Nothing Phone 2a vs Realme 12 Pro: இந்த 2 லேட்டஸ்ட் போனின் கடுமையான போட்டி எது பெஸ்ட்?

Updated on 07-Mar-2024

நத்திங் அதன் முதல் குறைந்த விலை ஸ்மார்ட்போன் Nothing Phone 2a இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது, இந்த லண்டன் நிறுவனம் தனது கையொப்பம் கொண்ட வெளிப்படையான டிசைன் இந்த போனுடன் தக்க வைத்துக் கொண்டுள்ளது. இருப்பினும், முந்தைய ஸ்மார்ட்போன்களான நத்திங் போன் 1 மற்றும் போன் 2 உடன் ஒப்பிடும்போது, ​​இந்த புதிய போனின் டிசைனில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. டிசைன் மட்டுமல்ல, இந்த போன் சில சிறந்த அம்சங்களையும் கொண்டு வருகிறது. இந்த கட்டுரையில், நத்திங்கின் சமீபத்திய ஸ்மார்ட்போனை அதன் போட்டியாளரான Realme 12 Pro உடன் கம்பேர் செய்து இந்த இரு போனில் எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம்.

Nothing Phone 2a vs Realme 12 Pro: Design

நம் அனைவருக்கும் தெரியும் எப்பொழுதும் நத்திங் அதன் ஸ்மார்ட்போனின் டிசைனில் க்ரீஎடிவ் மற்றும் யூனிக்காக இருக்கும், அதேபோல் Realme 12 Pro அதன் டிசைனில் focus செய்துள்ளது, முதலில் Nothing Phone 2A பற்றி பேசலாம். வழக்கம் போல் இது இரண்டு நிறங்கள்; கருப்பு வெள்ளையில் வருகிறது. கருப்பு நிற வேரியன்ட் ட்ரேன்ஸ்பரென்ட் பின்புறத்துடன் சிக்னேஜர் கிளீன் நத்திம்ங் டிசைனை காட்டுகிறது. இரண்டு கண்கள் வெளியே வருவது போல் நடுவில் இரட்டை கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன. Glyph இன்டர்பேஸ் உள்ள லைட்ஸ் நோட்டிபிகேசன் மற்றும் கால்களை குறிக்கும். அளவீடுகளைப் பற்றி பேசுகையில், இந்த போன் 190 கிராம் எடையும் 8.6 mm திக்னஸ் கொண்டது. இது தவிர, இந்த போன் டஸ்ட் மற்றும் வாட்டரிலிருந்து பாதுகாக்க IP54 ரேட்டிங் வழங்கப்படுகிறது.

Nothing Phone 2a top 5 alternatives

இதன் மறுபக்கம் ரியல்மி போன் பற்றி பேசினால், இது மூன்று கலர் ஆப்சனில் வருகிறது சப்மரைனர் ப்ளூ, எக்ஸ்ப்ளோரர் ரெட் மற்றும் நேவிகேட்டர் பீஜ் நிறங்களில் வருகிறது. இந்த போனின் ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால், Realme அதன் வடிவமைப்பிற்காக ஆடம்பர வாட்ச் தயாரிப்பாளரான Ollivier Savéo உடன் ஒத்துழைத்தது. இது பிரீமியம் வீகன் லெதர் பேக் மற்றும் சர்குலர் கேமரா மாட்யுல் கொண்டுள்ளது, இது ஒரு கடிகாரத்தைப் போன்றது. அதன் தடிமன் 8.5 மிமீ மற்றும் எடை 195 கிராம் மற்றும் இது வளைந்த விளிம்புகளைக் கொண்டுள்ளது. இது டஸ்ட் மற்றும் வாட்டர் ரேசிச்டண்டிக்காக IP65 ரேட்டிங்கை கொண்டுள்ளது.

Nothing Phone 2a vs Realme 12 Pro: Display

இந்த இரண்டு போனின் டிஸ்ப்ளேவை பற்றி பேசினால், நத்திங் போனில் 6.7 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே உடன் வருகிறது, மேலும் இதில் 120Hz ரெப்ராஸ் ரேட் மற்றும் 10 பிட் கலர் சப்போர்ட் வழங்கப்படுகிறது இதனுடன் இதில் இது 1300 nits உச்ச பிரகாசத்தையும் ஆதரிக்கிறது, அதேசமயம் Realme ஃபோனில் 950 nits ஹை ப்ரைட்னாஸ் மட்டுமே உள்ளது. இது தவிர, நத்திங் டிஸ்ப்ளே கொரில்லா கிளாஸ் 5 உடன் பாதுகாக்கப்பட்டுள்ளது.

#Realme 12 Pro

Nothing Phone (2a) vs Realme 12 Pro: Performance

நத்திங் போனின் ப்ரோசெசர் பற்றி பேசுகையில் மீடியாடேக் டிமான்சிட்டி 7200 சிப்செட் கொண்டுள்ளது இதை எக்ஸ்க்ளுசிவ் டிசைனில் இந்த போனை செய்யப்பட்டுள்ளது இந்த ப்ரோசெசரில் 2.8GHz கிளாக் ஸ்பீடில் வேலை செய்யும் இரண்டு பர்போமான்ஸ் கோர்கள் மற்றும் 2.0GHz கிளாக் ஸ்பீடில் வேலை செய்யும் நான்கு பர்போமான்ஸ் கோர்கள் உள்ளன. இது தவிர, இந்த ஸ்மார்ட்போன் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் வழங்குகிறது. மேலும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இந்த போன் ஆண்ட்ராய்டு 14 ஐ அடிப்படையாகக் கொண்ட நத்திங் ஓஎஸ் 2.5 யுஐயில் இயங்குகிறது மற்றும் ப்ளோட்வேர் இல்லை.

இப்பொழுது ரியல்மி பற்றி பேசினால், இந்த போனில் இது 2.2GHz கிளாக் ஸ்பீடில் செயல்படும் நான்கு பர்போமான்ஸ் கோர்கள் மற்றும் 1.8GHz கிளாக் ஸ்பீடில் செயல்படும் நான்கு பர்போமான்ஸ் கோர்களை உள்ளடக்கிய Snapdragon 6 Gen 1 ப்ரோசெசரில் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் இரண்டு ஸ்டோரேஜ் வகைகளில் வருகிறது; 8 ஜிபி + 128 ஜிபி மற்றும் 8 ஜிபி + 256 ஜிபி மற்றும் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான Realme UI 5.0 யில் இயங்குகிறது.

Nothing Phone (2a) vs Realme 12 Pro: Camera

Phone 2a போனில் டுச்யல் கேமரா செட்டப் வழங்கப்படுகிறது, இதில் 50MP OIS மெயின் கேமரா மற்றும் 50MP அல்ட்ரா வைட் கேமரா கொண்டுள்ளது செல்பிக்கு இந்த போனில் 32MP முன் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது, அதுவே இதன் மறுபக்கம் Realme 12 Pro ஆனது 50MP OIS ப்ரைமரி கேமரா, 32MP டெலிஃபோட்டோ சென்சார் மற்றும் 8MP அல்ட்ராவைட் லென்ஸ் ஆகியவற்றை கொண்டுள்ளது டிரிபிள் ரியர் கேமரா செட்டிங்குடன் பொருத்தப்பட்டுள்ளது. இது தவிர, இந்த போனின் முன்பக்கத்தில் 16MP செல்ஃபி ஷூட்டர் உள்ளது.

Realme 12 Pro

Nothing Phone (2a) vs Realme 12 Pro: Battery

இந்த இரண்டு போனின் பேட்டரி பற்றி பேசுகையில் 5000mAh பேட்டரியுடன் வருகிறது இருப்பினும் நத்திங் போனில் வெறும் 45W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது அதுவே ரியல்மி 12 ப்ரோவில் 67W பாஸ்ட் சார்ஜிங்க சப்போர்ட் வழங்கப்படுகிறது.

Nothing Phone (2a) vs Realme 12 Pro: Price

நத்திங் ஃபோன் 2A ஸ்மார்ட்போன் இந்தியாவில் 8ஜிபி + 128ஜிபி வேரியண்டிர்க்கு ரூ.23,999 தொடக்க விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் 12ஜிபி + 256ஜிபி வேரியண்டிர்க்கு ரூ.27,999 வரை செல்கிறது. ஒப்பிடுகையில், Realme 12 Pro 5G இன் ஆரம்ப விலை ரூ. 25,999, ஆனால் ரூ.2000 பின் தள்ளுபடியுடன் ரூ.23,999க்கு வாங்கலாம்.

இதையும் படிங்க: Jio இந்த திட்டத்தில் தினமும் 3GB டேட்டா உடன் கிடைக்கும் Netflix நன்மை

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :