Infinix Zero 40 VS OnePlus Nord 4: இந்த இரு போனில் எது பெஸ்ட்?

Infinix Zero 40 VS OnePlus Nord 4: இந்த இரு போனில் எது பெஸ்ட்?

நீங்கள் ஒரு 30,000ரூபாய் பட்ஜெட்டில் சிறந்த கேமரா, சிறந்த பர்போமான்ஸ் போனை எதிர்ப்பார்த்து காத்து கொண்டிருந்தால் இது சரியான வாய்ப்பாக இருக்கும் Infinix Zero 40 மற்றும் OnePlus Nord 4 யில் எது பேஸ்ட்டாக இருக்கும் உண்மையில், இந்த இரண்டு போன்களும் லேட்டஸ்ட் மற்றும் சிறந்த அம்சங்களுடன் வருகின்றன. இந்த பட்ஜெட்டில் நீங்கள் ஃபோனைத் தேடுகிறீர்கள் என்றால், இந்த இரண்டு ஃபோன்களும் உங்களுக்கு நல்லதாகவும் சிறந்ததாகவும் இருக்கும். இருப்பினும், நாங்கள் இங்கே இரண்டையும் ஒப்பிடப் போகிறோம், அதன் பிறகு நீங்கள் எந்த போனை வாங்கலாம் என்பதை பார்க்கலாம்.

Infinix Zero 40 VS OnePlus Nord 4:டிஸ்ப்ளே மற்றும் டிசைன்

Infinix Zero 40 ஸ்மார்ட்போன் தவிர, OnePlus Nord 4 ஆனது வித்தியாசமான மற்றும் தனித்துவமான டிசைனில் வருகிறது. Infinix ஃபோன்களில் டூயல்-டோன் மேட் ஃபினிஷ் கிடைக்கும், இதைத் தவிர, Nord 4 பற்றி பேசினால், இந்த ஃபோன் ஆல்-மெட்டலுடன் வருகிறது. இருப்பினும், OnePlus ஃபோன்கள் டிசைன் அடிப்படையில் வலுவானதாகவும் நீடித்ததாகவும் இருக்கும் என்று கூறலாம். இருப்பினும் இதை தவிர இந்த போனில் IP54 ரேட்டிங் வழங்கப்படுகிறது இந்த போனை டஸ்ட் மற்றும் வாட்டார் ரேசிச்டண்டில் இருந்து பாதுகாக்கலாம்.

டிஸ்ப்ளே பற்றி பேசினால், Infinix Zero 40 போனில் ஒரு 6.78-இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே வழங்குகிறது இந்த டிஸ்ப்ளே 144Hz ரெப்ராஸ் ரேட் மற்றும் 1300 நிட்ஸ் ப்ரைட்னாஸ் உடன் வருகிறது

இதை தவிர OnePlus Nord 4 பற்றி பேசினால், இந்த போனில் 6.74-இன்ச் யின் 1.2K AMOLED டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது இந்த டிஸ்ப்ளே மூலம் நீங்கள் 120Hz ரெப்ராஸ் ரேட்டையும் 2150 nits ப்ரைட்னாஸ் வழங்குகிறது.

Infinix Zero 40 VS OnePlus Nord 4:கேமரா

கேமராவைப் பற்றி பேசினால், Infinix ஃபோன்களில் டிரிபிள் கேமரா செட்டிங் வழங்குகிறது . இந்த போனில் 108எம்பி பிரைமரி கேமரா, 50எம்பி அல்ட்ராவைடு கேமரா மற்றும் 2எம்பி டெப்த் சென்சார் உள்ளது, இதன் செல்பி கேமராவை பற்றி பேசினால், இதில் 50MP செல்பி கேமரா வழங்கப்படுகிறது, இது தவிர, ஒன்பிளஸ் நார்ட் 4 ஸ்மார்ட்போனில் டூயல் கேமரா செட்டிங் உள்ளது. இது 50MP ப்ரைம் கேமரா மற்றும் 8MP அல்ட்ராவைடு கேமராவைக் கொண்டுள்ளது. அதுவே OnePlus Nord 4 யில் செல்பி கேமரா 16MP முன் பக்கத்தில் இருக்கிறது.

Infinix Zero 40 VS OnePlus Nord 4:பர்போமான்ஸ்

MediaTek Dimensity 8200 Ultimate Processor Infinix போனில் கிடைக்கிறது, இதில் 12GB ரேம் மற்றும் 512GB வரை ஸ்டோரேஜ் சப்போர்ட் உள்ளது. அதேசமயம், OnePlus Nord 4 பற்றி பேசுகையில், இந்த போனில் Snapdragon 7+ Gen 3 ப்ரோசெசர் உள்ளது, இதை தவிர இதில் 12GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் சப்போர்டை கொண்டுள்ளது.

Infinix Zero 40 VS OnePlus Nord 4: விலை

Infinix Zero 40 ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.29,999. அதேசமயம், OnePlus Nord 4ஐப் பார்த்தால், 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி சேமிப்பக மாடலில் இந்த போனை ரூ.29,999 விலையில் வாங்கலாம்.

இதையும் படிங்க: Vivo V40 VS Vivo V40e: இந்த இரு போனில் என்ன வித்தியாசம் மற்றும் இதில் எது பெஸ்ட்?

இந்த இரு போனில் எது பெஸ்ட்?

Infinix Zero 40 மற்றும் OnePlus Nord 4 இரண்டு ஸ்மார்ட்போன்களும் அவற்றின் சொந்த அம்சங்களுடன் சிறந்த விருப்பங்கள். Infinix Zero 40 சிறந்த கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, குறிப்பாக 108MP ப்ரைமரி கேமரா மற்றும் 144Hz ரெப்ராஸ் ரேட் டிஸ்ப்ளே, இது கேமிங் மற்றும் போட்டோ ஆர்வலர்களை கவர்ந்திழுக்கிறது. மறுபுறம், OnePlus Nord 4 இன் உறுதியான ஆல்-மெட்டல் வடிவமைப்பு மற்றும் IP54 ரேட்டிங் ஆகியவை அதற்கு நீடித்துழைப்பையும் பிரீமியம் உணர்வையும் தருகிறது.

Infinix Zero 40 vs OnePlus Nord 4: சிறப்பம்சம்
ஒப்பிடு Infinix Zero 40 OnePlus Nord 4
விலை 29,999 (12GB + 256GB) 29,999 (8GB + 256GB)
டிசைன் டுயல் டோன் மேட் பினிஷ் ஆல் மெட்டல், IP54 ரேட்டிங்
டிஸ்ப்ளே 6.78-இன்ச் FHD+ AMOLED, 144Hz, 1300 நிட்ஸ் 6.74-இன்ச் 1.2K AMOLED, 120Hz, 2150 நிட்ஸ்
பர்போமான்ஸ் MediaTek Dimensity 8200 Qualcomm Snapdragon 7+ Gen 3
ரேம் மற்றும் ஸ்டோரேஜ் 12GB RAM, 512GB ஸ்டோரேஜ் 12GB RAM, 256GB ஸ்டோரேஜ்
கேமரா 108MP + 50MP + 2MP 50MP + 8MP
செல்பி கேமரா 50MP 16MP
Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo