Lava Yuva 4 vs TECNO POP 9: இந்த இரண்டு போனில் எது பெஸ்ட்?

Lava Yuva 4 vs TECNO POP 9: இந்த இரண்டு போனில் எது பெஸ்ட்?

சமிபத்தில் லேட்டஸ்டாக அறிமுகம் செய்யப்பட்டது Lava Yuva 4 போன் வாங்க நினைத்தால் இந்த போனின் அதே விலை ரேன்ஜ் கொண்ட TECNO POP 9 ஒப்பிட்டு இந்த இரண்டு போனில் எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம் இதன் டிஸ்ப்ளே, கேமரா, பர்போமான்ஸ் மற்றும் விலை போன்ற அம்சங்களை ஒப்பிட்டு Lava Yuva 4 மற்றும் TECNO POP 9 ஒப்பிட்டு எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம்.

Lava Yuva 4 vs TECNO POP 9: விலை

  • TECNO POP 9 யின் 3ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.6,699.ஆகும் இதன் கலர் விருப்பங்களைப் பொறுத்தவரை, இந்த போன் கேலக்ஸி ஒயிட், லைம் கிரீன் மற்றும் ஸ்டார்ட்ரெயில் பிளாக் ஆகியவற்றில் கிடைக்கிறது.
  • Lava Yuva 4 யின் 4GB RAM மற்றும் 64GB ஸ்டோரேஜ் விலை 6999ரூபாயில் வருகிறது, இது க்ளோசி வொயிட் , க்ளோசி பர்ப்பில் மற்றும் க்ளோசி ப்ளாக் கலரில் கிடைக்கிறது

Lava Yuva 4 vs TECNO POP 9: டிஸ்ப்ளே

  • TECNO POP 9 ஆனது 6.67 இன்ச் HD + டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன் ரேசளுசன் 1612 x 720 பிக்சல்கள் மற்றும் 90Hz ரெப்ராஸ் ரேட் ஆகும் .
  • லாவா யுவா 4 ஆனது 6.56 இன்ச் HD + டிஸ்ப்ளே கொண்டது, இதன் ரெசல்யூஷன் 1600 × 720 பிக்சல்கள் மற்றும் 90 ஹெர்ட்ஸ் ரெப்ராஸ் ரேட் ஆகும்.

ப்ரோசெசர்

  • TECNO POP 9 யில் IMG PowerVR GE8320 GPU உடன் octa core MediaTek Helio G50 12nm ப்ரோசெசர் கொண்டுள்ளத, 3GB LPDDR4X ரேம் மற்றும் 64GB eMMC 5.1 இன்டெர்னல் ஸ்டோரேஜ் உள்ளது, இதை microSD அட்டை வழியாக 1TB வரை அதிகரிக்க முடியும்
  • இந்த போனின் ப்ரோசெசர் பற்றி பேசினால் Lava Yuva 4 யில் Unisock யின் T606 ப்ரோசெசர் கொண்டுள்ளது, இது 4 GB RAM உடன் வருகிறது. ரேமை மேலும் 4 ஜிபி வரை அதிகரிக்க முடியும். இந்த போனின் இன்டெர்னல் ஸ்டோரேஜ் 64 ஜிபி மற்றும் 128 ஜிபி ஆகும்.

கேமரா

  • TECNO POP 9 ஆனது பின்புறத்தில் 13-மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் இரட்டை LED ஃபிளாஷ் கொண்ட 8-மெகாபிக்சல் முன் கேமராவைக் கொண்டுள்ளது.
  • Lava Yuva 4 யில் 50மேகபிக்சல் மெயின் கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் செல்பி கேமரா வழங்கப்படுகிறது.

பேட்டரி

  • TECNO POP 9 யில் 5,000mAh பேட்டரி உடன் 15வாட் பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது
  • Lava Yuva 4 யில் பேட்டரி பற்றி பேசுகையில் இதில் 5000mAh பேட்டரி மற்றும் 10W சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது.

கனெக்டிவிட்டி

TECNO POP 9 யின் கனெக்டிவிட்டி விருப்பங்களில் 3.5 mm ஆடியோ ஜாக், டூயல் சிம் சப்போர்ட் , 5G SA/NSA, டூயல் 4G VoLTE, Wi-Fi, ப்ளூடூத் 5.0, GPS மற்றும் USB Type C போர்ட் ஆகியவை அடங்கும். லாவா யுவா 4 யில் கனெக்சன் விருப்பங்களில் டூயல் சிம், 4ஜி VoLTE, 3.5 மிமீ ஆடியோ ஜாக், வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.0, ஜிபிஎஸ் மற்றும் யூஎஸ்பி டைப் சி போர்ட் ஆகியவை அடங்கும்.

இதையும் படிங்க :Realme GT 7 Pro vs iQOO 12: இந்த இரண்டு போனில் எது பக்கா மாஸ் ?

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo