Oppo Find X8 Pro vs Vivo X200 Pro: இந்த இரண்டு ப்ளாக்ஷிப் போனில் எது சூப்பர் ?

Oppo Find X8 Pro vs Vivo X200 Pro: இந்த இரண்டு ப்ளாக்ஷிப் போனில் எது சூப்பர் ?

சமிபத்தில் பல ப்ளாக்ஷிப் இரண்டு சூப்பர் மாடல் இருக்கிறது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் கீழ் Oppo Find X8 Pro மற்றும் Vivo X200 Pro ஆகியவை இதில் அடங்கியுள்ளது, இந்த இரண்டு போனும் இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்படும் எனத்தகவல் வெளிவந்துள்ளது. இந்த இரண்டு போனும் மிக சிறந்த பர்போமான்ஸ் வழங்குகிறது, இரண்டு போன்களும் பிரீமியம் அனுபவத்தை அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இரண்டும் வலுவான விவரக்குறிப்புகள் மற்றும் நிறுவனங்கள் தங்கள் கேமரா அமைப்புகளை பெரிதும் சந்தைப்படுத்துகின்றன.

அதனால்தான் இந்த இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களின் ஒப்பீட்டை உங்களுக்காக இங்கு கொண்டு வந்துள்ளோம். Oppo Find X8 Pro மற்றும் Vivo X200 Pro ஆகியவற்றின் விலை, பேட்டரி, கேமரா, டிசைன் , அம்சங்கள் போன்ற துறைகளை இங்கே ஒப்பிட்டுப் எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம்.

Oppo Find X8 Pro vs Vivo X200 Pro: டிஸ்ப்ளே

  • Oppo Find X8 Pro யில் 6.7-இன்ச் AMOLED டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது, அது 120Hz ரெப்ராஸ் ரேட் மற்றும் 2K ரேசளுசன் சப்போர்ட் செய்கிறது.
  • அதுவே இதன் மறுபக்கம் Vivo X200 Pro யில் 6.78-இன்ச் AMOLED டிஸ்ப்ளே இருக்கிறது மற்றும் இதில் 120Hz ரெப்ராஸ் ரேட் மற்றும் 2K ரேசளுசன் சப்போர்ட் செய்கிறது மேலும் இந்த இரு போனிலும் HDR10+ சர்டிபை மற்றும் 4500 nits யின் பீக் ப்ரைட்னஸ் சப்போர்ட் வழங்குகிறது. மேலும் Oppo Find X8 Pro யில் Dolby Vision சப்போர்ட் வழங்குகிறது

Oppo Find X8 Pro vs Vivo X200 Pro:பர்போமான்ஸ்

Oppo Find X8 Pro மற்றும் Vivo X200 Pro இந்த இரண்டு போனிலும் MediaTek Dimensity 9400 சிப்செட்டில் வேலை செய்கிறது, மேலும் இதில் Immortalis-G925 GPU உடன் வருகிறது இதை தவிர இதில் 3nm ப்ரோசெசர் நிறுவனம் மார்கெட்டில் கொண்டு வருகிறது, மேலும் இந்த இறந்து போனிலும் UFS 4.0ஸ்டோரேஜ் இருக்கிறது. இந்த இரண்டு போனிலும் 16GB வரையிலான ரேம் மற்றும் 1TB வரையிலான ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது.

Oppo Find X8 Pro vs Vivo X200 Pro:கேமரா

Oppo Find X8 Pro யில் நான்கு கேமரா செட்டப் வழங்கப்படுகிறது, அதுவே Vivo X200 Pro யில் மூன்று கேமரா செட்டப் வழங்கப்படுகிறது, இதில் 50MP மெயின் கேமரா வழங்கப்படுகிறது செகண்டரி கேமரா இதில் டெலிபோட்டோ சென்சார் 200MP இருக்கிறது மற்றும் இதில் 50MP அல்ட்ராவைட் கேமரா லென்ஸ் இருக்கிறது, இந்த இரண்டு போனிலும் செல்பிக்கு 32MP முன் கேமரா வழங்கப்பட்டுள்ளது.

Oppo Find X8 Pro vs Vivo X200 Pro: பேட்டரி மற்றும் கனெக்டிவிட்டி

  • Oppo Find X8 Pro யில் 5,910mAh பேட்டரி வழங்குகிறது இதனுடன் இது 80W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது, இதில் 50W வயர்லஸ் சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது
  • அதுவே இதன் மறுபக்கம் Vivo X200 Pro யில் 6,000mAh பேட்டரி உடன் 90W பாஸ்ட் வயர்ட் சார்ஜிங் மற்றும் 30W வயர்லஸ் சார்ஜிங் வச்கதி வழங்கப்படுகிறது.

இந்த இரண்டு போனிலும் Wi-Fi 7, Bluetooth 5.4, NFC மற்றும் Type-C (Oppo போனில் 3.1 மற்றும் Vivo யில் 3.2) அடங்கியுள்ளது மற்றும் இந்த இரண்டு போனிலும் ஸ்டீரியோ ஸ்பீக்கர் இருக்கிறது. ஆனால் Vivo போனில் Hi-Res ஆடியோ சப்போர்ட் இருக்கிறது. Oppo மற்றும் Vivo ஃபோன்கள் இரண்டும் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன, ஆனால் Vivo அல்ட்ராசோனிக் மற்றும் Oppo ஆப்டிகல் சென்சார் கொண்டுள்ளது.

Oppo Find X8 Pro vs Vivo X200 Pro விலை

இரண்டு ஸ்மார்ட்போன்களும் இந்தியாவில் இன்னும் வெளியிடப்படவில்லை. Oppo Find இந்தியாவில் அவற்றின் விலை குறித்த தகவல்கள் தற்போது வெளியாகவில்லை.

Oppo Find X8 Pro சீனாவில் இதன் விலை CNY 5,299 (62,600ரூபாய்) சுமார் இருக்கும். அதுவே Vivo X200 Pro சீனாவில் ஆரம்ப விலை CNY 5,999 (சுமார் 70,000ரூபாய் ) மதிப்பு இருக்கும்.

இதையும் படிங்க :Google Pixel 9 Pro XL vs Samsung Galaxy S24 Ultra: எந்த ஆண்ட்ரோய்ட் ப்ளாக்ஷிப் போன் பெஸ்ட்?

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo