redmi Note 13 Pro அம்சம் ஒரே மாதுரி தான் இருக்கும் ஆனால் விலையோ இவ்வளவு வித்தியாசம்

Updated on 24-Jan-2024
HIGHLIGHTS

இந்த மாதம் ஆரம்பத்தில் , Xiaomi இந்தியா உட்பட பல உலகளாவிய சந்தைகளில் Redmi Note 13 Pro அறிமுகப்படுத்தியது

இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் பெயரில் வித்தியாசம் இருந்தாலும் இதன் அம்சங்களில் எந்த வித்தியாசமும் இல்லை

இரண்டிற்கும் இடையே உள்ள இரண்டு முக்கிய வேரியன்ட்கள் அவற்றின் ப்ரைமரி கேமராக்கள் மற்றும் பின்புற டிசைன் ஆகும்.

இந்த மாதம் ஆரம்பத்தில் , Xiaomi இந்தியா உட்பட பல உலகளாவிய சந்தைகளில் Redmi Note 13 Pro அறிமுகப்படுத்தியது. இந்த போனிற்கு பிறகு, Poco X6 இந்தியாவிலும் அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும், இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் பெயரில் வித்தியாசமாகத் தோன்றினாலும் உண்மையில் இரண்டும் ஒன்றுக்கொன்று மிகவும் ஒன்னு போலே இருக்கிறது இரண்டிற்கும் இடையே உள்ள இரண்டு முக்கிய வேரியன்ட்கள் அவற்றின் ப்ரைமரி கேமராக்கள் மற்றும் பின்புற டிசைன் ஆகும்.

Poco X6 Vs Redmi Note 13 Pro சிறப்பம்சம்

டிஸ்ப்ளே

இதன் சிறப்பம்சத்தை பற்றி பேசினால் இந்த போனில் 6.67-இன்ச் சென்டர் பஞ்ச்-ஹோல் OLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது இந்த பேனல் 1.5K ரேசளுசன் 120Hz ரெப்ரஸ் ரேட் மற்றும் 240Hz டச் செம்பளிங் ரேட் ஆகியவற்றை வழங்குகிறது. ஸ்க்ரீன் 1920Hz PWM டிம்மிங், 1800 nits ஹை ப்ரைட்னாஸ் மற்றும் டால்பி விஷன் ஆகியவற்றை சப்போர்ட் செய்கிறது.

பர்போமான்ஸ்

இந்த போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7s ஜெனரல் 2 சிப் மூலம் LPDDR5 RAM மற்றும் UFS 3.1 ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. சாப்ட்வேர் பொறுத்தவரை, இரண்டும் ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான MIUI 14 யில் இயங்குகின்றன.

கேமரா

போட்டோ எடுப்பதற்கு, இரண்டு போன்களிலும் டிரிபிள் கேமரா அமைப்பு உள்ளது, இதில் 8MP அல்ட்ராவைடு யூனிட் மற்றும் 2MP மேக்ரோ ஸ்னாப்பர் ஆகியவை அடங்கும். இது தவிர, ரெட்மி போனில் ப்ரைமரி கேமரா 200எம்பி, போகோ போனில் 64எம்பி.

பேட்டரி மற்றும் கனெக்டிவிட்டி

இந்த போனில் 5100mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, இது 67W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்யும்இது தவிர, இந்த ஸ்மார்ட்போன்களின் இணைப்பு விருப்பங்களில் டூயல் சிம், 5ஜி வைஃபை 6இ, புளூடூத் 5.2, ஜிஎன்எஸ்எஸ் மற்றும் யுஎஸ்பி டைப்-சி ஆகியவை அடங்கும். இவற்றில் நீங்கள் 3.5mm ஹெட்ஃபோன் ஜாக், Dolby Atmos ஆதரவுடன் இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், IR பிளாஸ்டர் மற்றும் இன்-ஸ்கிரீன் பிங்கர்ப்ரின்ட் சென்சார் ஆகியவற்றைப் பெறலாம்

Poco X6 Vs Redmi Note 13 Pro விலை தகவல்

இந்தியாவில் Poco X6 5G விலை 8ஜிபி + 256ஜிபி மெமரி உள்ளமைவுக்கு ரூ.21,999 இல் தொடங்குகிறது. அதேசமயம் அதன் ஹை எண்டு வேரியன்ட் 12ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் யின் விலை ரூ.24,999க்கு வருகிறது.

மறுபுறம், ரெட்மி ஃபோன்களின் விலை ரூ. 25,999 யில் தொடங்குவது மட்டுமல்லாமல், அதன் அடிப்படை வேரியன்ட் 128 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 8 ஜிபி ரேம் மட்டுமே. 512 ஜிபி வெர்சன் கூட இல்லை. இதன் 8ஜிபி + 256ஜிபி மற்றும் 12ஜிபி + 256ஜிபி மெமரி வகைகள் முறையே ரூ.27,999 மற்றும் ரூ.29,999க்கு வருகின்றன.

இதையும் படிங்க:Airtel, Jio: ஒரே ஒரு ரீச்சர்ஜில் குடும்பத்துக்கே நன்மை கிடைக்கும்

அதிக மெகாபிக்சல் கேமராவைப் பற்றி நீங்கள் நினைக்கவில்லை என்றால், விலையைப் பொறுத்தவரை Poco போன் ரெட்மியை விட மிகச் சிறந்ததாக இருக்கிறது. இருப்பினும், Poco ஆன்லைனில் மட்டுமே இருக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும், அதேசமயம் Redmi போனை ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் வாங்கலாம்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :