iPhone 16 Pro Max VS iPhone 15 Pro Max: விலை மற்றும் அம்சங்களில் எவ்வளவு வித்தியாசம்?
Apple iPhone 16 Pro Max அதிகாரபூர்வமாக அறிமுகம் செய்தது, இது iPhone 15 Pro Max இன் அதே ஜெனறேசனின் புதிய போனகும் இப்போது ஆப்பிளின் ஸ்மார்ட்போன் போர்ட்ஃபோலியோ புதிய ஸ்மார்ட்போன் சீரிஸ் மூலம் மேலும் அதிகரித்துள்ளது. இரண்டு போன்களின் விலையைப் பற்றி நாம் பேசினால், அதைப் பார்க்கும்போது இவை இரண்டும் பிரீமியம் போன்கள் என்று யூகிக்க முடியும். இதை தவிர இதன் சிறப்பம்சமும் பிரீமியமாக இருக்கும் இப்பொழுது iPhone 16 Pro Max மற்றும் iPhone 15 Pro Max இந்த இரண்டு போன்களில் எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம்.
iPhone 16 Pro Max vs iPhone 15 Pro Max: இரண்டு போனின் விலை
iPhone 16 Pro Max ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை 256GB மாடலுக்கு ரூ.1,44,900 ஆகும். இருப்பினும், 1TB சேமிப்பு கொண்ட போனின் டாப் எண்ட் மாடல் ரூ.1,69,900 விலையில் வருகிறது. அதேசமயம், iPhone 15 Pro Max பற்றி பேசுகையில், இந்த போனின் 256GB மாடலின் விலை ரூ.1,39,900 ஆகும். இருப்பினும், போனின் 1TB ஸ்டோரேஜ் மாடல் ரூ.1,69,900 விலையில் வருகிறது. சமீபத்திய போனில், ஹை எண்டு மாடலின் விலை முந்தைய போனின் விலையிலேயே வைக்கப்பட்டுள்ள போதிலும், அடிப்படை மாடலின் விலையை நிறுவனம் உயர்த்தியுள்ளது. இந்த விலை வித்தியாசம் புதிய போனின் அம்சங்கள் பற்றி பார்க்கலாம்.
iPhone 16 Pro Max vs iPhone 15 Pro Max: டிசைன்
இந்த இரண்டு iPhone 16 Pro Max மற்றும் iPhone 15 Pro Max ஸ்மார்ட்போனில் சிக்னேஜர் டிசைன் வழங்கப்படுகிறது இரண்டிலும் நீங்கள் பிரீமியம் டைட்டானியம் சட்டகம் மற்றும் பீங்கான் கவசம் ஆகியவற்றைப் பெறுவீர்கள். இருப்பினும், iPhone 16 Pro Max வடிவமைப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த நேரத்தில் நீங்கள் அதிக ப்ரீகுவன்ட் கலர்கள் மற்றும் சிறந்த ஆர்கொநோமிநேசன் வழங்குகிறது, இருப்பினும், இரண்டு போன்களிலும் டிஸ்ப்ளே ஒரே மாதிரியாக உள்ளது.
iPhone 16 Pro Max vs iPhone 15 Pro Max:டிஸ்ப்ளே
இந்த போனின் டிஸ்ப்ளே பற்றி பேசினால், இதில் 6.7 இன்ச் யின் Super Retina XDR OLED டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது, மேலும் இதில் ProMotion கொண்டுள்ளது மேலும் இந்த போனிலும் 120Hz ரெப்ராஸ் ரேட் வழங்கப்படுகிறது.
இது தவிர, ப்ரைட்னஸ் யின் சைசும் ஒரே மாதிரியாக இருக்கும். இரண்டிலும் நீங்கள் 2000 நிட்களின் ப்ரைட்னஸ் வழங்குகிறது.
iPhone 16 Pro Max vs iPhone 15 Pro Max: ப்ரோசெசர்
iPhone 16 Pro Max ஸ்மார்ட்போன் மிக பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது , இதில் Apple A18 Pro Bionic சிப் உள்ளது, இது 3nm செயல்பாட்டில் தயாரிக்கப்படுகிறது. ஐபோன் 15 ப்ரோ மேக்ஸில் இருக்கும் ஏ17 ப்ரோ சிறப்பாகவும் வேகமாகவும் இருக்கிறது. A18 சிப்பில் 6-கோர் CPU மற்றும் 6-Core GPU உள்ளது. இது தவிர, iPhone 16 Pro Max இல் AI சிப் வழங்குகிறது இது இந்த போனை ஒரு சிறந்த போனாக மாற்றுகிறது.
iPhone 16 Pro Max vs iPhone 15 Pro Max: கேமரா எது பெஸ்ட்
கேமரா பற்றி பேசினால், இந்த இரண்டு போனிலும் சிறந்த கேமரா வழங்கப்படுகிறது, இந்த இரண்டு போனிலும் ஒரு 48MP யின் மெயின் கேமரா வழங்கப்படுகிறது, இருப்பினும் iPhone 16 Pro Max யின் கேமரா நிகவும் சிறப்பாக இருக்கிறது இதில் 5x Optical Zoom வைக்கப்பட்டுள்ளது ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் சிறந்த கேமரா செட்டிங்கை கொண்டுள்ளது என்பதை இங்கே கூறலாம்.
iPhone 16 Pro Max vs iPhone 15 Pro Max: பேட்டரி
iPhone 16 Pro Max ஒரு நல்ல பேட்டரியை பார்க்கலாம். உண்மையில், இது A18 ப்ரோ சிப்பைக் கொண்டுள்ளது, அதனால்தான் இது உங்களுக்கு நல்ல பேட்டரி பவரை தருகிறது, மேலும் இந்த ப்ரோசெசரின் மூலம் போனில் சிறப்பாக மாறும். இரண்டு போன்களிலும் 25W வயர்லெஸ் சார்ஜிங் பவர் உள்ளது, இதை நீங்கள் MafSafe மூலம் வழங்குகிறது இது தவிர, iPhone 16 Pro Max யில் சிறந்த தர்மல் மேனேஜ்மென்ட் வழங்குகிறது இதன் மூலம், போன் சூடாகாமல் வேகமாக சார்ஜ் செய்ய முடியும்.
iPhone 16 Pro Max vs iPhone 15 Pro Max: புதுசா என்ன இருக்கு
iPhone 16 Pro Max யில் புதுசா உங்களுக்கு கேமரா கண்ட்ரோல் வழங்கப்படுகிறது, இதை தவிர இதில் எக்சன் பட்டனும் இருக்கிறது. இருப்பினும் இதே போன்ற அம்சம் iPhone 15 Pro Max யிலும் பார்க்க முடிந்தது கேமரா கண்ட்ரோல் பட்டங்கள் கஸ்டமர்களுக்கு கேமரா செட்டிங்களை பெரிதாக்க, கைப்பற்ற மற்றும் மாற்றுவதற்கான சுதந்திரத்தை வழங்குகிறது
இதையும் படிங்க: Apple யின் iPhone 16 Pro மற்றும் 16 Pro Max பல அதிரடி அம்சங்களுடன் அறிமுகம்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile