Motorola Edge 50 Neo VS iQOO Z9s Pro: கடும் போட்டியுடன் வரும் இந்த போனில் எது பெஸ்ட்
Motorola Edge 50 Neo ஸ்மார்ட்போன் 25000பட்ஜெட்டில் வரும் சிறந்த போன் ஆகும். இருப்பினும், இந்த பட்ஜெட்டில் நீங்கள் வேறு பல போன்களைப் பெறலாம் அதே விலை ரேஞ்சில் மற்றொரு மோட்டோரோலா ஃபோன் உள்ளது போல, இதை மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் என்று நாங்கள் அறிவோம். எவ்வாறாயினும், எட்ஜ் 50 ஃப்யூஷனுடன் ஒப்பிடும்போது நாம் பேசும் போன், அதாவது எட்ஜ் 50 நியோ ஓரளவு கச்சிதமானது. இரண்டு போன்களிலும் நல்ல டிஸ்ப்ளே மற்றும் சக்திவாய்ந்த கேமராக்கள் உள்ளன.
Motorola Edge 50 Neo உடன் iQOO Z9s Pro ஒப்பிட்டு இந்த இரு போனிலும் இருக்கும் விலை அம்சம் போன்ற எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம்
Motorola Edge 50 Neo VS iQOO Z9s Pro: விலையில் எது பெஸ்ட்?
Motorola Edge 50 Neo பற்றி பேசினால், இந்த போனில் 8GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் மாடலின் விலை 23,999ரூபாய் விலையில் வாங்கலாம், மேலும் iQOO Z9s Pro நீங்கள் பல ரேம் மற்றும் ஸ்டோரேஜ் ஆப்சனில் வாங்கலாம் இந்த போனின் 8GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் மாடலின் விலை 24,999ரூபாய் அதுவே 8GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் மாடல் 26,999ரூபாயில் வாங்கலாம் மற்றும் 12GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் மாடலின் விலை 28,999ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது இரண்டு போன்களின் விலையைப் பற்றி பேசுகையில், ஒவ்வொரு மாடலுக்கும் இது ஒன்றுதான். இருப்பினும், iQOO இந்த மொபைலின் பல மாடல்களை கொண்டுள்ளது.
Motorola Edge 50 Neo VS iQOO Z9s Pro:டிஸ்ப்ளே ஒப்பிட்டு
மோட்டோரோலாவின் மொபைலில் 6.4-இன்ச் pOLED டிஸ்ப்ளே கிடைக்கிறது, இது HDR10+ மற்றும் ரெயின் வாட்டர் ஸ்மார்ட் டச் தொழில்நுட்பத்துடன் வருகிறது. கொரில்லா கிளாஸ் 3 ப்ரோடேக்சன் போனில் உள்ளது. இது தவிர, டிஸ்ப்ளேவில் 120Hz ரெப்ராஸ் ரேட்டை வழங்குகிறது . இருப்பினும், இது தவிர, iQOO Z9s Pro பற்றி பேசினால், இந்த ஃபோன் 6.77 இன்ச் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இது AMOLED 3D கர்வ்ட் டிஸ்ப்ளே, இது HDR10+ க்கான சப்போர்டுடன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஃபோன் ஸ்பிளிட் ஸ்கிரீன் மற்றும் வெட் ஹேண்ட் டச் தொழில்நுட்பத்திற்கான ஆதரவையும் கொண்டுள்ளது. இந்த போனிலும் 120Hz ரெப்ராஸ் ரெட்டுடன் இந்த டிஸ்ப்ளே கிடைக்கும்.
Motorola Edge 50 Neo VS iQOO Z9s Pro: பர்போமான்ஸ்
Motorola Edge 50 Neo யில் மிக சிறந்த பர்போமான்ஸ் கொண்டுள்ளது அதாவது இந்த போனில் MediaTek Dimensity 7300 ப்ரோசெசருடன் வருகிறது, மேலும் இந்த போனில் Mali G615 MC2 GPU உடன் வருகிறது,இது தவிர, iQOO ஃபோனைப் பற்றி பேசினால், Snapdragon 7 Gen 3 செயலி இந்த போனில் உள்ளது. இந்த போனில் Adreno 720 GPU கொடுக்கப்பட்டுள்ளது.
Motorola Edge 50 Neo VS iQOO Z9s Pro: கேமரா வில் எது பெஸ்ட்
கேமராவை பற்றி பேசினால், Motorola Phone சிறப்பாக இருக்கிறது அதாவது இந்த போனில் மூன்று கேமரா செட்டப் வழங்கப்படுகிறது, போனில் 50MP ப்ரைமரி , 13MP அல்ட்ராவைடு கோண லென்ஸ் மற்றும் 10MP டெலிஃபோட்டோ லென்ஸ் உள்ளது. iQOO Z9s Pro பற்றி பேசுகையில், இந்த போனில் இரட்டை கேமரா செட்டிங் வழங்குகிறது . இந்த போனின் 50MP ப்ரைமரி மற்றும் 8MP அல்ட்ராவைட் லென்ஸ் உள்ளது.
- செல்ஃபிக்காக மோட்டோரோலா போனில் 32எம்பி முன்பக்க கேமரா வழங்கப்பட்டுள்ளது.
- அதேசமயம், iQOO Z9s Pro ஐப் பார்த்தால், இந்த போனில் 16MP செல்ஃபி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
- மேலும் இதில் சாப்ட்வேர் பற்றி பேசினால் இதில் ஆண்ட்ரோய்ட்14 சப்போர்ட் வழங்கப்படுகிறது
- Motorola Phone இந்த வெர்சனில் உடன் போன் கொண்டுவந்துள்ளது, அதேசமயம் iQOO Z9s Pro ஸ்மார்ட்போன் FunTouch OS 14 யில் ஸ்கின்னில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
Motorola Edge 50 Neo VS iQOO Z9s Pro:பேட்டரி ஒப்பிட்டு
மோட்டோரோலாவின் போனில் வாடிக்கையாளர்களுக்கு 4310mAh பேட்டரி வழங்கப்படுகிறது, இது 68W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங் திறனுடன் வருகிறது. iQOO Z9s Pro இல் வாடிக்கையாளர்கள் வயர்லெஸ் திறன்களைப் பெறுவதில்லை. இருப்பினும், இந்த ஃபோனில் 5500mAh பேட்டரி உள்ளது, இது 80W பாஸ்ட் சார்ஜிங் திறனுடன் வருகிறது.
Motorola Edge 50 Neo VS iQOO Z9s Pro: எது பெஸ்ட்?
Motorola Edge 50 Neo மற்றும் iQOO Z9s Pro இந்த இரண்டு போனும் இந்திய சந்தையில் கவர்ச்சிகரமான மாற்றுகள் உள்ளன, ஆனால் அவற்றுக்கு சில முக்கியமான வேறுபாடுகள் உள்ளன.மோட்டோரோலா எட்ஜ் 50 நியோவின் விலை ₹23,999 யில் தொடங்குகிறது, மேலும் 8ஜிபி ரேம், ஐபி68 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் ரேட்டிங்குடன் கூடிய உயர்தர டிஸ்ப்ளே மற்றும் சிறந்த கேமரா அமைப்பு ஆகியவை அடங்கும். கூடுதலாக, மோட்டோரோலாவின் நீண்ட சாப்ட்வேர் சப்போர்ட் (5 வருட அப்டேட்கள் ) அதை ஒரு வலுவான போட்டியாளராக ஆக்குகிறது.
அதுவே iQOO Z9s Pro போனை 24,999யின் ஆரம்ப விலையில் வாங்கலாம், இதில் நீங்கள் அதிக பேட்டரி திறன் (5500mAh) மற்றும் 80W வேகமான சார்ஜிங்கைப் பெறுவீர்கள். கூடுதலாக, iQOO யின் Snapdragon 7 Gen 3 பர்போமான்ஸ் கேமிங் மற்றும் மல்ட்டி டாஸ்கிங் சிறந்த பர்போமான்ஸ் வழங்குகிறது.
நீங்கள் பிரீமியம் டிசைன், சிறந்த கேமராக்கள் மற்றும் நீண்ட மென்பொருள் ஆதரவைத் தேடுகிறீர்களானால், மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ ஒரு சிறந்த தேர்வாக இருக்கலாம். மறுபுறம், நீங்கள் நீண்ட பேட்டரி ஆயுள் மற்றும் வேகமாக சார்ஜ் செய்வதற்கு முன்னுரிமை அளித்தால், iQOO Z9s Pro உங்களுக்கு சரியானதாக இருக்கும்.
இதையும் படிங்க:Infinix Zero 40 5G vs Motorola Edge 50 Pro: இந்த இரு போனில் எது பெஸ்ட்
Feature | Motorola Edge 50 Neo | iQOO Z9s Pro |
---|---|---|
Price | ₹23,999 (8GB/256GB) | ₹24,999 (8GB/128GB), ₹26,999 (8GB/256GB), ₹28,999 (12GB/256GB) |
Display | 6.4″ pOLED, 120Hz | 6.77″ AMOLED 3D Curved, 120Hz |
Processor | MediaTek Dimensity 7300 | Snapdragon 7 Gen 3 |
Software | Android 14 (upgradable to Android 17) | Android 14 with FunTouch OS 14 (upgradable for 2 years) |
Camera (Rear) | 50MP (Main) + 13MP (Ultra-wide) + 10MP (Telephoto) | 50MP (Main) + 8MP (Ultra-wide) |
Camera (Front) | 32MP | 16MP |
Battery | 4310mAh, 68W Wired, 15W Wireless | 5500mAh, 80W Wired |
Water Resistance | IP68 | IP64 |
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile