Lava Yuva 4 vs Redmi A4 5G:ரூ,10,000 விலை ரேஞ்சில் வரும் இந்த போனில் எது பெஸ்ட்

Lava Yuva 4 vs Redmi A4 5G:ரூ,10,000 விலை ரேஞ்சில் வரும் இந்த போனில் எது பெஸ்ட்

Lava சமிபத்தில் அதன் பட்ஜெட் பிரிவின் கீழ் யுவா போனை அறிமுகம் செய்தது, அதாவது Lava Yuva 4 இந்தியாவில் அறிமுகம் செய்தது குறைந்த விலையில் மிக சிறந்த அம்சங்களை கொண்டு உள்ளது மேலும் இதற்க்கு சரியான போட்டியை தரும் வகையில் Redmi A4 5G இருக்கிறது இந்த இரண்டு போனும் கிட்ட தட்ட ஒரே விலை ரேஞ்சில் வருகிறது இந்த இரண்டு போனின் விலை மற்றும் அம்சங்களை ஒப்பிட்டு எது பெஸ்ட் என்பதை பார்ப்போம் வாங்க.

Lava Yuva 4 vs Redmi A4 5G:விலை

ஸ்மார்ட்போன் ரேம் மற்றும் ஸ்டோரேஜ் விலகி
Lava Yuva 44GB + 64GBRs 6,999
4GB + 128GBRs 7,499
Redmi A4 5G4GB+64GBRs 8,499
4GB+128GBRs 9,499

Lava Yuva 4 vs Redmi A4 5G:டிசைன்

  • Lava Yuva 4 மூன்று கலர் Glossy White, Glossy Purple, மற்றும் Glossy Black கலரில் வருகிறது, இதில் கிளாஸ் டிசைன் மற்றும் அதன் சிறப்பான கேமரா மாட்யுல் மிக சிறப்பாக பின்புறத்தில் கொடுக்கப்பட்டுள்ளது, மேலும் இதில் IP ரேட்டிங் டஸ்ட் மற்றும் வாட்டார் பாதுகப்பு ஏதும் இல்லை.
  • Redmi A4 5G யில் Starry Black மற்றும் Sparkle Purple இரண்டு கலர் விருப்பங்களில் வருகிறது, மேலும் இது க்ளாஸ் செண்ட்விட்ச் டிசைன் உடன் இதன் பின்புறத்தில் கிளாஸ் பேணல் கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் மெட்டல் பிரேம் உடன் வருகிறது மேலும் இதில் IP52 ரேட்டிங் வாட்டார் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் வழங்குகிறது.

Lava Yuva 4 vs Redmi A4 5G:டிஸ்ப்ளே

  • Lava Yuva 4 போனின் டிஸ்ப்ளே பற்றி பேசினால், 6.5-இன்ச் LCD டிஸ்ப்ளே உடன் இதில் பஞ்ச ஹோல் கட் அவுட் டிஸ்ப்ளே உடன் இதில் HD+ 1,600 x 720 ரெசளுசன் வழங்குகிறது மேலும் இதில் 90Hz ரெப்ராஸ் ரேட் வழங்குகிறது.
  • Redmi A4 5G யின் இந்த போனில் 6.88-இன்ச் LCD டிஸ்ப்ளே உடன் 1,640 x 720 ஸ்க்ரீன் ரேசளுசன் வழங்கப்படுகிறது, மேலும் இதில் 120Hz ரெப்ராஸ் ரேட் வழங்குகிறது.

Lava Yuva 4 vs Redmi A4 5G:பர்போமான்ஸ்

  • Lava Yuva 4 யில் ஒகட்டா கோர் Unisoc T606 12nm ப்ரோசெசர் உடன் Mali-G57 MC2 650MHz GPU ப்ரோசெசர் வழங்கப்படுகிறது 4GB RAM, 4GB விர்ஜுவல் RAM, மற்றும் இதில் 128GB UFS 2.2 ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது
  • அதுவே Redmi A4 5G யில் 4nm Qualcomm Snapdragon 4s Gen 2 SoC வழங்கப்படுகிறது, மேலும் இதில் Adreno GPU, LPDDR4x RAM, மற்றும் UFS 3.1 ஸ்டோரேஜ் சப்போர்ட் வழங்குகிறது.

Lava Yuva 4 vs Redmi A4 5G: சாப்ட்வேர்

  • Lava Yuva 4 போனில் Android 14 ஆப்பரேட்டிங் சிஸ்டம் அடிபடையின் கீழ் இயங்குகிறது மேலும் இது ஒரு ஆண்ட்ரோய்ட் அப்டேட் வழங்கும் என உருதி செய்துள்ளது.
  • இதன் மறுபக்கம் Redmi A4 5G யில் HyperOS அடிபடையின் கீழ் Android 14 இயங்குகிறது, மேலும் இதில் இரண்டு ஆண்ட்ரோய்ட் அப்டேட் மற்றும் நான்கு ஆண்டு செக்யூரிட்டி அப்டேட் வழங்குகிறது

Lava Yuva 4 vs Redmi A4 5G:கேமரா

  • இந்த இரு போனின் கேமரா பற்றி பேசுகையில் Lava Yuva 4 யில் 50-மெகாபிக்சல் கேமரா உடன் இதன் பின்புறத்தில் LED ப்ளாஷ் வழங்குகிறது மேலும் இதில் செல்பிக்கு 8-மெகாபிக்சல் முன் கேமரா வழங்கப்படுகிறது
  • அதுவே Redmi A4 5G யில் டுயல் கேமரா செட்டப் உடன் இதில் 50-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா மற்றும் இதில் ஆக்சலரி செகண்டரி கேமரா வழங்கப்படுகிறது மேலும் இதில் செல்பிக்கு 5MP முன் கேமரா வழங்கப்படுகிறது.

Lava Yuva 4 vs Redmi A4 5G: பேட்டரி மற்றும் சார்ஜிங்

  • Lava Yuva 4 போனில் 5,000mAh பேட்டரி உடன் 10W சார்ஜிங் சப்போர்ட் வழங்குகிறது
  • அதுவே Redmi A4 5G யில் 5160mAh பேட்டரியுடன் 18W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்குகிறது, மேலும் இதில் 33W சார்ஜர் பாக்ஸில் வருகிறது.

Lava Yuva 4 vs Redmi A4 5G: எது பெஸ்ட் ?

Redmi A4 5G ஒரு மிக சிறந்த தேர்வாக இருக்கும், இதில் ப்ரீமியம் கிளாஸ் சான்ட்விட்ச் கிளாஸ் டிசைன் உடன் வருகிறது, மேலும் இது 5G, IP52 பாதுகாப்பு உடன் வருகிறது. மேலும் இதில் 50MP மெயின் கேமரா பாஸ்டான ஸ்டோரேஜ் வழங்குகிறது.

இதன் மறு பக்கம் Lava Yuva 4 புதிய போனாக இருந்ததலும் இது குறைந்த பட்ஜெட்டில் வருகிறது அதாவது ரெட்மி போனை விட 2000 ரூபாய் குறைந்த விலையில் வாங்கலாம். மேலும் இந்த பட்ஜெட்டுக்கு ஏற்றபடி 90Hz HD டிஸ்ப்ளே 50MP கேமரா போன்றவை வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க:Lava Yuva 4 vs TECNO POP 9: இந்த இரண்டு போனில் எது பெஸ்ட்?

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo