OnePlus Pad 2 vs OnePlus Pad: இதில் என்ன புதுசா இருக்கு
OnePlus இறுதியாக அதன் சம்மர் லான்ச் நிகழ்வை அறிவித்துள்ளது
OnePlus அதன் முதல் டேப்லெட்டை கடந்த ஆண்டு பிப்ரவரியில் OnePlus 11 உடன் அறிமுகப்படுத்தியது
OnePlus இப்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட OnePlus Pad 2 உடன் என்ன மாற்றங்களை வழங்குகிறது
OnePlus இறுதியாக அதன் சம்மர் லான்ச் நிகழ்வை அறிவித்துள்ளது, சீன பிராண்ட் சமீபத்திய Nord 4, OnePlus Pad 2, Watch 2R மற்றும் Nord Buds 3 Pro ஆகியவற்றை வெளியிட்டது. இந்த ஆர்டிக்களில் நான் பிளாக்ஷிப் டேப்லெட்டைப் பற்றி பேசப் போகிறேன் மற்றும் அதனுடன் என்ன அப்டேட் வழங்குகிறது OnePlus அதன் முதல் டேப்லெட்டை கடந்த ஆண்டு பிப்ரவரியில் OnePlus 11 உடன் அறிமுகப்படுத்தியது. எனவே, OnePlus இப்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட OnePlus Pad 2 உடன் என்ன மாற்றங்களை வழங்குகிறது என்பதை பற்றி பார்க்கலாம் வ்வாங்க
OnePlus Pad 2 vs OnePlus Pad என்ன அப்டேட் இருக்கிறது
முதலில் அதன் டிசைனிலிருந்து ஆரம்பித்தல் oneplus யின் அதன் Pad 2 கனமாகவும் மற்றும் இதன் திக்னஸ் ஒரே மாதிரியாகவே இருக்கிறது அது பார்க்க அழகாக இருக்கிறது , இதன் எடை 584 கிராம் மற்றும் 6.49 mm திக்னஸ் கொண்டது, அதேசமயம், ஒன்பிளஸ் பேட் 552 கிராம் எடையும் 6.5 mm திக்னஸ் கொண்டது. இருப்பினும், OnePlus Pad 2 ஆனது OnePlus Pad ஐ விட பெரிய டிஸ்ப்லேவை கொண்டுள்ளது. பார்க்க, இந்த டேப்லெட் அதன் முன்னோடிக்கு மிகவும் ஒத்திருக்கிறது. இந்த டேப்லெட்டின் பின்புறத்தின் நடுவில் சிங்கிள் கேமரா ரிங் உள்ளது.
இதன் ஹார்ட்வேர் பற்றி பேசும்போது OnePlus Pad 2 யில் லேட்டஸ்ட் Snapdragon 8 Gen 3 SoC பவர் கொடுக்கப்பட்டுள்ளது, அதாவது இதன் அர்த்தம் இதில் AI அம்சம் கொண்டுள்ளது OnePlus பேட் போலல்லாமல். இது AI எரேசர் 2.0, சிறிய கட்அவுட் 2.0, AI டூல்பாக்ஸ் ரெக்கார்டிங் சம்மரி மற்றும் ஸ்கேன் ஆவணம் போன்ற AI அம்சங்களைக் கொண்டுள்ளது.
இதில் இது 12.1 இன்ச் IPS LCD டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது, இது 144 ஹெர்ட்ஸ் ரெப்ராஸ் ரேட் டால்பி விஷன் மற்றும் 3K ரேசளுசனை சப்போர்ட் செய்கிறது, OnePlus Pad ஆனது 11.61-இன்ச் சைஸ் மற்றும் 2K ரேசளுசன் கொண்டது தவிர அதே டிஸ்ப்ளேவுடன் வருகிறது. ஒன்பிளஸ் பேடில் உள்ள 4 ஸ்பீக்கர்களில் இருந்து ஒன்பிளஸ் பேட் 2 யில் இப்போது 6 ஸ்பீக்கர்களுடன் ஸ்பீக்கர் சிஸ்டம் உடன் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.
OnePlus அதன் பேட்டரியில் எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லை, இந்த இரு டேப்லட்டிலும் 9510mAh பேட்டரியுடன் 67-W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்டுள்ளது
இதையும் படிங்க: Upcoming Smartphones:சூப்பர் அசத்தலான போன்கள் ஜூலை 2024 லிஸ்ட்
இதன் விலை என்ன ?
அனைத்து அப்டேட்களுடன் விலையும் அப்டேட் செய்யப்பட்டு வருகிறது. ஒன்பிளஸ் நிறுவனம் பேட் 2 ரூ.39,999 ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. மறுபுறம், OnePlus பேட் ரூ.37,999 ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile