Oneplus 11R Vs Pixel 7a போனில் எது பெஸ்ட் இந்த 4 விஷயத்தில் Pixel 7a சிறந்தது ஏன் தெரியுமா?

Updated on 31-May-2023
HIGHLIGHTS

கூகுள் அதன் வருடாந்திர I/O 2023 நிகழ்வில் அதன் மிகவும் குறைந்த விலை போனனா Pixel 7a அறிமுகம் செய்தது

Pixel 7a யில் புதிய கேமராவுடன் புதிய ப்ரோசெசர் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங்ம் கொடுக்கப்பட்டுள்ளது

Oneplus 11R வருகிறது, ஆனால் Pixel 7a விட Oneplus 11R எவ்வளவு சிறப்பானது, சரி வாங்க பாக்கலாம்.

கூகுள் அதன் வருடாந்திர  I/O 2023  நிகழ்வில் அதன் மிகவும் குறைந்த விலை போனனா Pixel 7a  அறிமுகம் செய்தது. இந்த போனில் Pixel 7a  உடன் Pixel 7 மற்றும் Pixel 7 Pro போன்ற டிசைன் வழங்குகிறது. Pixel 7a யில் புதிய  கேமராவுடன் புதிய ப்ரோசெசர் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங்ம் கொடுக்கப்பட்டுள்ளது, இந்த போனை 40 ஆயிரம்  விலையில அறிமுகம் செய்யப்பட்டது, அதே விலையில் தான் Oneplus 11R  வருகிறது, ஆனால்  Pixel 7a விட Oneplus 11R எவ்வளவு சிறப்பானது, சரி வாங்க பாக்கலாம்.

ப்ளாக்ஷிப் கேமரா.

Pixel 7a  உடன் 64MP  பிரைமரி கேமரா மற்றும் 13MP அல்ட்ரா வைட்  கேமரா வழங்கப்படுகிறது. இது மட்டுமின்றி, கூகுளின் அற்புதமான மென்பொருள் ஆதரவும் கேமராவுடன் கிடைக்கிறது. போனுடன் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் உள்ளது. முன்பக்கத்தில் 13 மெகாபிக்சல் கேமரா உள்ளது. அதே நேரத்தில், Oneplus 11R ஆனது 50-மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் சென்சார் மற்றும் 2-மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் கொண்ட மூன்றாவது கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. செல்ஃபி எடுக்க 16 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது.

காம்பேக்ட் சைஸ்

Oneplus 11R உடன் ஒப்பிடும்போது Pixel 7a காம்பேக்ட் சைஸ் வழங்குகிறது. அதாவது, சிறிய அளவிலான போன்களை விரும்புவோருக்கு, இந்த போன் மிகச் சிறந்த தேர்வாகிறது. Pixel 7a ஆனது 90Hz புதுப்பிப்பு வீதத்துடன் 6.1-இன்ச் முழு HD பிளஸ் OLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. டிஸ்பிளேயில் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு உள்ளது மற்றும் அதனுடன் HDR ஆதரவும் உள்ளது. இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் போனில் கொடுக்கப்பட்டுள்ளது. அதேசமயம் ஒன்பிளஸ் 11ஆர் மிகப் பெரிய டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இது 6.74 இன்ச் முழு HD பிளஸ் கர்வ்ட் AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. 

க்ளீன் ஆண்ட்ராய்டு அனுபவம்.

Oneplus 11R உடன் OxygenOS அடிப்படையின் கீழ்  ஆண்ட்ராய்டு 13 யின் சப்போர்ட் செய்கிறது. OnePlus அதன் UI ஐ கலர் UI உடன் கலக்கியுள்ளது. அதாவது, முன்பே நிறுவப்பட்ட பல பயன்பாடுகளை நீங்கள் பார்க்கலாம். ஸ்டாக் ஆண்ட்ராய்டு 13 கூகுள் பிக்சல் 7A உடன் கிடைக்கிறது. அதாவது, நீங்கள் தேவையற்ற முன் நிறுவப்பட்ட பயன்பாடுகளைப் பெற மாட்டீர்கள். அதே நேரத்தில், நிறுவனம் இந்த போனில் ஆண்ட்ராய்டு 16 வரை அப்டேட் செய்யும். கூகுள் தனது பிக்சல் ஃபோன்களுக்கான ஆண்ட்ராய்டு அப்டேட்களை முதலில் வெளியிடுகிறது.

வயர்லெஸ் சார்ஜிங்.

Oneplus 11R உடன் 5000Mah பேட்டரி மற்றும் 100W  சூப்பர் வூ ப் பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்டுள்ளது. போனில் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரிக்கப்படவில்லை. வயர்லெஸ் சார்ஜிங் பிக்சல் 7a உடன் ஆதரிக்கப்படுகிறது, இது இந்த ஃபோனை OnePlus 11R இலிருந்து வேறுபடுத்துகிறது. Pixel 7a ஆனது 5W வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவைக் கொண்டுள்ளது. Pixel 7A இல் 4385 mAh பேட்டரி கிடைக்கிறது 

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :