itel A80 VS Moto G05:வெறும் 7000ரூபாய்க்குள் வரும் இந்த போனில் எது பெஸ்ட்

Updated on 11-Jan-2025

குறைந்த விலையில் பட்ஜெட் செக்மண்டில் வரும் போன், சமீபத்தில் itel நிறுவனம் A80 ஐ அறிமுகப்படுத்தியது, இது நிறுவனத்தின் சமீபத்திய பட்ஜெட் பிரன்ட்லி போனாகும். 7 ஆயிரத்துக்கும் குறைவான விலையில் இந்த போன் வருகிறது. இதேபோல், Moto G05 சந்தையில் அதே விலையில் கிடைக்கிறது, இப்பொழுது இந்த போனின் அம்சங்களை டிஸ்ப்ளே,கேமரா, ப்ரோசெசர் மற்றும் பேட்டரி போன்றவற்றில் ஒப்பிட்டு எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம் வாங்க.

itel A80 vs Moto G05:டிசைன்

  • க்ளோசி மற்றும் மேட் பினிஷ் ஐடெல் ஏ80 யில் காணலாம். க்ளசியர் வைட் அதன் க்ளசியர் பேட்டர்ன் கொடுக்கப்பட்டுள்ளது. இது 8.54 mm திக்னஸ் வருகிறது. IP54 ஆனது ஃபோனை டஸ்ட் மற்றும் வாட்டார் ரெசிஸ்டன்ட் பவர் கொண்டதாக மாற்றும்.
  • Moto G05 பிரீமியம் வேகன் லெதர் டிசைனை கொண்டுள்ளது. இது IP52 ரேட்டிங்குடன் வருகிறது. இந்த போன் பிளம் ரெட் மற்றும் ஃபாரஸ்ட் கிரீன் கலர்களில் வருகிறது. இது 8.17 mm திக்னஸ் மற்றும் 118 கிராம் எடை கொண்டது.

Moto G05 யின் வேகன் லெதர் மிகவும் பிரீமியமாகத் தெரிகிறது. மேலும், இந்த போன் ஐடெல் போன்களை விட லைட்டாக மெல்லியதாகவும் இருக்கும். itel A80 அதிக IP ரேட்டிங்கை கொண்டிருந்தாலும். இரண்டு போன்களிலும் பிளாஸ்டிக் பிரேம் மற்றும் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர்ப்ரின்ட் ஸ்கேனர் உள்ளது.

itel A80 vs Moto G05: டிஸ்ப்ளே

  • itel A80 யில் 6.7-inch IPS LCD டிஸ்ப்ளே HD+ (1600 x 720 pixels)ரேசளுசன் உடன் வருகிறது, ஃபோன் 120Hz ரெப்ராஸ் ரேட்டை சப்போர்ட் செய்கிறது . ஹை ப்ரைட்னாஸ் 500 நிட்கள். இது ஒரு பஞ்ச் ஹோல் டிசைனை கொண்டுள்ளது. இந்த போனில் முன்புறத்தில் ஒரு டைனமிக் பாக்ஸ் உள்ளது, அதில் பேட்டரி , காலிங் மற்றும் திறக்கும் வேலை போன்ற அம்சங்கள் உள்ளன.
  • Moto G05 ஆனது HD+ (1612 x 720 பிக்சல்கள்) ரேசளுசன் கொண்ட 6.67-இன்ச் IPS LCD பஞ்ச் ஹோல் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. போன் 90Hz ரெப்ராஸ் ரேட்டை கொண்டுள்ளது. இதன் ஹை ப்ரைட்னாஸ் 1000 நிட்கள். இது கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் வருகிறது.

ஒப்பிடுகையில், A80 அதிக ரெப்ராஸ் ரேட்டை கொண்டுள்ளது, 120Hz. இது டைனமிக் போர்ட் அம்சத்தைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில், மோட்டோ ஃபோன் டிச்ப்லேவை கொண்டுள்ளது. இது வாட்டர் டச் சப்போர்டுடன் பொருத்தப்பட்டுள்ளது மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 யின் பாதுகாப்பையும் கொண்டுள்ளது. டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களும் இதில் கிடைக்கும்.

itel A80 vs Moto G05: பர்போமான்ஸ்

  • itel A80 UniSoC T603 SoC ஐக் கொண்டுள்ளது, இது 12nm செயலாக்கத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. விர்ச்சுவல் ரேம் ஆதரவும் ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டுள்ளது. மேலும், மைக்ரோ SD கார்டு மூலம் ஸ்டோரேஜ் அதிகரிக்கலாம்.
  • Moto G05 ஆனது MediaTek Helio G81 Extreme SoC ஐக் கொண்டுள்ளது, இது 12nm செயல்பாட்டில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இது LPDDR4X ரேம் மற்றும் UFS 2.2 இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. மோட்டோவின் ஃபோன் இங்கே சிறப்பாக செயல்படுகிறது. வேகமான ரேமும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.

itel A80 vs Moto G05:கேமரா

  • itel A80 ஆனது 50MP சூப்பர் HDR கேமராவை பின்புறத்தில் கொண்டுள்ளது, இது ஒரு தனித்துவமான ரிங் எல்இடியையும் கொண்டுள்ளது. ஃபோன் முன்பக்கத்தில் 8MP கேமராவுடன் வருகிறது. இதனுடன் எல்இடி ப்ளாஷ் வழங்கப்பட்டுள்ளது.
  • Moto G05 ஆனது குவாட் பிக்சல் தொழில்நுட்பத்துடன் கூடிய 50MP பின்புற கேமராவைக் கொண்டுள்ளது. இதில் 8எம்பி முன்பக்க கேமரா உள்ளது. சில AI அம்சங்களுடன் A80 இங்கு முன்னிலை வகிக்கிறது.

itel A80 vs Moto G05: பேட்டரி

  • itel A80 ஆனது 10W வயர்டு சார்ஜிங்கிற்கான சப்போர்டுடன் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. போனில் USB Type-C போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
  • Moto G05 சற்று பெரிய 5200mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது 18W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது . ஆனால் போன் 10W சார்ஜருடன் வருகிறது.

itel A80 vs Moto G05: விலை

Moto G05 சற்று பெரிய 5200mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது 18W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது . ஆனால் போன் 10W சார்ஜருடன் வருகிறது.

Moto G05 ஃபோன் 4GB+64GB உள்ளமைவில் ரூ.6,999க்கு வருகிறது, இதை Flipkart, Motorola India போன்ற ஆன்லைன் ஸ்டோர்களில் வாங்கலாம்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :