iQOO Z9x VS iQOO Z7x: இந்த இரு போன்களில் எது பெஸ்ட்?

iQOO Z9x VS iQOO Z7x: இந்த இரு போன்களில் எது பெஸ்ட்?

iQOO தனது புதிய ஸ்மார்ட்போனான iQOO Z9x சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. இப்போது நீங்கள் இந்த ஃபோனை வாங்க நினைத்தால், முதலில் இந்த ஃபோனை சில ஃபோன்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும், இதன் மூலம் நீங்கள் iQOO Z9x 5G வாங்கலாமா வேண்டாமா என்பதை பற்றிய முழு தகவல்களையும் பார்க்கலாம்.

நாங்கள் இங்கு ए iQOO Z9x 5G மற்றும் Moto G64 5G ஒப்பிட்டு இந்த இரு போனில் எது பெஸ்ட் என்பதை பார்ப்போம், இறுதியில் இந்த இரு ஸ்மார்ட்போன்களிலிருந்து எதை வாங்கலாம் சரி வாருங்கள் இந்த இரு போன்களில் அப்படி என்ன வித்தியாசம் இருக்கிறது என்று பார்க்கலாம்.

iQOO Z9x VS iQOO Z7x: Display மற்றும் Design

இந்த இரண்டு போன்களையும் உங்கள் கண்களால் பார்த்தால், அவை ஒரே மாதிரியாகத் தோன்றும். இரண்டு ஃபோன்களிலும் உங்களுக்கு ஸ்லீக் பிளாஸ்டிக் டிசைனை வழங்குகிறது, இது தவிர ஃபோனில் சைட் பேஸிங் பிங்கர்ப்ரின்ட் சென்சார் உள்ளது. மொபைலில் ஹெட்ஃபோன் ஜாக் ஒன்றும் கிடைக்கும். இது தவிர, iQOO Z9x பற்றி பேசினால், இது 6.72 இன்ச் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, அதுவே இதை iQOO Z7x ஒப்பிடுகையில், ஸ்மார்ட்போனில் 6.64 இன்ச் டிஸ்ப்ளே உள்ளது.

இது தவிர, iQOO Z9x ஸ்மார்ட்போனில் நீங்கள் IP64 ரேட்டிங்கை வழங்குகிறது இது போனில் வாட்டர் மற்றும் ரேசிச்டன்ட் தாக்கத்தை தாங்கக்கூடிய வித்தியாசமான அம்சத்தை வழங்குகிறது. இது தவிர, iQOO Z7x யில் இதுபோன்ற எந்த அம்சத்தையும் நீங்கள் பெறவில்லை. என்றாலும் இரண்டு ஃபோன்களின் ஸ்க்ரீனில் IPS LCD ஆகும் இரண்டிலும் உங்களுக்கு 120 ஹெர்ட்ஸ் ரெப்ராஸ் ரேட்டை வழங்குகிறது.

iQOO Z9x VS iQOO Z7x: Power மற்றும் Performance

இந்த இரு போனின் பர்போமான்ஸ் பற்றி பேசினால், iQOO Z7x ஸ்மார்ட்போன் Qualcomm Snapdragon 695 செயலியுடன் வருகிறது, இருப்பினும் iQOO Z9x ஆனது Snapdragon 6 Gen 1 செயலியுடன் வருகிறது. இரண்டு போன்களிலும் ஆக்டா கோர் ப்ரோசெசர் உள்ளது.

இங்கு இதை தவிர இந்த போன் பற்றி பேசினால், நீங்கள் ஏற்கனவே iQOO Z9x ஸ்மார்ட்போனில் Android 14 ஐப் பெற்றுள்ளீர்கள். இருப்பினும், iQOO Z7x யில் உங்களுக்கு Android 13 யின் சப்போர்டை வழங்கும் iQOO Z9x ஐப் பொறுத்தவரை, இது Android 16 க்கு மேம்படுத்தப்படப் போகிறது என்று கூறப்படுகிறது.

இதை தவிர இந்த போனில் 2027 வரையிலான செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கும், இந்த இரு இரு போனிலும் ரேம் மற்றும் ஸ்டோரேஜ் மாடல் ஒரே மாதுரியாக இருக்கிறது, இந்த போனில், 6ஜிபி ரேம் முதல் 12ஜிபி வரையிலான ரேம் விருப்பங்களைப் வழங்குகிறது இது தவிர 128ஜிபி ஸ்டோரேஜ் முதல் 256ஜிபி ஸ்டோரேஜ் மாடல்களைப் வழங்குகிறது

iQOO Z9x VS iQOO Z7x: கேமரா

இந்த இரு போனிலும் ஒரு டுயல் கேமரா செட்டப் வழங்குகிறது, இந்த போனில் 50MP ப்ரைம் கேமரா மற்றும் 2MP டெப்த் சென்சார் இருக்கிறது. iQOO Z9x 4K பவர் வழங்கினாலும், iQOO Z7x கேமராவுடன் 1080p ரெசளுயுசன் மட்டுமே வழங்குகிறது. செல்ஃபிகளுக்கு, இரண்டு போன்களிலும் 8MP செல்ஃபி கேமரா உள்ளது.

iQOO Z9x VS iQOO Z7x: பேட்டரி

இந்த இரு போனிலும் 6000mAh பேட்டரி வழங்கப்படுகிறது, அதாவது இந்த இரு போனுமே ஒரு முறை சார்ஜ் செய்தால் நீண்ட நேரம் சார்ஜ் இருக்கும் iQOO Z7x யில் நீங்கள் 80W Wired Charging பவரை பெற்றாலும், iQOO Z9x யில் 44W சார்ஜிங் ஸ்பீட் மட்டுமே கிடைக்கும். பேட்டரியின் அடிப்படையில் எந்த போன் சிறந்தது என்பதை பற்றி பார்க்கலாம்.

இதன் சிறப்பம்சங்கள் அடிப்படையில் இந்த இரண்டு போன்களும் ஒன்னுக்கு ஒன்னு எவ்வளவு வித்தியாசமாக இருக்கின்றன என்பதை இங்கே பார்க்கலாம். சில இடங்களில், ஒரு ஃபோன் பேட்டரியின் அடிப்படையில் மிகவும் திறமையானதாகவும், மற்ற இடங்களில், சில ஃபோன்கள் டிஸ்ப்ளே அடிப்படையில் சிறப்பாக இருப்பதாகவும் தெரிகிறது. அத்தகைய சூழ்நிலையில், உங்கள் விருப்பப்படி, உங்கள் தேவைகள் மற்றும் உங்கள் பட்ஜெட்டை மனதில் வைத்து ஒரு போனை வாங்க வேண்டும்.

இதையும் படிங்க :Google Pixel 8a vs Nothing Phone 2: தனிதுவமான டிசைன் கொண்ட இரு போனில் எது பெஸ்ட்?

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo