iQOO Z9s 5G vs Moto G85 5G: இதன் ஒட்டுமொத்த அம்சங்களில் எது பெஸ்ட்?

Updated on 02-Sep-2024

iQOO Z9s 5G சமிபத்தில் அறிமுகம் செய்தது இந்த போன் மீடியாடேக் டிமான்சிட்டி 7300 SoC உடன் இந்தியாவில் 25000 ரூபாய் பட்ஜெட்டில் அறிமுகம் செய்தது இந்த ஸ்மார்ட்போன் மோட்டோ ஜி85 5ஜிக்கு நேரடி போட்டியை வழங்குகிறது இந்த இரண்டு போன்களிலும் என்ன வித்தியசமாக இருக்கிறது என்று பார்க்கலாம் வாங்க.

iQOO Z9s 5G vs Moto G85 5G:டிசைன்

iQOO யின் இந்த போனில் Titanium Matte (7.5mm திக்னஸ் மற்றும் 180 கிராம் எடை) மற்றும் Onyx Green (7.49mm திக்னஸ் மற்றும் 182 கிராம் எடை) ஆகியவற்றில் வாங்கலாம். அதன் பின்புற பேனலில் இரட்டை கேமரா செட்டிங் வழங்கப்பட்டுள்ளது, இது செங்குத்தாக வைக்கப்பட்டுள்ளது. இந்த ஃபோன் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்டிர்க்காக IP64 தரப்படுத்தப்பட்டுள்ளது.

மறுபுறம் Moto G85, யில் கோபால்ட் ப்ளூ, ஆலிவ் கிரீன் மற்றும் அர்பன் கிரே கலர் விருப்பங்களில் கிடைக்கிறது மற்றும் அதன் திக்னஸ் 7.91 mm மற்றும் எடை 185 கிராம். மோட்டோரோலா இந்த போனில் சற்று உயர்த்தப்பட்ட செங்குத்தாக சீரமைக்கப்பட்ட கேமராக்களுடன் பொருத்தப்பட்டுள்ளது. ஃபோனின் பின்புறம் வேகன் லெதர் பினிஷ் மற்றும் IP52 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் வாட்டர் ரெசிஸ்டன்ட் டிசைன் உள்ளது.

iQOO Z9s 5G vs Moto G85 5G: டிஸ்ப்ளே

iQOO Z9s 5G யின் டிஸ்ப்ளே பற்றி பேசினால், 6.77-இன்ச் 3D கர்வ்ட் AMOLED டிஸ்ப்ளே உடன் வருகிறது, இது FHD+ ரேசளுசன் மற்றும் 120Hz ரெப்ராஸ் ரேட்டை வழங்குகிறது. இந்த டிஸ்ப்ளே 1800 நிட்ஸ், 360 ஹெர்ட்ஸ் டச் சாம்லிங் ரேட், 100 சதவீதம் DCI P3 கலர் ரேன்ஜ் 2000 ஹெர்ட்ஸ் இன்ஸ்டன்ட் டச் செம்பளிங் ரேட் 387 பிபிஐ, 2160 ஹெர்ட்ஸ் பிடபிள்யூஎம் டிம்மிங், 93.13 சதவீதம் ஸ்கிரீன்-டு-பாடி 20: விகிதத்தின் ஹை ப்ரைட்னாஸ் விகிதம், HDR10+ மற்றும் அதாவது ஈரமான கை வச்சு டச் செய்தாலும் இது சப்போர்ட் செய்யும்.

இதற்கிடையில், Moto G85 ஆனது 6.67-இன்ச் 3D கர்வ்ட் 10-பிட் pOLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது, இது FHD+ தீர்மானம் மற்றும் 120Hz ரெப்ரஸ் ரேட்டுடன் வருகிறது. இந்த டிஸ்ப்ளே 1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்லிங் ரேட், 100 சதவீதம் டிசிஐ பி3 கலர் கேமட், எஸ்ஜிஎஸ் ப்ளூ லைட், எஸ்ஜிஎஸ் லோ மோஷன் ப்ளர் மற்றும் டால்பி அட்மோஸ் ஆகியவற்றை சப்போர்ட் செய்கிறது இது கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 உடன் பாதுகாக்கப்பட்டுள்ளது.

iQOO Z9s 5G vs Moto G85 5G: பர்போமான்ஸ்

iQOO Z9s ஸ்மார்ட்போனில் LPDDR4x ரேம், UFS 2.2 ஸ்டோரேஜ் மற்றும் விர்ச்சுவல் ரேம் (12ஜிபி வரை) உடன் 4nm MediaTek Dimensity 7300 SoC மூலம் இயக்கப்படுகிறது. இந்த சிப்செட்டில் நான்கு கார்டெக்ஸ் ஏ78 கோர்கள், நான்கு கார்டெக்ஸ் ஏ55 கோர்கள் மற்றும் மாலி ஜி615 எம்பி2 ஜிபியு உள்ளது.

இதை Moto G85 உடன் ஒப்பிடும்போது இதில் Snapdragon 6s Gen 2 செயலி கிடைக்கிறது. சிப்செட் 6nm செயல்முறையில் கட்டமைக்கப்பட்டுள்ளது, இது iQoo ஃபோன்களைப் போன்று LPDDR4x RAM, UFS 2.2 ஸ்டோரேஜ் மற்றும் வெர்ஜுவல் ரேம் (12GB வரை) ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது. குவால்காம் இந்த சிப்செட்டை இரண்டு கோர்டெக்ஸ் ஏ78 கோர்கள், ஆறு கார்டெக்ஸ் ஏ55 கோர்கள் மற்றும் அட்ரினோ 619 ஜிபியு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

iQOO Z9s 5G vs Moto G85 5G: சாப்ட்வேர்

போனின் சாப்ட்வேர் பற்றி பேசினால், iQoo போனனது ஆண்ட்ராய்டு 14 ஐ அடிப்படையாகக் கொண்ட Funtouch OS 14 உடன் வருகிறது. இது இரண்டு முக்கிய ஆண்ட்ராய்டு அப்டேட்கள் மற்றும் மூன்று வருட செக்யூரிட்டி பேட்ச் அப்டேட்களை பெறும். iQoo அதன் ஸ்மார்ட்போன்களில் ஆப் ரிடெய்னர், ஸ்பிளிட் ஸ்கிரீன் மினி விண்டோ மற்றும் பலவற்றைக் கொண்டுள்ளது.

அதுவே மோட்டோரோலா ஃபோன் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான My UX இல் இயங்குகிறது. இது இரண்டு முக்கிய ஆண்ட்ராய்டு அப்டேட்கள் மற்றும் நான்கு வருட பாதுகாப்பு பேட்ச் அப்டேட்களால் சப்போர்ட் செய்கிறது மோட்டோரோலா தனது ஸ்மார்ட்போன்களில் மோட்டோ செக்யூர், மோட்டோ சைகைகள், ஸ்மார்ட் கனெக்ட் மற்றும் பிற அம்சங்களையும் வழங்கியுள்ளது.

iQOO Z9s 5G vs Moto G85 5G: கேமரா

இந்த போனின் கேமரா பற்றி பேசினால், Z9s 5G ஒரு f/1.79 அப்ரட்ஜர் மற்றும் OIS சப்போர்டுடன் இது 50MP Sony IMX882 ப்ரைமரி கேமரா, f/2.4 அப்ரட்ஜர் கொண்ட இரண்டாம் நிலை 2MP பொக்கே கேமரா மற்றும் ஸ்மார்ட் ஆரா லைட் உடன் வருகிறது. செல்ஃபி எடுப்பதற்காக, f/2.4 அப்ரட்ஜர் கூடிய 16MP ஸ்னாப்பரை Iku வழங்கியுள்ளது.

இதை தவிர Moto G85 ஆனது f/1.79 அப்ரட்ஜர் மற்றும் OIS உடன் 50MP Sony LYT 600 ப்ரைமரி கேமரா மற்றும் f/2.2 அப்ரட்ஜர் கொண்ட செகண்டரி கேமரா சென்சார் 8MP அல்ட்ராவைடு கேமராவைக் கொண்டுள்ளது. செல்ஃபிக்களுக்கு, இந்த போனில் f/2.4 அப்ரட்ஜருடன் கூடிய 32MP முன்பக்க ஷூட்டரைக் கொண்டுள்ளது.

iQOO Z9s 5G vs Moto G85 5G:பேட்டரி மற்றும் சார்ஜிங்

iQOO Z9s யின் பேட்டரி பற்றி பேசினால், 5500mAh பேட்டரியில் 44W பிளாஷ்சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் வருகிறது மற்றும் இதில் 7.5W ரிவர்ஸ் வயர்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்குகிறது இந்த போனில் 30 நிமிடங்களில் 0-50 சதவீதம் சார்ஜ் செய்துவிட முடியும் என்று நிறுவனம் கூறுகிறது.

அதுவே இதன் மற்றொரு போன் ஆன Moto G85 யில் 5000mAh பேட்டரி உடன் இதில் 33W டர்போ பவர் சார்ஜிங் சப்போர்டுடன் வருகிறது.

iQOO Z9s 5G vs Moto G85 5G: விலை

iQOO போனை பற்றி பேசினால், ஆரம்ப விலை 8ஜிபி + 128ஜிபி வகையின் ஆரம்ப விலை ரூ.19,999. 8 ஜிபி + 256 ஜிபி வேரியன்ட் ரூ 21,999 மற்றும் 12 ஜிபி + 256 ஜிபி மாடல் ரூ 23,999 ஆகும். இந்த போனை Amazon மற்றும் IQ India இ-ஸ்டோரிலிருந்து வாங்கலாம்.

இதன் பிறகு மோட்டோரோலா சாதனத்தை 8ஜிபி + 128ஜிபி வகைக்கு ரூ.17,999 ஆரம்ப விலையில் வாங்கலாம். அதேசமயம் 12ஜிபி + 256ஜிபி மாடல் ரூ.19,999க்கு வருகிறது. இந்த கைபேசியை பிளிப்கார்ட் மற்றும் மோட்டோரோலா இந்தியா இ-ஸ்டோரில் வாங்கலாம்.

இதையும் படிங்க :Vivo T3 Pro 5G VS iQOO Z9s Pro 5G: ஒரே மாதுரியான லுக்கில் இருக்கும் இந்த போனில் எது பெஸ்ட்?

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :