iPhone 16 Plus vs iPhone 16 Pro Max: எது இதில் பெரியது எந்த iPhone மாடல் சிறந்தது

Updated on 07-Oct-2024

Apple சமிபத்தில் அதன் லேட்டஸ்ட் iPhone 16 சீரிஸ் இந்தியாவில் மற்றும் குளோபல் சந்தையில் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது, புதிய மாடலின் வரிசையின் கீழ் iPhone 16 Plus மற்றும் iPhone 16 Pro Max இந்த இரு போனும் சிறிது பெரிய டிசைனுடன் அறிமுகம் செய்யப்பட்டது இந்த இரு போனும் டாப் மாடல் என கூறப்படுகிறது iPhone 16 Plus மற்றும் iPhone 16 Pro Max இந்த இரு போனிலும் எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம்.

iPhone 16 Plus vs iPhone 16 Pro Max:டிசைன்

ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் அதன் 6.9 இன்ச் டிஸ்ப்ளேவுடன் தனித்து நிற்கிறது, இது இன்றுவரை மிகப்பெரிய ஐபோன் ஆகும். இது 163 மிமீ x 77.6mm x 8.25 mm அளவைக் கொண்டுள்ளது. ஒப்பிடுகையில், ஐபோன் 16 பிளஸ் அதன் முன்னோடியிலிருந்து 6.7 இன்ச் அளவைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது, இது 160.9 mm x 77.8 மிமீ x 7.8 mm அளவைக் கொண்டுள்ளது.

iPhone 16 Pro Max யில் பயனர்களுக்கு ஒரு கிரேட் 5 டைடானியம் பிரேம் கொண்டுள்ளது அதுவே iPhone 16 Plus யில் அலுமினியம் பில்ட் இருக்கிறது இரண்டு மாடல்களும் இப்போது ஜூம் செய்வதற்கும் போட்டோ எடுப்பதற்கும் ஒரு கொள்ளளவு கொண்ட கேமரா கண்ட்ரோல் பட்டனைக் கொண்டுள்ளது, இது சீரிஸ்க்கான புதிய கூடுதலாகும். மேலும், ஐபோன் 16 பிளஸில் உள்ள கேமரா பம்ப், இடஞ்சார்ந்த வீடியோ ரெக்கார்டிங் இடமளிக்கும் வகையில் செங்குத்து இரட்டை கேமரா ஏற்பாட்டுடன் ரீடிசைன் செய்யப்பட்டுள்ளது.

iPhone 16 Plus vs iPhone 16 Pro Max: டிஸ்ப்ளேவில் என்ன வித்தியாசம்

iPhone 16 Pro Max யில் ஒரு 6.9-இன்ச் OLED XDR டிஸ்ப்ளே பார்டர் ரிடக்சன் ஸ்டரக்ஜர் (BRS) மற்றும் ProMotion டெக்நோலாஜி கொண்டுள்ளது மேலும் இது 1-120Hz. ரெப்ராஸ் ரெட்டுடன் வருகிறது. அதுவே iPhone 16 Plus போனில் 6.7 இன்ச் டிஸ்ப்ளே 60Hz ரெப்ராஸ் ரேட் மேலும் இதில் 2000 நிட்ஸ் பீக் ப்ரைட்னாஸ் வழங்கப்படுகிறது, இந்த இரு மாடலிலும் டைமணிக் ஐலேன்ட் மற்றும் பேஸ் ID பயோமெட்ரிக் சிஸ்டம் உடன் வருகிறது.

iPhone 16 Plus vs iPhone 16 Pro Max:பர்போமான்ஸ் மற்றும் சாப்ட்வேர்

இரு iPhone 16 Plus மற்றும் iPhone 16 Pro Max யில் புதிய A18 சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது மேலும் இதில் அட்வான்ஸ்ட் 3nm டெக்னாலஜி முந்தைய ஜெனரேசன் விட CPU பர்போமான்சில் 15 சதவிகிதம் முன்னேற்றம் மற்றும் GPU பர்போமான்சில் 20 சதவிகிதம் அதிகரிப்பதாக ஆப்பிள் கூறுகிறது. ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ், ஏ18 ப்ரோ எனப்படும் A18 யின் சற்று மேம்பட்ட வேர்சநிளிருந்து பயனடைகிறது.

இதன் மறுபக்கம் iPhone 16 யில் iOS 18, யில் இயங்குகிறது மேலும் இது AI tools, ஆப் லோகிங் உடன் Face ID,மற்றும் புதிய கஸடமைஸ் ஆப்சனுடன் ஹோம் ஸ்க்ரீனில் வருகிறது இந்த அப்டேட் RX மெசேஜ் மற்றும் அப்டேட் செய்யப்பட கட்டுப்பாட்டு மைய செயல்பாட்டை சப்போர்ட் செய்கிறது.

iPhone 16 Plus vs iPhone 16 Pro Max: கேமரா சிஸ்டம்.

iPhone 16 Pro Max யில் புதிய 48MP மெயின் கேமரா உடன் 1/2.6- இன்ச் சென்சார் மற்றும் இதில் 12MP அல்ட்ரா வைட் கேமரா வழங்கப்படுகிறது, iPhone 16 Plus பழைய 12MP அல்ட்ராவைடு கேமரா ஆனால் வேகமான f/2.2 அப்ரட்ஜருடன். ஐபோன் 16 ப்ரோ மேக்ஸில் 5x ஆப்டிகல் ஜூம் லென்ஸும் உள்ளது, அதே நேரத்தில் ஐபோன் 16 பிளஸ் பிரதான சென்சாரிலிருந்து டிஜிட்டல் ஜூமை நம்பியுள்ளது.

வீடியோ ரெக்கார்டிங்க்கு Phone 16 Pro Max யில் 4K 120 பிரேம்ஸ் ஒவ்வொரு செகண்ட் டால்பி விசன் சப்போர்ட் செய்கிறது அதுவே iPhone 16 Plus யில் 080p at 120 FPS அல்லது 240 FPS, மற்றும் 4K at 60 FPSசப்போர்ட் செய்கிறது

iPhone 16 Plus vs iPhone 16 Pro Max: விலை

iPhone 16 Plus 128GB யின் ஆரம்ப விலை 89,900 யில் அறுக்கிறது அதுவே அதன் மாடலின் விலை 56GB வேரியன்ட் 99,900ரூபாய் ஆகும் அதுவே அதன் 512GB மாடலின் விலை 1,19,900ரூபாயாகும் மேலும் இது ப்ளாக், பிங்க் Teal, Ultramarine, மற்றும் White.கலரில் வருகிறது அதுவே iPhone 16 Pro Max 256GB மாடலுக்கு ₹1,44,900, 512GB மாடலுக்கு ₹1,64,900 மற்றும் 1TB மாடலின் விலை ₹1,84,900. இது கருப்பு டைட்டானியம், பாலைவன டைட்டானியம், இயற்கை டைட்டானியம் மற்றும் வெள்ளை டைட்டானியம் ஆகியவற்றில் வருகிறது.

iPhone 16 Plus vs iPhone 16 Pro Max: எது பெஸ்ட்

இந்த இரு iPhone 16 Plus மற்றும் iPhone 16 Pro Max பெரிய ஸ்க்ரீன் மற்றும் அதன் லேட்டஸ்ட் டெக்னாலஜி வழங்கபடுகிறது மேலும் Pro Max யில் கூடுதல் அம்சமாக ப்ரீமியம் மேட்ரியால் மற்றும் இதில் ஹை எண்டு ஸ்பெசிபிகேசன் வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க:iPhone 16 Pro Max VS iPhone 15 Pro Max: விலை மற்றும் அம்சங்களில் எவ்வளவு வித்தியாசம்?

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :