Lava Yuva 2 5G vs POCO C75 5G:இந்த ரூ,10,000 ரேஞ்சில் வரும் இந்த இரு போனில் எது பெஸ்ட்?

Lava Yuva 2 5G vs POCO C75 5G:இந்த ரூ,10,000 ரேஞ்சில் வரும் இந்த இரு போனில் எது பெஸ்ட்?

Lava Yuva 2 5G மற்றும் POCO C75 5G இந்த இரு போனும் 10,000ரூபாய் விலை ரேஞ்சில் அறிமுகம் செய்யப்பட்டது, இந்த இரு போனும் குறைந்த விலை 5G போன் ஆகும் மேலும் இது இரு போனில் இருக்கும் விலை டிஸ்ப்ளே , பர்போமான்ஸ் மற்றும் பேட்டரி போன்ற அம்சங்களை ஒப்பிட்டு இதில் எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம் வாங்க.

Lava Yuva 2 5G vs POCO C75 5G: விலை

ஸ்மார்ட்போன் ஸ்டோரேஜ் விலை
Lava Yuva 2 5G4GB+128GBRs 9,499
POCO C75 5G4GB+64GBRs 8,499

Lava Yuva 2 5G vs POCO C75 5G: டிசைன்

  • POCO C75 5G போனில் பிளாஸ்டிக் பில்ட் டிசைன் உடன் இதில் பிளாட் டிசைன் கொண்டுள்ளது, இந்த போனில் மார்பில் டிசைன் உடன் பேக் பேணல் இருக்கிறது, மேலும் இந்த போன் அக்வா பிளிஸ், என்சாண்டட் கிரீன் மற்றும் சில்வர் ஸ்டார்டஸ்ட் வண்ணங்களில் கிடைக்கிறது மற்றும் 212 கிராம் எடை கொண்டுள்ளது.
  • Lava Yuva 2 5G அதே போன்ற மார்பில் பினிஷ் உடன் இதில் பிளாஸ்டிக் பின்புற பேணல் இருக்கிறது. இதில் மார்பில் ப்ளாக் மற்றும் மார்பில் வைட் கலரில் இருக்கிறது, மேலும் இதில் பிளாட் எட்ஜ் உடன் இதில் ஷைனி மெட்டாலிக் பினிஷ் உடன் வருகிறது ஆனால் இதில் பிளாஸ்டிக் பிரேம் இருக்கிறது, கேமரா மாட்யுல் சுற்றி தனித்துவமான LED லைட்களை கொண்டுள்ளது, இது நோட்டிபிகேசன் மற்றும் கால்களுக்கு ஒளிரும்.

Lava Yuva 2 5G vs POCO C75 5G:டிஸ்ப்ளே

  • Lava Yuva 2 5G ஆனது 1600×720 பிக்சல்கள் HD+ ரெசளுசன் கொண்ட 6.67-இன்ச் LCD ஸ்க்ரீனுடன் பொருத்தப்பட்டுள்ளது. இது 90Hz ரெப்ராஸ் ரேட்டை 700 நிட்கள் வரையிலான ஹை ப்ரைட்னாஸ் கொண்டுள்ளது.
  • POCO C75 5G ஆனது 6.88 இன்ச் LCD டிஸ்ப்ளே உடன் இதில் HD+ 1640×720 பிக்சல்கள் ரேசளுசன் மற்றும் 120Hz ரெப்ராஸ் ரேட் . இது 600 நிட்கள் வரை ஹை ப்ரைட்னாஸ் சப்போர்ட் செய்கிறது.

Lava Yuva 2 5G vs POCO C75 5G: ப்ரோசெசர்

  • Lava Yuva 2 5G ஆனது 6nm பர்போமான்ஸ் அடிப்படையில் Unisoc T760 ப்ரோசெசர் மூலம் இயக்கப்படுகிறது. இது Mali-G57 MC4 GPU உடன் இணைக்கப்பட்டுள்ளது.
  • POCO C75 5G ஆனது 4nm பர்போமான்ஸ் அடிப்படையில் Qualcomm Snapdragon 4s Gen 2 ப்ரோசெசர் கொண்டுள்ளது. சிப்மேக்கரால் GPU குறிப்பிடப்படவில்லை.

Lava Yuva 2 5G vs POCO C75 5G: சாப்ட்வேர்

  • Lava Yuva 2 5G ஆனது ஆண்ட்ராய்டு 14 இல் இயங்குகிறது. இது ப்ளோட்வேர் ஆப்கள் அல்லது விளம்பரங்கள் இல்லாத சுத்தமான சாப்ட்வேர் பயனர் இன்டர்பேஸ் கொண்டுள்ளது. மேலும் இந்த போனில் சரியான சாப்ட்வேர் அப்டேட் சைக்கில் நிறுவனம் குறிப்பிடவில்லை.
  • POCO C75 5G ஆனது Android 14 ஐ அடிப்படையாகக் கொண்ட HyperOS இயக்குகிறது. இருப்பினும், இது சில முன் இன்ஸ்டால் செய்யப்பட்ட ஆப்களை கொண்டுள்ளது. POCO ஆனது இரண்டு முக்கிய ஆண்ட்ராய்டு அப்டேட்கள் மற்றும் ஃபோனுக்கான மூன்று வருட பாதுகாப்பு கனேக்சன்களை உறுதி செய்துள்ளது.

Lava Yuva 2 5G vs POCO C75 5G: கேமரா

  • Lava Yuva 2 5G யின் இந்த போனில் பின்புறத்தில் இரட்டை கேமரா அமைப்புடன் 50MP f/1.8ப்ரைமரி செசாருடன் இதில் 2MP AI கேமரா உடன் இதில் 8MP செல்பி கேமரா சென்சார் கொண்டுள்ளது.
  • அதுவே இந்த மறுபக்கம் POCO C75 5G போனில் 50MP f/1.8 ப்ரைமரி கேமராவுடன் இதில் செகண்டரி கேமரா அக்சலறி லென்ஸ் இருக்கிறது, மற்றும் இதன் முன் பக்கத்தில் 5MP f/2.2 முன் கேமரா சென்சார் வழங்கப்படுகிறது.

Lava Yuva 2 5G vs POCO C75 5G: பேட்டரி

  • Lava Yuva 2 5G ஆனது 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது 18W பாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது .
  • POCO C75 5G ஆனது 5,160mAh பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது. இது 18W பாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது.

Lava Yuva 2 5G vs POCO C75 5G: எடு பெஸ்ட்?

Lava Yuva 2 5G ஆனது ஒழுக்கமான 90Hz டிஸ்ப்ளே, Unsioc T760 ப்ரோசெசர் , 50MP ப்ரைமரி கேமரா மற்றும் பெரிய 5,000mAh பேட்டரி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ரூ.10,000 பிரிவின் மிக சக்திவாய்ந்த போன்களில் இதுவும் ஒன்றாகும். இந்தியாவில் உள்ள அனைத்து 5G நெட்வொர்க்குகளுடனும் இணக்கமானது ஒரு சிறந்த நன்மையாகும்.

POCO C75 5G ஆனது 120Hz திரை, Snapdragon 4s Gen 2 ப்ரோசெசர் மற்றும் அதேபோன்ற கேமரா மற்றும் பேட்டரி அமைப்பைக் கொண்டுள்ளது. இருப்பினும், இது மூன்று ஆண்டுகள் வரை உறுதிசெய்யப்பட்ட மென்பொருள் புதுப்பிப்பு சுழற்சியை வழங்குகிறது மேலும் ஹைப்பர்ஓஎஸ் மூலம் அதிக அம்சங்கள் மற்றும் கஸ்டமைசெசன் கொண்டுள்ளது. இது Jio 5G உடன் மட்டுமே இயங்குகிறது, இது சில பயனர்களுக்கு மிகப்பெரிய குறைபாடாக இருக்கலாம்.

இதையும் படிங்க:Realme 14x 5G vs POCO M7 Pro 5G: ரூ,16000க்குள் வரும் இந்த இரு போனில் எது பெஸ்ட்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo