POCO F6 5G VS Realme GT 6T: இதில் எந்த போன் நமக்கு மன திருப்தியை தரும்

Updated on 24-May-2024
HIGHLIGHTS

POCO F6 5G மற்றும் Realme GT 6T போனை பற்றி நாம் பேசினால், இந்த இரண்டு போன்களும் மிட் ரேஞ்சில் வருகிறது

இந்தியாவில் இந்த போன்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது

POCO F6 5G ஸ்மார்ட்போன் Realme GT 6T உடன் ஒப்பிட்டு இதில் பெஸ்ட் என்பதை பார்க்கலாம்.

POCO F6 5G மற்றும் Realme GT 6T ஸ்மார்ட்போன்களைப் பற்றி நாம் பேசினால், இந்த இரண்டு போன்களும் மிட் ரேஞ்சில் வருகிறது இது பல அற்புதமான அம்சங்களுடன் வருகின்றன. இந்தியாவில் இந்த போன்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த இரண்டு போன்களையும் இங்கே ஒப்பிட்டுப் பார்க்கப் போகிறோம், POCO F6 5G ஸ்மார்ட்போன் Realme GT 6T உடன் ஒப்பிட்டு இதில் பெஸ்ட் என்பதை பார்க்கலாம்.

POCO F6 5G VS Realme GT 6T: டிசைன்

POCO F6 ஸ்மார்ட்போன் டிசைன் பற்றி பேசினால், இது பார்க்க ஸ்லிமாக இருக்கிறது இதன் திக்னஸ் 7.8mm ஆகும், இருப்பினும் Realme GT 6T பற்றி பேசினால், இது 8.65mm ஸ்லிம்மாக இருக்கிறது, POCO போனின் எடை 179 கிராம், இது தவிர Realme GT 6T ஸ்மார்ட்போன் 191 கிராம் எடையுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இரண்டு போன்களும் கிளாஸ் பின்புறத்துடன் மெட்டல் பிரேமுடன் உள்ளன.

Realme GT 6T ஸ்மார்ட்போன் மிகவும் தனித்துவமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது, இதில் நீங்கள் கேமரா லென்ஸிற்கான நானோ மிரர் பினிஷ் மற்றும் மிஸ்டி ஏஜி செயல்முறையையும் பெறுவீர்கள். இருப்பினும், POCO F6 வழக்கமான டிசைனை வழங்குகிறது, இப்பொழுது இதன் டியுரபிளிட்டி பற்றி பேசினால், Realme GT 6T வெற்றி பெறுகிறது, இது தவிர இந்த ஃபோன் IP65 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் பவரை கொண்டுள்ளது. ஒப்பிடுகையில், POCO ஃபோன்கள் IP 64 சர்டிபெக்சன் வழங்குகிறது.

POCO F6 5G VS Realme GT 6T

POCO F6 5G VS Realme GT 6T: டிஸ்ப்ளே

இப்பொழு இந்த இரு போனின் டிஸ்ப்ளே பற்றி பேசினால், டிஸ்ப்ளே யின் அடிபடையில் POCO F6 5G மற்றும் Realme GT 6T ஆகியவை எவ்வாறு வேறுபடுகின்றன. POCO F6 5G ஸ்மார்ட்போனில் 6.67-இன்ச் 1.5K AMOLED டிஸ்ப்ளே உள்ளது, இந்த டிஸ்ப்ளே 120Hz ரெப்ராஸ் ரேட்டுடன் வருகிறது, இது தவிர, Realme GT 6T பற்றி பேசினால், இந்த ஃபோனில் 6.78-இன்ச் 1.5K LTPO AMOLED டிஸ்ப்ளே உள்ளது 120Hz ரெப்ராஸ் ரெட்டின் டிஸ்ப்ளே பர்போம்ன்ஸ் வழங்குகிறது.

இருப்பினும், இன்றுவரை ப்ரைட்னாஸ் டிஸ்ப்ளே Realme GT 6T இல் கிடைக்கிறது, இது 6000 nits இன் ஹை ப்ரைட்னசில் வருகிறது, இருப்பினும் POCO F6 5G 2400 nits யின் ப்ரைட்னாஸ் உடன் கூடிய ஸ்க்ரீனை கொண்டுள்ளது.

பர்போமான்ஸ்

இங்கு நாம் POCO F6 5G ப்ரோசெசர் பற்றி பேசினால், இதில் ஸ்னப்ட்ரகன் 8s Gen 3 ப்ரோசெசர் வழங்கப்படுகிறது இது ஒரு பாப்புலர் ப்ரோசெசர் ஆகும் இது ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 3க்குக் கீழே விழும். இந்த காரணத்திற்காக இந்த போனில் சிறந்த பர்போம்ன்சை எதிர்பார்க்கலாம்.

இருப்பினும் நாம் Realme GT 6T பற்றி பேசினால், இந்த போனில் ஸ்னப்ட்ரகன் 7+ Gen 3 ப்ரோசெசர் வழங்கப்படுகிறது, இருப்பினும், ப்ராசஸர் Snapdragon 8s Gen 3 இன் செயல்திறனைப் பொருத்த முடியாமல் போகலாம், ஆனால் இந்த போனில் இருந்து நல்ல பர்போம்ன்சை எதிர்பார்க்கலாம்.

Realme GT 6T

இந்த போனின் சாப்ட்வேர் பற்றி பேசினால், இந்த இரண்டு போன்கலுமே Android 14 சப்போர்ட் வழங்கப்படுகிறது, அதுவே POCO F6 பற்றி பேசினால், இந்த போனில் Xiaomi யின் HyperOS UI வழங்கப்படுகிறது,, இது தவிர, Realme GT 6T ஸ்மார்ட்போனில் Realme UI 5 ஆதரிக்கப்படுகிறது. இரண்டு போன்களும் 3 வருட ஆண்ட்ராய்டு அப்டேட்களையும் 4 வருட செக்யூரிட்டி அப்டேட்களையும் வழங்கும் என்று கூறப்படுகிறது.

கேமரா

இந்த இரு போனின் கேமரா பற்றி பேசுகையில் POCO F6 யில் POCO F6 யில் OIS சப்போர்டுடன் 50 மேகபிக்சல் சோனி IMX882 ப்ரைமரி கேமரா 8 மேகபிக்சல் சோனி IMX355 அல்ட்ராவைட் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது, முன்பக்கத்தில் 20 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது

Poco-F6 5G

அதுவே நாம் Realme GT 6T பற்றி பேசினால் இதில் 50-மெகாபிக்சல் ப்ரைம் கேமராவைக் கொண்டுள்ளது, இது Sony LYT-600 சென்சார் ஆகும். இது ஆப்டிகல் இமேஜ் உறுதிப்படுத்தலை சப்போர்ட் செய்கிறது இது தவிர, இது 8 எம்பி அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸைக் கொண்டுள்ளது. செல்ஃபிக்கு, 32 மெகாபிக்சல் சோனி IMX615 சென்சார் Realme GT 6T யில் கிடைக்கிறது.

பேட்டரி

இந்த POCO ஸ்மார்ட்போனில் 120W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் 5000mAh பேட்டரி உள்ளது. நிறுவனம் பாக்சுடன் 90W சார்ஜரை வழங்குகிறது. அதுவே இந்த போனில் பேட்டரி பற்றி பேசினால் இதில் 5,500mAh பேட்டரி உடன் 120W சுப்பர்வூப் சார்ஜிங் சப்போர்ட் கொண்டுள்ளது

# Realme GT 6T டாப் அம்சம்

விலை ஒப்பிட்டு

POCO F6 போனின் விலை பற்றி பேசினால், இந்த போனின் 8GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் மாடலின் விலை 29,999ரூபாய் ஆரம்ப வியக இருக்கும் போனின் இன்னும் பல மாடல்கள் உள்ளன. வெவ்வேறு விலைகளில் வரும்.

இதை தவிர Realme GT 6T பற்றி பேசினால், இந்த போனில் 8GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் மாடலின் விலை 30,999 ரூபாய் ஆரம்பமாக இருக்கிறது இங்குள்ள விலையைப் பார்க்கும்போது, ​​மலிவு விலையில் நல்ல அம்சங்களுடன் கூடிய POCO F6 ஸ்மார்ட்போன் கிடைக்கும் என்று கூறலாம்.

இதையும் படிங்க POCO F6 பல சூப்பர் அம்சங்களுடன் அறிமுகம் இதன் டாப் அம்சங்கள் பாருங்க

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :