iPhone 14 vs iPhone 15 இதில் புதிசா என்ன இருக்கு பழசுக்கும் புதுசுக்கும் என்ன வித்தியாசம்

iPhone 14 vs iPhone 15 இதில்  புதிசா  என்ன இருக்கு பழசுக்கும்  புதுசுக்கும் என்ன வித்தியாசம்
HIGHLIGHTS

செப்டமபர் 12 அன்று நடந்த Apple நிகழ்வில் iPhone 15 series அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

கடந்த ஆண்டு அறிமுகமான iPhone 14க்கும் iPhone 15க்கும் என்ன வித்தியாசம் இதில் அப்படி என்ன புதுசா கொண்டு வந்து இருக்காங்க

iPhone 15 செப்டம்பர் 15 அன்று மாலை 5:30 மணிக்கு தொடங்கும், மேலும் அவை செப்டம்பர் 22 முதல் வாங்குவதற்கு கிடைக்கும்.

செவ்வாய்கிழமை அதாவது  செப்டமபர் 12 அன்று நடந்த  Apple நிகழ்வில்   iPhone 15 series அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இதில் iPhone 15, iPhone 15 Plus, iPhone 15 Pro மற்றும் iPhone 15 Pro Max ஆகியவை அடங்கும். ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 பிளஸ் ஆகியவை அடிப்படை வேரியன்ட் ஆகும் மேலும் இதில் இன்று நாம் கடந்த ஆண்டு அறிமுகமான iPhone 14க்கும் iPhone 15க்கும் என்ன  வித்தியாசம் இதில் அப்படி என்ன புதுசா  கொண்டு வந்து இருக்காங்க  விலையில்  எவ்வளவு வித்தியாசம்  என்பதை பற்றி பார்க்கலாம்.

iPhone 14

iPhone 14 vs iPhone 15 Price comparison: 

iphone 15 இரண்டு ஐபோன்களுக்கும் இந்தியாவில் முன்பதிவு செப்டம்பர் 15 அன்று மாலை 5:30 மணிக்கு தொடங்கும், மேலும் அவை செப்டம்பர் 22 முதல் வாங்குவதற்கு கிடைக்கும்.

iPhone 15

ஆப்பிள் இந்தியாவில் ஐபோன் 15 மற்றும் ஐபோன்களை ரூ,79,900 மற்றும் ரூ,,89,900 ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதை ஐபோன் 14 உடன் ஒப்பிடுகையில், நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ₹69,900 விலையிலும், ஐபோன் 14 பிளஸ் ₹79,900 விலையிலும் கிடைக்கிறது.

iPhone 14 vs iPhone 15 specification comparison:

இந்த  இருபோனை பற்றி கம்பேர் செய்து  பார்த்தால்   iPhone 14 கடந்த ஆண்டு செப்டமபர்  மாதம் அறிமுகம் செய்யப்பட்டது,  iPhone 14 யின் அம்சங்களை பற்றி பேசுகையில்  இதில் ப்ரோசெசர் Apple A15 Bionic சிப்செட்  பொருத்தப்பட்டுள்ளது  இதை தவிர இது   128GB, 256GB மற்றும் 512GB வரையிலான  ஸ்டோரேஜ் விருப்பங்கள் கொண்டுள்ளது 

இந்த போனில்  6.1-இன்ச் கொண்ட சூப்பர் ரெட்டினா XDR டிஸ்ப்ளே உடன்  2532×1170 பிக்சளுடன்  இது செராமிக் ஷீல்ட்  ப்ரோடேக்சனுடன் வருகிறது  

கேமராவை பற்றி பேசுகையில் இந்த ஸ்மார்ட்போனில்  இரட்டை கேமரா  யூனிட் உடன் வருகிறது  இதன் ப்ரைமரி கேமரா  12MP சென்சார் மற்றும் 12MP அல்ட்ரா வைட் கேமராவும் இதன் பின் புறத்தில் கொண்டுள்ளது 

iPhone 14 vs iPhone 15  camera

அதுவே நாம் iPhone 15 பற்றி பேசுகையில் ஒப்பிடுகையில், iPhone 15 ஆனது A16 Bionic SoC உடன் பொருத்தப்பட்டுள்ளது, இதில் இரண்டு ஹை பர்போமான்ஸ் கோர்கள் உள்ளன, அவை பவர் கன்சம்ப்சன் 20 சதவிகிதம் குறைப்பு மற்றும் மேம்பட்ட பர்போமான்ஸ் 6-கோர் CPU உடன். ஆப்பிளின் ஈர்க்கக்கூடிய 16-கோர் நியூரல் என்ஜின் ஒரு வினாடிக்கு கிட்டத்தட்ட 17 டிரில்லியன் செயல்பாடுகளைக் கையாளும் திறன் கொண்டது.

iPhone 15 டிஸ்ப்ளே அதே 6.1 இன்ச்  ஆனால் இதில் ஆப்பிளின் செராமிக் ஷீல்ட் மெட்டீரியல் மற்றும் 2,000 nits ஹை ப்ரைட்ன்ஸ் சப்போர்ட்  செய்கிறது

iPhone 15 ப்ரைமரி கேமரா 2um குவாட் பிக்சல் சென்சார் மற்றும் f/1.6 அப்ரட்ஜர் கொண்ட 48 மெகாபிக்சல் வைட் ஆங்கிள் கேமரா ஆகும். ஸ்மார்ட்போனில் f/1.6 அப்ரட்ஜர் மற்றும் சென்சார் ஷிப்ட் ஸ்டெபிலைசேஷன் கொண்ட 12 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. போனின் முன்புறத்தில் 12 மெகாபிக்சல் TrueDepth கேமரா உள்ளது, இது புதிய கேமரா ஹைலேன்ட் பொருத்தப்பட்டுள்ளது.

iPhone 15

இதில் புதியதாக என்ன இருக்கிறது  ( what are new features)

ஐபோன் 14 மற்றும் 14 பிளஸ் மாடல்களில் காணப்படும் முக்கியமானது நோட்ச் மாற்றியமைக்கப்பட்டுள்ளது டைனமிக் ஐலேண்ட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது ஐபோன் 15 யில் உள்ள ஒரு தனித்துவமான அம்சமாகும். இந்த புதிய தொழில்நுட்பத்தின் பயன்பாடு பயனர்கள் தங்கள் ஐபோன்களுடன் தொடர்புகொள்வதற்கு மிகவும் உள்ளுணர்வு வழியை அனுமதிக்கும் என்று ஆப்பிள் கூறுகிறது.

மேலும் இந்த புதிய iphone15 யில்  USB Type-C டெக்னோலாஜி சார்ஜிங்  கொடுக்கப்பட்டுள்ளது, iPhone 14 சீரிச்ல் காணப்படும்  லைட்னிங் கனெக்டர்  கொடுக்கப்பட்டது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo