iQOO Z7 Pro vs Realme 11 Pro Plus இரண்டுமே 25000 பட்ஜெட் தான், ஆனால் இந்த 2 விஷயத்துல் Realme தான் டாப்
iQOO அதன் புதிய போனானiQOO Z7 Pro இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது
இரண்டு போன்களும் விலைக்கு ஏற்ப வலுவான சிறப்பம்சங்களை கொடுக்கப்பட்டுள்ளது
25 ஆயிரத்திற்கும் இந்த போன்களில் எது பெஸ்ட்
iQOO அதன் புதிய போனானiQOO Z7 Pro இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது ரூ.25 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. iQOO Z7 Pro ஆனது 3D கர்வ்ட் டிஸ்ப்ளே கர்வ்ட் டிசைன் மற்றும் MediaTek Dimensity 7200 5G ப்ரோசெசர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. Realme 11 Pro Plus உடன் காணப்படுகிறது. இரண்டு போன்களும் விலைக்கு ஏற்ப வலுவான சிறப்பம்சங்களை கொடுக்கப்பட்டுள்ளது 25 ஆயிரத்திற்கும் குறைவான போனை வாங்க வேண்டும் என்று நினைத்தால் இதை வாங்கலாம் இருப்பினும், அப்படி என்ன வித்தியாசம் இதில் இருக்கிறது?
iQOO Z7 Pro vs Realme 11 Pro Plus டிஸ்ப்ளே
Realme 11 Pro Plus ஆனது 6.7-inch FullHD+ கர்வ்ட்AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. டிஸ்பிளேவுடன் 120 ஹெர்ட்ஸ் அப்டேட் வீதம் மற்றும் டால்பி அட்மோஸிற்கான சப்போர்ட் உள்ளது. Realme 11 Pro Plus ஆனது Astral Black, Sunrise Beige மற்றும் Oasis Green நிற விருப்பங்களில் வருகிறது.
iQOO Z7 Pro 5G ஆனது 6.78 இன்ச் FullHD + வளைந்த AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. டிஸ்ப்ளே 120 ஹெர்ட்ஸ் அப்டேட் வீதத்தையும் 1300 நிட்கள் வரை ஹை ப்ரைட்னாஸ் ஆதரிக்கும். கிராஃபைட் மேட் மற்றும் ப்ளூ லகூன் ஆகிய இரண்டு நிற விருப்பங்களில் இந்த போன் கிடைக்கிறது.
iQOO Z7 Pro vs Realme 11 Pro Plus ப்ரோசெசர்
Realme 11 Pro Plus ஆனது MediaTek Dimensity 7050 ப்ரோசெசர் ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான Realme UI 4.0, இன்-டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் ஸ்கேனர் மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை ஆதரிக்கிறது. 8 ஜிபி ரேம் கொண்ட போனில் 256 ஜிபி வரை ஸ்டோரேஜ் ஆதரிக்கப்படுகிறது.
MediaTek டிமான்சிட்டி 7200 5G செயலி iQOO Z7 Pro யில் கிடைக்கிறது. போன 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் சப்போர்ட் செய்கிறது, ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான Funtouch OS 13 போனில் கிடைக்கிறது.
iQOO Z7 Pro vs Realme 11 Pro Plus கேமரா
Realme 11 Pro Plus ஆனது 200 மெகாபிக்சல் ப்ரியிமரி கேமரா (OIS), 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. போனில் 32 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது.
iQOO Z7 Pro இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. போனில் 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் இரண்டாம் கேமரா உள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ காலிங்க்கு 16 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது.
iQOO Z7 Pro vs Realme 11 Pro Plus: பேட்டரி
Realme 11 Pro Plus யில் 5,000mAh பேட்டரியுடன் 100W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் செய்கிறது.
iQOO Z7 Pro யில் 4600mAh பேட்டரி மற்றும் இது 66W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்குகிறது.
ஒட்டுமொத்தமாக, கேமரா, பாஸ்ட் சார்ஜிங் மற்றும் பேட்டரி பவர் ஆகியவற்றின் அடிப்படையில் Realme முன்னணியில் உள்ளது. அதேசமயம் iQOO Z7 Pro ஆனது Realme 11 Pro Plus பர்போமான்ஸ் விசயத்தில் முன்னில் உள்ளன .
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile