POCO M6 Pro vs Itel P55:இந்தியாவில் மிக குறைந்த விலை 5G போன் எது Best
இந்தியாவின் குறைந்த விலை 5G ஸ்மார்ட்போனான Itel P55 5G ஐ அறிமுகப்படுத்தியது.
சமீபத்தில் POCO M6 Pro 5G போனும் அதே விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது
இந்த அறிக்கையில் இரண்டு போன்களின் சிறப்பம்சங்களில் எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம்.
Itel செவ்வாயன்று இந்தியாவின் குறைந்த விலை 5G ஸ்மார்ட்போனான Itel P55 5G ஐ அறிமுகப்படுத்தியது. ரூ.10 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் MediaTek டிமன்சிட்டி 6080 ப்ரோசெச்சர்மற்றும் 128 GB ஸ்டோரேஜ் உள்ளது. சமீபத்தில் POCO M6 Pro 5G போனும் அதே விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த போனில் மிக சிறந்த அம்சங்கள் உள்ளன. நீங்களும் குறைந்த விலையில் 5G போனை வாங்க விரும்பினால், இந்த அறிக்கை உங்களுக்கானது. இந்த அறிக்கையில் இரண்டு போன்களின் சிறப்பம்சங்களில் எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம்.
POCO M6 Pro 5G vs Itel P55 5G: டிஸ்ப்ளே
போக்கோ M6 Pro 5G யில் 90Hz ரெப்ரஸ் ரேட் 6.79 இன்ச் LCDடிஸ்ப்ளே உள்ளது. அதேசமயம் itel P55 ஆனது 6.6 இன்ச் HD + டிஸ்ப்ளே, இது 90 ஹெர்ட்ஸ் ரெப்ரஸ் ரேட் மற்றும் (1600×720 பிக்சல்கள்) ரேசளுசன் கொண்டது.
POCO M6 Pro 5G vs Itel P55 5G: ப்ரோசெசர்
போக்கோ Pro 5G போனின் ப்ரோசெசர் பற்றி பேசினால், snapdragon 4 Gen 2 ப்ரோசெசர் கொடுக்கப்பட்டுள்ளது, இதில் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வரை ஸ்டோரேஜ் கிடைக்கிறது, மேலும் இதில் மவுண்டேட் பிங்கர்ப்ரின்ட் சென்சார் இருக்கிறது, இது தவிர, ஐஆர் பிளாஸ்டர் மற்றும் ஹெட்போன் ஜாக் ஆகியவையும் உள்ளன. அதுவே Itel P55 5G ஆனது MediaTek Dimensity 6080 செயலி, 8 GB RAM மற்றும் 128 GB வரையிலான ஸ்டோரேஜை கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான ItelOS UI இதனுடன் கிடைக்கிறது. பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனரும் உள்ளது.
POCO M6 Pro 5G vs Itel P55 5G கேமரா
Poco M6 Pro 5G மற்றும் Itel P55 5G ஆகியவை இரட்டை பின்புற கேமராக்களைக் கொண்டுள்ளன. Poco போனில் 50 மெகாபிக்சல் ப்ரைமரி லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் செகண்டரி லென்ஸ் உள்ளது. அதே நேரத்தில், 50 மெகாபிக்சல் முதன்மை லென்ஸ் மற்றும் இரண்டாம் நிலை AI லென்ஸும் itel உடன் கிடைக்கிறது. இரண்டு போன்களிலும் செல்ஃபிக்காக 8 மெகாபிக்சல் சென்சார் உள்ளது.
POCO M6 Pro 5G vs Itel P55 5G பேட்டரி
போக்கோ 5G யில் 5000mAhபேட்டரியுடன் 18W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் வருகிறது , 22.5W சார்ஜர் பாக்ஸில் கிடைக்கிறது, அதுவே Itel P55 5G யில் அதே 5000 mAh பேட்டரி உடன் 18W பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வருகிறது.
ஒட்டுமொத்தமாக, விலையைக் கருத்தில் கொண்டு, இரண்டு போன்களும் பல சக்திவாய்ந்த அம்சங்களைக் கொண்டுள்ளன. POCO M6 Pro 5G வேகமான சார்ஜிங், செகண்டரி கேமரா, பெரிய டிஸ்ப்ளே மற்றும் ப்ராசசர் போன்றவற்றில் முன்னணியில் உள்ளது. இதில் ஐஆர் பிளாஸ்டரும் கிடைக்கிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile