Motorola Edge 50 VS Realme P2 Pro: ஓவரால் இதில்  எது பக்கா மாஸ்

Updated on 25-Sep-2024

இந்திய சந்தையில் பல ஸ்மார்ட்போன்கள் வரிசைகட்டி  வரும் நிலையில் எந்த போனை வாங்குவது என்ற குழப்பம்  நமக்கு வரும், மேலும் இந்த  இந்த போனில்  பர்போமான்ஸ் , கேமரா, டிஸ்ப்ளே  பேட்டரி லைப் எப்படி  என  அனைத்தையும்  கவனிப்பது அவசியம்  வகையில் சமிபத்தில் அறிமுகமாணன் Motorola Edge 50 மற்றும் Realme P2 Pro இந்த  இரு போனையும் ஒப்பிட்டு  ஓவர்  ஆள் எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம்  வாங்க.

Motorola Edge 50 VS Realme P2 Pro: டிஸ்ப்ளே

இந்த இரு போனின் டிஸ்ப்ளே பற்றி பேசினால்  இதில்  ஒரு பெரிய  6.67- Curved pOLED டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது, மேலும் இதில்  1.5K ரேசளுசன் கொண்டுள்ளது இதை தவிர இந்த போனின் டிஸ்ப்ளே 120Hz ரெப்ராஸ்  ரெட் ரெட்டுடன் வழங்குகிறது  மேலும் இதில் 1600 நிட்ஸ் ப்ரைட்னஸ் வழங்கப்படுகிறது , இதை தவிர  Realme P2 Pro  பற்றி பேசினால் இந்த ஃபோன் 120Hz ரேப்ராஸ் ரெட்டுடன் 6.7 இன்ச் ஸ்க்ரீனை கொண்டுள்ளது. இது 394ppi பொருத்தப்பட்டுள்ளது. இது தவிர, நீங்கள் கொரில்லா கிளாஸ் 7i இன் அப்டேட்டை பெறுவீர்கள். டிஸ்ப்ளே 1200 நிட்களின் ப்ரைட்னஸ்  மற்றும் 2000 நிட்களின் ஹை ப்ரைட்னாஸ் கொண்டது. இரண்டு போன்களிலும் பஞ்ச்-ஹோல் வடிவமைப்பைப் பெறலாம் .

Motorola Edge 50 VS Realme P2 Pro: பர்போமான்ஸ்

Motorola Edge 50 போனின் ப்ரோசெசர்  பற்றி பேசினால், குவல்கம் ஸ்னப்டிராகன்  7 Gen 1 Accelerated Edition ப்ரோசெசருடன்  அறிமுகம் செய்யப்பட்டது  இதில் 4nm ப்ரோசெஸ் கொண்ட  போன் ஆகும். இதை தவிர  இதில் உங்களுக்கு   Adreno 644 GPUசப்போர்ட்  கிடைக்கும், மேலும் இதில்  Vapor Chamber Cooling System இருக்கிறது, Realme P2 Pro ஸ்மார்ட்போனில், நீங்கள் Snapdragon 7s Gen 2 செயலியின் ஆதரவைப் பெறுவீர்கள். இது 2.4GHz ஆக்டா கோர் ப்ரோசெசர் . இது Adreno 710 GPU சப்போர்டுடன்  வருகிறது.

Motorola Edge 50 VS Realme P2 Pro: சாப்ட்வேர்  ஒப்பிடு

சாப்ட்வேர் பற்றி பேசுகையில் இரண்டு போன்களும் ஆண்ட்ராய்டு 14 இல் வெளியிடப்பட்டுள்ளன. மோட்டோரோலா எட்ஜ் 50 ஐப் பார்த்தால், இந்த ஃபோன் 2 வருட ஆண்ட்ராய்டு புதுப்பிப்புகளையும் 3 வருட பாதுகாப்பு அப்டேட்களையும் வழங்குகிறது .

Motorola Edge 50 VS Realme P2 Pro: கேமரா  ஒப்பிடு

கேமராவைப் பொறுத்தவரை, மோட்டோரோலா தொலைபேசிகள் சிறந்த கேமரா செட்டிங்  கொண்டுள்ளன. போனில் உள்ள பிரைமரி கேமராவைப் பார்த்தால், அது 50MP Sony LYT 700C சென்சார் ஆகும். இது OIS உடன் கிடைக்கிறது. ஃபோனில் 13MP அல்ட்ராவைடு கேமரா மற்றும் 10MP டெலிஃபோட்டோ லென்ஸ் உள்ளது, இது தோராயமாக 30X டிஜிட்டல் ஜூம் உடன் வருகிறது.

Realme P2 Pro போனில் 50MP யின் மெயின் கேமரா OIS சப்போர்டுடன்  வருகிறது, இந்த போனில் 8MP அல்ட்ரா வைட் கேமரா வழங்கப்படுகிறது, மேலும் இதில் அஆட்டோபோகஸ்  உடன் வருகிறது  இந்த போனில் மெயின் கேமரா  Sony LYT 600 சென்சார் வழங்கப்படுகிறது. இதில் நீங்கள் பல வெடிக்கும் அம்சங்களையும் பெறுவீர்கள். கேமரா மூலம், Photo, Video, Street, Night, Portrait, Pro, Pano, Hi-Res, Movie, Timelapse, Slow Mo, Long Exposure, Dual View Video, Doc Scanner, Starry Mode, Tilt Shift, Google Lens) போன்றவை கிடைக்கும். சப்போர்டை  பெறலாம் . இது தவிர, போனில் 32எம்பி வைட் ஆங்கிள் முன் கேமரா உள்ளது.

Motorola Edge 50 VS Realme P2 Pro: பேட்டரி

மோட்டோரோலா எட்ஜ் 50 ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி உள்ளது, இதில் 68வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் பொருத்தப்பட்டுள்ளது. இதில் நீங்கள் 15W வயர்லெஸ் சார்ஜிங்கையும் பெறுவீர்கள். அதே நேரத்தில், Realme P2 Pro ஸ்மார்ட்போனில் 5200mAh பேட்டரி உள்ளது, இது 80W SUPERVOOC சார்ஜிங் பவரை  கொண்டுள்ளது.

Motorola Edge 50 VS Realme P2 Pro:  விலை

Motorola Edge 50  யின் விலை பற்றி பேசினால், இது வெறும்  சிங்கிள் வேரியண்டில்  வருகிறது  8GB ரேம் மற்றும்  256GB ஸ்டோரேஜ் மாடல் விலை 27,999ரூபாயில் வாங்கலாம்  இதை Realme P2 Pro போனை  நிறுவனம்  பல ஸ்டோரேஜ் மாடலில்  அறிமுகம் செய்யப்பட்டது  இந்த போனின் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் மாடலை ரூ.21,999 விலையில் வாங்கலாம். ஃபோனின் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மாடல் ரூ.24,999க்கு நிறுவனத்திடமிருந்து கிடைக்கிறது மற்றும் டாப் மாடல் அதாவது 12ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி சேமிப்பு மாடல் ரூ.27,999க்கு கிடைக்கிறது.

இதையும் படிங்க: Motorola Edge 50 Neo vs realme 13 Plus 5G: 25000 பட்ஜெட்டில் வரும் இந்த போனில் எது பெஸ்ட்?

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :