Motorola Edge 50 Pro 5G vs Motorola Edge 50 Fusion: பாக்க ஒரே மதுரியாக இருக்கும் போனின் வித்தியாசம் என்ன ?

Updated on 14-Oct-2024

Motorola Edge 50 சீரிஸ் மிட்ரேன்ஜ் செக்மாண்டில் ஒரு பாப்புலர் சீரிஸ் என நம்பப்படுகிறது, நிறுவனம் இந்த சீரிஸ் பல மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது, ஆனால் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மாடல்கள் சிறப்ப்ம்சங்களின் அடிப்படையில் ஒனுகொன்னு மிகவும் நெருக்கமாக இருக்கிறது . எனவே, எந்த ஃபோன் எந்த விலையில் சிறந்தது என்பதைத் தேர்ந்தெடுப்பது பயனருக்கு கடினமாகிறது. Motorola Edge 50 Pro மற்றும் Motorola Edge 50 Fusionஇந்த இரு போனில் எது பெஸ்ட்?

இந்த இரண்டு போனும் விலை ரேஞ்சில் இருக்கிறது Motorola Edge 50 Pro மிட் ரேன்ஜில் சிறந்த அம்சங்களையும் வழங்குவதாகக் கூறுகிறது, அதே நேரத்தில் எட்ஜ் 50 ஃப்யூஷன் குறைந்த மிட்ரேஞ்சில் சிறந்த அம்சங்களை வழங்குவதாகக் கூறுகிறது. இந்த இரண்டு போனையும் ஒப்பிட்டு பார்த்து எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம் வாங்க

Motorola Edge 50 Pro vs Motorola Edge 50 Fusion:விலை

Motorola Edge 50 Pro 5G இந்தியாவில் 8 ஜிபி ரேம், 256 ஜிபி ஸ்டோரேஜ் விலை 31,999ரோஓபையில் ஆரம்பமாகிறது, அதுவே இந்த போனின் 12 ஜிபி ரேம், 256 ஜிபி வேரியன்ட் யின் விலை 35,999ரூபாயாக இருக்கிறது, இருப்பினும், தற்போது நடந்து வரும் விற்பனையின் போது, ​​அடிப்படை வேரியட்டிர்க்கு 29,999 ரூபாய்க்கு வாங்கலாம், அதே நேரத்தில் அதிக மாடலை 31,999 ரூபாய்க்கு வாங்கலாம்.

Motorola Edge 50 Pro

அதுவே இதன் மறுபக்கம் இந்தியாவில் Motorola Edge 50 Fusion 8ஜிபி ரேம், 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.22,999 இல் தொடங்குகிறது. இதன் 12 ஜிபி ரேம், 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட் ரூ.24,999க்கு வருகிறது. விற்பனையின் போது, ​​இரண்டு வகைகளையும் முறையே ரூ.21,999 மற்றும் ரூ.23,999க்கு வாங்கலாம்.

Motorola Edge 50 Pro vs Motorola Edge 50 Fusion: டிசைன்

இந்த இரண்டு போனின் டிசைன் பற்றி பேசினால், வேகன் லெதர் பினிஷ் வழங்கப்படுகிறது இதன் பின்புற பேணல்பார்த்தால், டிசைன் கூறுகள் ஒரே மாதிரியாகத் தோன்றும். கேமரா செட்டப்பில் ஒரே மாதுரியான ஸ்டைல் கொடுக்கப்பட்டுள்ளது, இதை தவிர இந்த இரண்டு போனிலும் IP68 ரேட்டிங் வழங்கப்படுகிறது Motorola Edge 50 Fusion இன் பரிமாணங்கள் 161.9 x 73.1 x 7.9mm மற்றும் எடை 174.9 கிராம். அதேசமயம், எட்ஜ் 50 ப்ரோவின் டைமென்சன் 161.23 x 72.4 x 8.19 mm மற்றும் எடை 186 கிராம் ஆகும்.

Motorola Edge 50 Pro vs Motorola Edge 50 Fusion: டிஸ்ப்ளே

இந்த இரு போனின் டிஸ்ப்ளே பற்றி பேசுகையில் இரண்டு மாடல்களும் 6.7 இன்ச் கர்வ்ட் OLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளன.ஆனால் ரெசளுசனில்வித்தியாசம் இருக்கிறது, Motorola Edge 50 Pro 5G யில் 1.5K ரேசளுசன் வழங்கப்படுகிறத, மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் முழு எச்டி+ ரெசளுசன் கொண்டுள்ளது. ப்ரோ மாடலின் ஹை ப்ரைட்னாஸ் 2000 நிட்கள் மற்றும் ஃப்யூஷன் 1600 நிட்கள் ஹை ப்ரைட்னஸ் கொண்டுள்ளது. இரண்டு போன்களிலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 ரெப்ராஸ் வழங்கப்பட்டுள்ளது. இது 144Hz ரெப்ராஸ் ரேட்டை 360Hz டச் வேரியன்ட் ரெப்ராஸ் ரேட் கொண்டுள்ளது.

Motorola-Edge-50-Fusion launched in India

Motorola Edge 50 Pro vs Motorola Edge 50 Fusion: பர்போமான்ஸ்

Motorola Edge 50 Pro 5G யில் Qualcomm Snapdragon 7 Gen 3 சிப்செட் வளங்கப்பட்டுள்ளது, ஃபோனில் 12ஜிபி LPDDR4X RAM மற்றும் 256ஜிபி UFS 2.2 ஸ்டோரேஜ் உள்ளது. Motorola Edge 50 Fusion ஆனது Snapdragon 7s Gen 2 சிப்செட் கொண்டுள்ளது. போனில் 12 ஜிபி ரேம், 256 ஜிபி UFS 2.2 ஸ்டோரேஜ் உள்ளது. இரண்டு போன்களும் ஆண்ட்ராய்டு 14 யில் இயங்குகின்றன. நிறுவனம் மூன்று ஆண்டுகளுக்கு OS அப்டேட்களையும் , பாதுகாப்பு அப்டேட்களையும் 4 ஆண்டுகளுக்கும் வழங்கும்.

Motorola Edge 50 Pro vs Motorola Edge 50 Fusion கேமரா

எட்ஜ் 50 ப்ரோ 50 மெகாபிக்சல் OIS பிரதான லென்ஸுடன் கூடிய டிரிபிள் கேமராவைக் கொண்டுள்ளது. இது 13-மெகாபிக்சல் அல்ட்ராவைடு மற்றும் 10-மெகாபிக்சல் 3X டெலிஃபோட்டோ லென்ஸையும் கொண்டுள்ளது. முன்பக்கத்தில், போன் 50MP ஆட்டோஃபோகஸ் செல்ஃபி கேமராவுடன் வருகிறது.

மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் இரட்டை கேமரா செட்டிங் கொண்டுள்ளது. இது 50 மெகாபிக்சல் சோனி LYT-700C சென்சார் மற்றும் 13 மெகாபிக்சல் அல்ட்ராவைட் ஆங்கிள் லென்ஸைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில், போன் 32 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவைக் கொண்டுள்ளது.

Motorola Edge 50 Fusion

Motorola Edge 50 Pro vs Motorola Edge 50 Fusion பேட்டரி

மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ 4,500எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது மற்றும் 125வாட் பாஸ்ட் சார்ஜிங்குடன் 50வாட் வயர்லெஸ் சார்ஜிங்கைப் வழங்குகிறது . இது 10W ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான சப்போர்ட் கொண்டுள்ளது. Motorola Edge 50 Fusion ஆனது 5,000mAh பேட்டரி மற்றும் 68W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்டுள்ளது.

Motorola Edge 50 Pro 5G vs Motorola Edge 50 Fusion இதில் எது பெஸ்ட்?

இரண்டு போன்களும் ரூ.30,000 விலை பிரிவில் கவர்ச்சிகரமான அம்சங்களுடன் வருகின்றன. இப்போது அது கஸ்டமர்களின் விருப்பத்தைப் பொறுத்தது,நீங்கள் ஒரு மெல்லிய, நல்ல டிஸ்ப்ளே , ஒழுக்கமான பர்போமான்ஸ் கொண்ட நம்பகமான கேமரா ஃபோனை விரும்பினால், நீங்கள் Motorola Edge 50 Fusion ஐப் பார்க்கலாம். ஆனால் நீங்கள் சக்தியைப் பயன்படுத்துபவராகவும், நல்ல போட்டோக்களை எடுக்க விரும்புவதாகவும் இருந்தால், சூப்பர்ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் பெற விரும்பினால், நீங்கள் மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோவை நோக்கிச் செல்லலாம்.

இதையும் படிங்க:POCO M6 5G vs Tecno Spark 30C 5G: இந்த இரு போனில் எது பெஸ்ட்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :