iQOO 13 vs Realme GT 7 Pro புதுசா வந்த இந்த 2 போனில் எது பெஸ்ட்

iQOO 13 vs Realme GT 7 Pro புதுசா வந்த இந்த 2 போனில் எது பெஸ்ட்

சீனாவைத் தொடர்ந்து, iQOO இப்போது இந்திய சந்தையில் iQOO 13 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த போன் இரண்டு ரேம் மற்றும் ஸ்டோரேஜ் வகைகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஸ்னாப்டிராகன் 8 எலைட் செயலியுடன் வரும் இந்த ஸ்மார்ட்போன், Realme GT 7 Pro உடன் போட்டியிடுகிறது. iQOO 13 மற்றும் Realme GT 7 Pro யின் இந்த இரண்டு போனையும் ஒப்பிட்டு இதில் எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம் வாங்க.

iQOO 13 vs Realme GT 7 Pro:விலை

iQOO 13 யின் 12ஜிபி + 256ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.54,999 மற்றும் 16ஜிபி + 512ஜிபி ஸ்டோரேஜ் வகையின் விலை ரூ.55,999 ஆகும் . இதன் கலர் விருப்பங்களைப் பொறுத்தவரை, இந்த போன் லெஜண்ட் (வெள்ளை) மற்றும் நார்டோ கிரே ஆகியவற்றில் கிடைக்கிறது.

Realme GT 7 Pro இன் 12GB + 256GB ஸ்டோரேஜ் வகையின் விலை ரூ.59,999 மற்றும் 16GB + 512GB ஸ்டோரேஜ் வகையின் விலை ரூ.65,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் மார்ஸ் ஆரஞ்சு மற்றும் கேலக்ஸி கிரே கலர்களில் வருகிறது.

iQOO 13 vs Realme GT 7 Pro:டிஸ்ப்ளே

  • iQOO 13 யில் 6.82 2K AMOLED டிஸ்ப்ளே உடன் வருகிறது, 2K 3168×1440 ரெசளுசன் 144Hz ரெப்ராஸ் ரேட் மற்றும் 4500 நிட்ஸ் ப்ரைட்னாஸ் இருக்கிறது
  • Realme GT 7 Pro ஆனது 6.78-இன்ச் 8T LTPO Eco² OLED பிளஸ் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, அதன் ரேசளுசன் 2780×1264 பிக்சல்கள், 6000 nits ஹை ப்ரைட்னாஸ் இருக்கிறது.

iQOO 13 vs Realme GT 7 Pro:ப்ரோசெசர்

iQOO 13 ஆனது ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் செயலியுடன் கூடிய சூப்பர் கம்ப்யூட்டிங் சிப் Q2 ஐக் கொண்டுள்ளது. அதேசமயம் Realme GT 7 Pro ஆனது 1100MHz Adreno 830 GPU உடன் octa core Qualcomm Snapdragon 8 Elite 3nm ப்ரோசெசர் கொண்டுள்ளது.

iQOO 13 vs Realme GT 7 Pro:ஸ்டோரேஜ்

iQOO 13 இல் 12GBRAM/16GB RAM மற்றும் 256GB/512GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் உள்ளது. அதேசமயம் Realme GT 7 Pro ஆனது 12GB RAM/16GB LPDDR5X ரேம் மற்றும் 256GB/512GB UFS 4.0 இன்பில்ட் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது.

iQOO 13 vs Realme GT 7 Pro: ஒப்பரேட்டிங் சிஸ்டம்.

iQOO 13 ஆனது Android 15 ஐ அடிப்படையாகக் கொண்ட Funtouch OS 15 இயங்குதளத்தில் வேலை செய்கிறது. அதேசமயம் Realme GT 7 Pro ஆனது ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான Realme UI 6.0 இயங்குதளத்தில் செயல்படுகிறது.

iQOO 13 vs Realme GT 7 Pro: கேமரா செட்டப்

  • iQOO 13 யின் பின்புறம் f/1.88 துளை கொண்ட 50-மெகாபிக்சல் முதன்மை கேமரா, f/2.0 துளை கொண்ட 50-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் f/1.85 அப்ரட்ஜர் கொண்ட 50-மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. முன்புறத்தில், f/2.45 அப்ரட்ஜர் கொண்ட 32 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
  • Realme GT 7 Pro யின் பின்புறம் OIS ஆதரவு மற்றும் f/1.8 துளை கொண்ட 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா, f/2.2 அப்ரட்ஜர் கொண்ட 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் f/2.6120 அப்ரட்ஜர் மற்றும் 50-மெகாபிக்சல் 3x பெரிஸ்கோப் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஹைப்ரிட் ஜூம் டெலிஃபோட்டோ கேமரா வழங்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில், f/2.45 அப்ரட்ஜர் கொண்ட 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

iQOO 13 vs Realme GT 7 Pro: பேட்டரி பேக்கப்

iQOO 13 ஆனது 6,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 120W வேகமான சார்ஜிங் மற்றும் 100W WPD/PPS சார்ஜிங்கை ஆதரிக்கிறது. அதேசமயம் Realme GT 7 Pro ஆனது 5,800mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 120W வேகமான சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது .

iQOO 13 vs Realme GT 7 Pro: செக்யுரிட்டி ஆப்சன்

iQOO 13 யின் கனெக்சன் விருப்பங்களில் 3.5 mm ஆடியோ ஜாக், டூயல் சிம் ஆதரவு, 5G SA/NSA, GPS, NFC, டூயல் 4G VoLTE, Wi-Fi 7, ப்ளூடூத் 5.4, GPS மற்றும் USB Type C போர்ட் ஆகியவை அடங்கும். Realme GT 7 Pro இன் இணைப்பு விருப்பங்களில் 5G SA/NSA, Dual 4G VoLTE, Wi-Fi 7, ப்ளூடூத் 5.4, GPS, NFC மற்றும் USB Type C போர்ட் ஆகியவை அடங்கும்.

செக்யுரிட்டி பற்றி பேசினால் iQOO 13 யில் 3D அல்ட்ராசோனிக் சிங்கிள் பிங்கர்ப்ரின்ட் சென்சார் உள்ளது. அதேசமயம் ரியல்மி ஜிடி 7 ப்ரோ பாதுகாப்பிற்காக இன்-டிஸ்ப்ளே அல்ட்ராசோனிக் கைரேகை சென்சார் கொண்டுள்ளது.

இதையும் படிங்க:Oppo Find X8 Pro vs Vivo X200 Pro: இந்த இரண்டு ப்ளாக்ஷிப் போனில் எது பெஸ்ட்?

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo