சீனாவைத் தொடர்ந்து, iQOO இப்போது இந்திய சந்தையில் iQOO 13 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த போன் இரண்டு ரேம் மற்றும் ஸ்டோரேஜ் வகைகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஸ்னாப்டிராகன் 8 எலைட் செயலியுடன் வரும் இந்த ஸ்மார்ட்போன், Realme GT 7 Pro உடன் போட்டியிடுகிறது. iQOO 13 மற்றும் Realme GT 7 Pro யின் இந்த இரண்டு போனையும் ஒப்பிட்டு இதில் எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம் வாங்க.
iQOO 13 யின் 12ஜிபி + 256ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.54,999 மற்றும் 16ஜிபி + 512ஜிபி ஸ்டோரேஜ் வகையின் விலை ரூ.55,999 ஆகும் . இதன் கலர் விருப்பங்களைப் பொறுத்தவரை, இந்த போன் லெஜண்ட் (வெள்ளை) மற்றும் நார்டோ கிரே ஆகியவற்றில் கிடைக்கிறது.
Realme GT 7 Pro இன் 12GB + 256GB ஸ்டோரேஜ் வகையின் விலை ரூ.59,999 மற்றும் 16GB + 512GB ஸ்டோரேஜ் வகையின் விலை ரூ.65,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் மார்ஸ் ஆரஞ்சு மற்றும் கேலக்ஸி கிரே கலர்களில் வருகிறது.
iQOO 13 ஆனது ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் செயலியுடன் கூடிய சூப்பர் கம்ப்யூட்டிங் சிப் Q2 ஐக் கொண்டுள்ளது. அதேசமயம் Realme GT 7 Pro ஆனது 1100MHz Adreno 830 GPU உடன் octa core Qualcomm Snapdragon 8 Elite 3nm ப்ரோசெசர் கொண்டுள்ளது.
iQOO 13 இல் 12GBRAM/16GB RAM மற்றும் 256GB/512GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் உள்ளது. அதேசமயம் Realme GT 7 Pro ஆனது 12GB RAM/16GB LPDDR5X ரேம் மற்றும் 256GB/512GB UFS 4.0 இன்பில்ட் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது.
iQOO 13 ஆனது Android 15 ஐ அடிப்படையாகக் கொண்ட Funtouch OS 15 இயங்குதளத்தில் வேலை செய்கிறது. அதேசமயம் Realme GT 7 Pro ஆனது ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான Realme UI 6.0 இயங்குதளத்தில் செயல்படுகிறது.
iQOO 13 ஆனது 6,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 120W வேகமான சார்ஜிங் மற்றும் 100W WPD/PPS சார்ஜிங்கை ஆதரிக்கிறது. அதேசமயம் Realme GT 7 Pro ஆனது 5,800mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 120W வேகமான சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது .
iQOO 13 யின் கனெக்சன் விருப்பங்களில் 3.5 mm ஆடியோ ஜாக், டூயல் சிம் ஆதரவு, 5G SA/NSA, GPS, NFC, டூயல் 4G VoLTE, Wi-Fi 7, ப்ளூடூத் 5.4, GPS மற்றும் USB Type C போர்ட் ஆகியவை அடங்கும். Realme GT 7 Pro இன் இணைப்பு விருப்பங்களில் 5G SA/NSA, Dual 4G VoLTE, Wi-Fi 7, ப்ளூடூத் 5.4, GPS, NFC மற்றும் USB Type C போர்ட் ஆகியவை அடங்கும்.
செக்யுரிட்டி பற்றி பேசினால் iQOO 13 யில் 3D அல்ட்ராசோனிக் சிங்கிள் பிங்கர்ப்ரின்ட் சென்சார் உள்ளது. அதேசமயம் ரியல்மி ஜிடி 7 ப்ரோ பாதுகாப்பிற்காக இன்-டிஸ்ப்ளே அல்ட்ராசோனிக் கைரேகை சென்சார் கொண்டுள்ளது.
இதையும் படிங்க:Oppo Find X8 Pro vs Vivo X200 Pro: இந்த இரண்டு ப்ளாக்ஷிப் போனில் எது பெஸ்ட்?