Moto Edge 40 Neo இந்தியாவில் ரூ.23,999 ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 2023 யில் மற்ற மோட்டோரோலா போன்களை போலவே, எட்ஜ் 40 நியோவும் பான்டோன்-ஸ்டைல் வண்ண விருப்பங்களில் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் Caneel Bay, Soothing Sea மற்றும் Black Beauty ஆகிய மூன்று வண்ண வகைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பிளாக் பியூட்டி மாறுபாடு கண்ணாடி பின்புறத்துடன் வருகிறது, மற்ற இரண்டு சைவ தோல் பூச்சு கொண்டவை. இப்போது நாம் புத்தம் புதிய Moto Edge 40 Neo VS iQOO Z7 Pro 5G உடன் ஒப்பிடப் போகிறோம். iQOO Z7 Pro 5G கடந்த மாதம் ரூ.24,999 ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
Moto Edge 40 Neo ஆனது 6.55-இன்ச் FHD+ poOLED கர்வ்ட் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, இது 144Hz ரெப்ராஸ் ரேட் சப்போர்ட் செய்கிறது இருப்பினும் இந்த ரேஞ்சில் எந்த ஃபோனும் 144Hz ரெப்ராஸ் ரேட் வழங்குவதில்லை. இந்த டிஸ்ப்ளே 10-பிட் கலர் மற்றும் HDR10+ ஆகியவற்றை வழங்குகிறது.
மறுபுறம், iQOO Z7 Pro 5G ஆனது 6.78-இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, இது HDR10+, 10-பிட் நிறம் மற்றும் 120Hz ரெப்ராஸ் ரேட் உடன் வருகிறது.
Moto Edge 40 Neo ஆனது உலகின் முதல் MediaTek Dimensity 7030 செயலியுடன் 12GB வரை ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த போன் ஆண்ட்ராய்டு 13 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகிறது. இது தவிர, போனில் 5000mAh பேட்டரி நிரம்பியுள்ளது, இது 68-வாட் பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது
இதன் மறுபக்கம் iQOO Z7 Pro 5G போனில் இது MediaTek Dimensity 7200 சிப்செட் உடன் 8GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இந்த போன் ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான Funtouch OS 13 இல் வேலை செய்கிறது. இது 4600mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 66W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது.
Moto Edge 40 Neo ஆனது PDAF மற்றும் OIS ஆதரவுடன் பின்புறத்தில் 50MP ப்ரைம் கேமரா, 13MP அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் முன்பக்கத்தில் 32MP செல்ஃபி ஷூட்டர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
அதுவே iQOO Z7 Pro 5G யில் போட்டோக்ராபிக்கு இந்த போனில் OIS மற்றும் PDAF சப்போர்டுடன் 64MP ப்ரைமரி கேமரா 2MP டெப்த் சென்சார் மற்றும் 16MP முன் பெசின்க் கேமராவுடன் கிடைக்கிறது.
Motorola Edge 40 Neo போனின் பேட்டரி பற்றி பேசினால், 5000mAh பேட்டரி உடன் 68W வயர்ட் பாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் வருகிறது,, மேலும் நீங்கள் ஒருமுறை சார்ஜ் முழுமையாக செய்தால் 36 மணிநேரம் வரை பிளேபேக் டைம் கிடைக்கும்
iQOO Z7 Pro 5G போனின் பேட்டரி பற்றி பேசுகையில் இதில் 4600 mAh பேட்டரி உடன் 66W பிளாஷ் சார்ஜிங் சப்போர்ட் கொண்டுள்ளது.
மோட்டோரோலா எட்ஜ் 40 நியோவை ரூ.23,999 ஆரம்ப விலையில் அறிமுகம் செய்துள்ளது. இருப்பினும், பிராண்ட் இந்த போனில் ரூ.3000 வெளியீட்டு தள்ளுபடியை வழங்குகிறது, அதன் பிறகு அதன் விலை ரூ.20,999 ஆக குறைந்துள்ளது. இதுமட்டுமின்றி, தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி அட்டைகள் மூலம் செலுத்துவதன் மூலம் ரூ.1000 கூடுதல் தள்ளுபடியையும் பெறலாம். எட்ஜ் 40 நியோ ஸ்மார்ட்போன் செப்டம்பர் 28 அன்று மாலை 7 மணி முதல் பிளிப்கார்ட் மற்றும் மோட்டோரோலாவின் ஆன்லைன் ஸ்டோரில் வாங்குவதற்கு கிடைக்கும்.
iQOO Z7 Pro 5G அமேசானில் ரூ.23,999 ஆரம்ப விலையில் கிடைக்கிறது. ICICI மற்றும் HDFC பேங்க் அட்டைகளைப் பயன்படுத்தி இந்த போனில் ரூ.1000 தள்ளுபடியைப் பெறலாம்.