இந்த இரண்டு லேட்டஸ்ட் iQOO Z7 Pro 5G Vs Vivo V29e போனில் எது பக்கா மாஸ்

Updated on 11-Sep-2023
HIGHLIGHTS

Vivo V29e கடந்த மாத இறுதியில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுக்கும் இடையே சில ஒற்றுமைகள் மற்றும் சில வேரியன்ட்களை உள்ளன

சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த இரண்டு போன்களையும் ஒப்பிட்டுப் பார்ப்போம்.

iQOO Z7 Pro 5G ஆனது கடந்த மாதம் இந்தியாவில் Z7 வரிசையில் இணைந்தது, அதில் ஏற்கனவே iQOO z7 மற்றும் iQOO Z7s ஆகியவை அடங்கும். இந்த சீரிச்ல் ப்ரோ வேரியன்ட் ஆக்டா கோர் 4என்எம் மீடியாடெக் ப்ரோசெசருடன் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், குவால்காம் சிப்செட் பொருத்தப்பட்ட Vivo V29e கடந்த மாத இறுதியில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுக்கும் இடையே சில ஒற்றுமைகள் மற்றும் சில வேரியன்ட்களை உள்ளன. iQOO Z7 Pro 5G மற்றும் Vivo V29e இரண்டும் இந்தியாவில் ரூ. 30000 விலையில் கிடைக்கின்றன. சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த இரண்டு போன்களையும் ஒப்பிட்டுப் பார்ப்போம்.

iQOO Z7 Pro 5G Vs Vivo V29e பெஸ்ட் கம்பேரிசன்

iQOO மற்றும் Vivo யின் இந்த இரண்டு போனிலும்  6.78-இன்ச் முழு HD+ (2400×1080) பிக்சல் டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது, இது 120Hz  ரெப்ராஸ்  ரேட் கொடுக்கப்பட்டுள்ளது, இது தவிர இரண்டு போனிலும் Android 13 அடிபடையில் இயங்குகிறது, FunTouchOS 13 யில் வேலை செய்கிறது iQOO ஸ்மார்ட்போன் MediaTek Dimensity 7200 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது, Vivo போனன octa-core Qualcomm Snapdragon 695 SoC மூலம் இயக்கப்படுகிறது.

கேமரா பற்றி பேசினால் Z7 Pro 5G ஆனது 64MP சாம்சங் ப்ரைமரி பின்புற சென்சார் மற்றும் 2MP டெப்த் சென்சார் ஆகியவற்றைப் வழங்குகிறது இந்த போனில் செல்ஃபி கேமராவுக்கான 16எம்பி சென்சார் உள்ளது. இதற்கிடையில், Vivo V29e இல் 64MP ப்ரைமரி சென்சார் உள்ளது, இது 8MP அல்ட்ராவைட் ஆங்கிள் லென்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த போனில் வீடியோ கால்களுக்கு 50எம்பி செல்ஃபி கேமரா உள்ளது.

iQOO Z7 Proஅம்சத்தை பற்றி பேசினால்,  66W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 4600mAh பேட்டரி இதில் நிறுவப்பட்டுள்ளது. Vivo V29e ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரியில் இயங்குகிறது மற்றும் 44W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இரண்டு சாதனங்களும் 5G, 4G, Wi-Fi, Bluetooth, GPS மற்றும் USB Type-C க்னேக்டிவிட்டிகளை வழங்குகின்றன.

iQOO Z7 Pro 5G Vs Vivo V29e விலை ஒப்பிடு

iQOO Z7 Pro இன் ஆரம்ப விலை 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டிர்க்கு ரூ 23,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் 8 ஜிபி + 256 ஜிபி விருப்பம் ரூ 24,999 பட்டியலிடப்பட்டுள்ளது. மறுபுறம், Vivo V29e இன் 8GB + 128GB வேரியன்ட் ரூ.26,999க்கு வருகிறது, அதே சமயம் 8GB + 256GB மாடலை ரூ.28,999க்கு வாங்கலாம்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :