Oppo F25 Pro 5G Vs Honor X9b 5G : இந்த இரு லேட்டஸ்ட் போனில் எது பெஸ்ட்?

Updated on 05-Mar-2024
HIGHLIGHTS

Oppo அதன் லேட்டஸ்ட் மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன் மாடலான Oppo F25 Pro 5G இந்தியாவில் கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்டது

இந்த போன் இரண்டு ஸ்டோரேஜ் வேரியண்டில் இருக்கும்

Honor X9b 5Gக்கு இந்த ஸ்மார்ட்போன் கடும் போட்டியை அளிக்கிறது.

ஒப்போ அதன் லேட்டஸ்ட் மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன் மாடலான Oppo F25 Pro 5G இந்தியாவில் கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்டது, இந்த போன் இரண்டு ஸ்டோரேஜ் வேரியண்டில் இருக்கும், இதன் விலை 23,999ரூபாயிலிருந்து ஆரம்பமாகும், பிப்ரவரியில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட Honor X9b 5Gக்கு இந்த ஸ்மார்ட்போன் கடும் போட்டியை அளிக்கிறது.

Honor இந்த போன் சிங்கிள் வேரியண்டில் இருக்கிறது மற்றும் இதன் விலை 25,999ரூபாய்க்கு வைக்கப்பட்டது இந்த இரு போன்களின் விலையும் ஒரே ரேஞ்சில் தான் இருக்கிறது, இருப்பினும் இதில் ஒரு சில சியரப்ப்ம்சங்களும் ஒன்றுடன் ஒத்துபோகிறது, ஆனால் இதிலிருக்கும் ஒரு சில வித்தியாசங்கள் என்ன என்பதை பார்த்து இதில் எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம்.

Oppo F25 Pro 5G Vs Honor X9b 5G: Display

ஒப்போவின் இந்த போனில் 6.7-இன்ச் முழு HD+ டிஸ்ப்ளே உடன் வருகிறது, இதில் 1080 x 2412 பிக்சல் ரேசளுசன் 120Hz ரெப்ராஸ் ரேட் வழங்குகிறது இதற்கு பாண்டா கிளாஸ் பாதுகாப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. அதுவே Honor X9b யில் 6.78 இன்ச் FHD+ டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது, இதன் ரேச்ளுசன் 1200 x 2652 பிக்சல் ரேசளுசன் இருக்கிறது இது 120Hz ரெப்ராஸ் ரேட் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

#Oppo F25 Pro 5G Vs Honor X9b 5G

Oppo F25 Pro 5G Vs Honor X9b 5G: Performance

ஒப்போ F25 Pro ஸ்மார்ட்போனில் மீடியாடேக் டிமன்சிட்டி 7050 சிப்செட் கொண்டுள்ளது இதில் 8GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் வரையிலான சப்போர்ட் வழங்குகிறது., அதுவே honor போனில் Qualcomm Snapdragon 6 Gen 1 ப்ரோசெசர் இருந்து அதன் பவரை வழங்குகிறது மேலும் இது 8GB RAM உடன் இணைந்து 256GB ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. சாப்ட்வேர் பொறுத்தவரை, சமீபத்திய ஒப்போ போன் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ColorOS 14 பிளாட்பார்மில் இயங்குகிறது. ஹானர் X9b ஆண்ட்ராய்டு 13 உடன் MagicOS 7.2 யில் வேலை செய்கிறது.

Honor X9b 5G

Oppo F25 Pro Vs Honor X9b: Camera

இந்த இரு போனின் கேமரா பற்றி பேசுகையில் ஒப்போ போனின் பின்புறத்தில் மூன்று கேமரா செட்டப் வழங்கப்படுகிறது இதில் 64MP ப்ரைம் சென்சார், 8MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2MP மேக்ரோ கேமரா ஆகியவை அடங்கும்.செல்பி மற்றும் விடியோ காலுக்கு இதில் 32MP முன் கேமரா இருக்கிறது, அதுவே நாம் honor போனை பற்றி பேசினால் இதிலும் பின்புறத்தில் மூன்று கேமரா இருக்கிறது 108MP ப்ரைம் கேமரா, 5MP அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 2MP மேக்ரோ ஷூட்டர் ஆகியவற்றை வழங்குகிறது. அதன் செல்ஃபி ஷூட்டரின் தெளிவுத்திறன் ஒப்போவின் பாதியாக உள்ளது, அதாவது 16MP மட்டுமே இருக்கிறது .

Oppo F25 Pro 5G Camera

Oppo F25 Pro Vs Honor X9b: Battery and others

இந்த போனின் பேட்டரி பற்றி பேசினால், ஒப்போ மற்றும் ஹோனர் போனில் 5000mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது ஒப்போவில் 67W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது அதுவே ஹோனரில் 25W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் மட்டுமே வழங்கப்படுகிறது இது தவிர, F25 Pro மாடல் IP67 மதிப்பீட்டைக் கொண்ட மிக மெல்லிய ஸ்மார்ட்போன் ஆகும், மேலும் இது இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாரையும் வழங்குகிறது. ஒப்பிடுகையில், Honor X9b தூசி மற்றும் நீர் பாதுகாப்பிற்கான IP63 மதிப்பீட்டைக் கொண்டுள்ளது. இது மட்டுமின்றி, ரூ.2,999 மதிப்பிலான Honor Protect இன் இலவச மொபைல் செக்யூரிட்டி திட்டமும் இந்த போனுடன் கிடைக்கிறது.

இதையும் படிங்க: UPI சேவையை அறிமுகம் செய்த Flipkart மற்ற UPI சேவை உடன் மோதும்

Oppo F25 Pro Vs Honor X9b: Price

Oppo F25 Pro இன் 8GB + 128GB அடிப்படை ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.23,999 ஆகவும், 8GB + 256GB எடிசன் ரூ.25,999 ஆகவும் வெளியிடப்பட்டுள்ளது. ஒப்பிடுகையில், Honor X9b யின் சிங்கிள் 8GB + 256GB வேரியன்ட் ரூ.25,999க்கு வருகிறது. ஒப்போ ஃபோனை லாவா ரெட் (பளபளக்கும் சாய்வு டிசைன் மற்றும் ஓஷன் ப்ளூ (அலை போன்ற அமைப்பு) ஆகியவற்றில் வாங்கலாம். மறுபுறம், ஹானர் ஸ்மார்ட்போன் சன்ரைஸ் ஆரஞ்சு மற்றும் மிட்நைட் பிளாக் வண்ண விருப்பங்களில் வாங்குவதற்கு கிடைக்கிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :