சமிபத்திய ப்ளாக்ஷிப் சந்தையில் இரண்டு ப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடல் கொண்டு வந்துள்ளது இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது இதில் Oppo Find X8 Pro மற்றும் Vivo X200 Pro ஏன் இரண்டு போன்கள் அடங்கும்.இரண்டு போன்களும் பிரீமியம் அனுபவத்தை அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இரண்டும் வலுவான சிறப்பம்சங்கள் மற்றும் நிறுவனங்கள் தங்கள் கேமரா செட்டப் ஆகியவை மிக சிறப்ப்னதகவே உள்ளது. Oppo Find X8 Pro மற்றும் Vivo X200 Pro இந்த இரண்டு போனையும் ஒப்பிட்டு எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம் வாங்க.
Oppo Find X8 Pro யில் 6.7-இன்ச் AMOLED டிஸ்ப்ளே வழங்குகிறது, இதில் 120Hz ரெப்ராஸ் ரேட் மற்றும் 2K ரெசளுசன் சப்போர்ட் வழங்குகிறது. விவோ இரண்டு போன்களும் HDR10+ சான்றளிக்கப்பட்டவை மற்றும் 4500 nits இன் உச்ச பிரகாசத்தை ஆதரிக்கின்றன. இருப்பினும், Oppo Find X8 Pro Dolby Vision சப்போரடையும் கொண்டுள்ளது.
Oppo Find X8 Pro மற்றும் Vivo X200 Pro யின் இந்த இரண்டு போனிலும் MediaTek Dimensity 9400 சிப்செட் வழங்கப்படுகிறது, மேலும் இதில் Immortalis-G925 GPU உடன் வருகிறது. நிறுவனம் இந்த 3nm செயலியை கேமிங்கிற்காக சந்தைப்படுத்துகிறது. இரண்டு சாதனங்களும் UFS 4.0 சேமிப்பகத்தைக் கொண்டுள்ளன. இரண்டு போன்களும் 16ஜிபி ரேம் மற்றும் 1டிபி வரை சேமிப்பக விருப்பங்களுடன் வருகின்றன.
இந்த போனின் கேமரா பற்றி பேசினால், குவாட் பின் கேமரா உடன் வருகிறது, மேலும் இதில் ஆப்டிகல் ஸ்டேப்லைசெசன் சப்போர்ட் கொண்டுள்ளது. இந்த போனில் அமைப்பில் நான்கு 50MP சென்சார்கள் உள்ளன. அதே நேரத்தில், Vivo X200 Pro மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இதில் 50MP ப்ரைம் கேமரா சென்சார், 200MP டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் 50MP அல்ட்ராவைட் லென்ஸ் உள்ளது. இரண்டு போன்களும் 32MP செல்ஃபி கேமராவுடன் வருகின்றன. விவோ ஃபோன் முன்புறத்தில் அல்ட்ராவைட் (20 mm) லென்ஸ் உள்ளது.
Oppo Find X8 Pro ஆனது 5,910mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 80W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இது 50W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவையும் கொண்டுள்ளது. Vivo X200 Pro ஆனது 6,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 90W வேகமான வயர்டு சார்ஜிங் மற்றும் 30W வயர்லெஸ் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது .
இந்த போனின் கனெக்டிவிட்டி பற்றி பேசினால், இந்த இரண்டு போனிலும் Wi-Fi 7, Bluetooth 5.4, NFC மற்றும் Type-C (Oppo போனில் 3.1 மற்றும் Vivo யில் 3.2) அடங்கியுள்ளது, மேலும் இந்த இரண்டு போனிலும் ஸ்டீரியோ ஸ்பீக்கர் இருக்கிறது, ஆனால் Vivo போன்களில் Hi-Res ஆடியோ சப்போர்ட் உள்ளது. Oppo மற்றும் Vivo ஃபோன்கள் இரண்டும் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன, ஆனால் Vivo அல்ட்ராசோனிக் மற்றும் Oppo ஆப்டிகல் சென்சார் கொண்டுள்ளது.
Oppo Find X8 Pro சிங்கிள் வேரியன்ட் 16GB + 512GB யின் விலை ரூ,99,999 யில் வருகிறது. இந்த போனின் விற்பனை டிசம்பர் 3, 2024 நடைபெறும் நீங்கள் இதை Flipkart, OPPO e-store மற்றும் பல ரீடைளர் கடைகளில் வாங்கலாம் மேலும் இதில் கஸ்டமர்கள் 10% இன்ஸ்டன்ட் டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது, சீனாவில் ivo X200 Pro இன் ஆரம்ப விலை CNY 5,999 (சுமார் ரூ. 70,000). இந்தியாவில் அவற்றின் விலை குறித்த தகவல்கள் தற்போது வெளியாகவில்லை.
இதையும் படிங்க: Vivo Y300 5G vs Nothing Phone (2a): 25ஆயிரம விலை ரேஞ்சில் வரும் இரு போனில் எது பெஸ்ட்