Motorola Edge 50 Pro VS OnePlus 12: 2 போன்களில் என்ன வித்தியாசம் இருக்கு

Updated on 03-Apr-2024
HIGHLIGHTS

மோடோரோலா இந்தியாவில் அதன் Motorola Edge 50 Pro போனை அறிமுகம் செய்துள்ளது

இருப்பினும் இந்த இரண்டு போனிளிருக்கும் விலை மற்றும் சிறப்பம்சங்களில் எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது என்று பார்க்கலாம்

otorola Edge 50 Pro VS OnePlus 12 ஒப்பிட்டில் எது பெஸ்ட் என்பதை பார்ப்போம்

மோடோரோலா இந்தியாவில் அதன் Motorola Edge 50 Pro போனை அறிமுகம் செய்துள்ளது இந்த போனின் சிறப்பு என்னவென்றால், இது 50W வயர்லெஸ் சார்ஜிங் திறனுடன் வெளியிடப்பட்டுள்ளது. இது தவிர, ஹலோ யுஐயும் போனில் சேர்க்கப்பட்டுள்ளது. ஸ்னாப்டிராகன் சிப்செட்டும் போனில் உள்ளது. இது மட்டுமின்றி, ஃபோன் 144Hz ரெப்ராஸ் ரேட் கொண்டுள்ளது. இந்த போன் உண்மையில் ஒரு சக்திவாய்ந்த போன், இன்று இந்த போனை OnePlus 12 ஸ்மார்ட்போனுடன் ஒப்பிடப் போகிறோம்.

இருப்பினும் இந்த இரண்டு போனிளிருக்கும் விலை மற்றும் சிறப்பம்சங்களில் எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது என்று பார்க்கலாம். மேலும் Motorola Edge 50 Pro VS OnePlus 12 ஒப்பிட்டில் எது பெஸ்ட் என்பதை பார்ப்போம்

Motorola Edge 50 Pro VS OnePlus 12 விலையில் என்ன வித்தியாசம்

Motorola Edge 50 Pro யின் 8GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை 31,999ரூபாயாக இருக்கிறது, அதுவே இதன் 12GB रैम மற்றும் 256GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை 35,999 ரூபாய்க்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த போனின் விற்பனை ஏப்ரல் 9 தேதி ப்ளிப்கார்டில் ஆரம்பமாகும் . HDFC கார்டு பயனர்கள் ரூ.2250 வரை பிளாட் தள்ளுபடியைப் பெறலாம், இது ஸ்மார்ட்போனின் விலையை ரூ.29,999 ஆகக் குறைக்கும். இது தவிர, ஒரு லிமிடெட் அறிமுக சலுகையும் ரூ. 2000 நேரடி தள்ளுபடியுடன் வழங்கப்படும், அதன் பிறகு அதன் விலை மேலும் ரூ.27,999 ஆக இருக்கும்

இப்போது OnePlus 12 இன் விலையைப் பார்ப்போம். OnePlus 12 இந்தியாவில் ரூ.69,999 ஆரம்ப விலையில் கிடைக்கிறது. இந்த போனை ஃபிளாக்ஷிப் போனாக வாங்கலாம்.

#motorola edge 50 pro

Motorola Edge 50 Pro VS OnePlus 12: டிஸ்ப்ளேவில் என்ன வித்தியாசம்

மோட்டோரோலா ஸ்மார்ட்போன் உலகின் முதல் 1.5K 144Hz டரு காலர் டிஸ்ப்ளே உடன் வருகிறது, இந்த போனில் 6.7 இன்ச் 3D கர்வ்ட் pOLED டிஸ்ப்ளே இருக்கிறது இது 2000 nits மற்றும் HDR 10+ ஹை ப்ரைட்னாஸ் சப்போர்ட் செய்கிறது இதில் இன்-டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் சென்சாரும் கொடுக்கப்பட்டுள்ளது. இது தவிர, இந்த திரை 100% DCI-P3 கலர் லிமிட் மற்றும் SGS Eye Protection வழங்குகிறது.

இதை தவிர OnePlus 12 போனை பற்றி பேசினால், இந்த போனில் 6.82-இன்ச் யின் AMOLED டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது இது Quad HD+ ரெசல்யுசன் கொண்டுள்ளது இருப்பினும் இது ஒரு பெரிய மற்றும் ஷார்ப்பான டிஸ்ப்ளே என்றாலும். இதில் நீங்கள் கேமிங் மற்றும் கண்டேண்டை பார்ப்பதில் வித்தியாசமான அனுபவத்தைப் பெருவிர்கள்

Motorola Edge 50 Pro VS OnePlus 12: பர்போன்ஸ்

இந்த போனின் பர்போமான்ஸ் பற்றி பேசினால் Motorola Edge 50 Pro போனில் Qualcomm Snapdragon 7 Gen 3 வழங்கப்படுகிறது சாப்ட்வேரை பொறுத்தவரை, இந்த போனில் கிட்டத்தட்ட ஸ்டாக் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் அடிப்படையிலான ஹலோ UI யில் வேலை செய்கிறது அதுவே OnePlus 12 ஆனது Snapdragon 8 Gen 3 ப்ரோசெசர் கொண்டுள்ளது. அதாவது இரண்டு போன்களின் பர்போமான்ஸ் ஒன்றுதான். இருப்பினும், ஸ்டோரேஜ் அடிப்படையில் இரண்டு போன்களின் இடையே சில வேறுபாடுகள் உள்ளன. Xiaomi 14 ஸ்மார்ட்போன் 8GB முதல் 16GB RAM உடன் வருகிறது, இது தவிர, 256GB முதல் 1TB ஸ்டோரேஜ் கிடைக்கிறது.

இருப்பினும், ஒன்பிளஸ் 12 பற்றி பேசினால், இந்த ஃபோனில் 24ஜிபி வரை ரேம் உள்ளது. இப்போது இவ்வளவு பெரிய ரேம் பொது மக்களுக்கு இல்லை. இதனால் இந்த போன் கேமிங் போன் என்றும் அழைக்கப்படுகிறது. இரண்டு போன்களிலும் ஆண்ட்ராய்டு 14 சப்போர்ட் கிடைக்கிறது. இருப்பினும், இரண்டு போன்களிலும் வெவ்வேறு ஸ்கின் கிடைக்கும் வாடிக்கையாளர்கள் OnePlus 12 இல் 5G பவர் பெறலாம் இது தவிர இந்த போனில் இரட்டை சிம் சப்போர்ட் eSIM பவர் மற்றும் ரிவர்ஸ் சார்ஜிங் ஆகியவற்றைப் பெறலாம்

Motorola Edge 50 Pro VS OnePlus 12: கேமரா

Motorola Edge 50 Pro உலகின் முதல் AI ப்ரோ பிராண்ட் கேமரா இருக்கிறது மேலும் இது Pantone ஆல் சரிபார்க்கப்பட்டது. இந்த ஃபோனின் கேமரா அமைப்பில் 50MP ப்ரைமரி சென்சார், 13MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் (மேக்ரோ லென்ஸாகவும் இரட்டிப்பாகும்) மற்றும் 3x ஆப்டிகல் ஜூம் கொண்ட 10MP டெலிஃபோட்டோ லென்ஸ் ஆகியவை அடங்கும். இது தவிர, f/1.9 துளை மற்றும் ஆட்டோஃபோகஸின் சப்போர்டுடன் 50MP செல்ஃபி கேமராவும் போனின் முன்பக்கத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

#Motorola Edge 50 Pro

இதை தவிர OnePlus 12 ஒரு மிகபெரிய கேமரா செட்டப் வழங்கபடுகிறது, இந்த போனில் 50MP+64MP+48MP கேமரா அமைப்பு உள்ளது. இந்த போனின் கேமரா அதிக சக்தி வாய்ந்தது என்று கூறலாம், உண்மையில் இதில் நல்ல ஜூம், வைட் ஆங்கிள் ஷாட் போன்றவை கிடைக்கும், அதனால்தான் இதன் செயல்திறன் சிறப்பாக உள்ளது என்று சொல்லலாம். OnePlus 12 ஆனது 32MP செல்ஃபி கேமராவைக் கொண்டுள்ளது. இந்த கேமரா f/2.4 அப்ரட்ஜர் உடன் வருகிறது.

OnePlus 12R new RAM and Storage model
#OnePlus 12

Motorola Edge 50 Pro VS OnePlus 12: பேட்டரி

மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ ஸ்மார்ட்போனில் 4500எம்ஏஎச் பேட்டரி உள்ளது. அடிப்படை மாடல் 68W வேகமான சார்ஜிங் திறன் கொண்டது என்பதை இங்கே உங்களுக்குச் சொல்கிறோம். இருப்பினும், 125W ஃபாஸ்ட் சார்ஜிங் நிறுவனம் டாப் வேரியண்டில் வழங்கப்பட்டுள்ளது. இது தவிர, ஃபோனில் 50W வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் உள்ளது. இது தவிர, OnePlus 12 ஆனது 100W பாஸ்ட் சார்ஜ் செய்யும் பவரை கொண்டுள்ளது.

இதையும் படிங்க:Motorola Edge 50 Pro அறிமுகம் AI கொண்டிருக்கும் இதன் டாப் அம்சங்கள் பாருங்க

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :