Infinix Note 50x 5G vs Redmi 14C: ரூ,12000க்குள் வரும் இந்த போனில் எது பெஸ்ட் ?

Infinix Note 50x 5G vs Redmi 14C: ரூ,12000க்குள் வரும் இந்த போனில் எது பெஸ்ட் ?

Infinix நேற்று அதன் புதிய ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் Infinix Note 50x 5G அறிமுகம் செய்தது இதன் விலை ரூ,11499 ஆகும், இதற்க்கு சரியான போட்டியை தரும் வகையில் Redmi 14C களத்தில் இறக்கியுள்ளது இதன் விலையும் அதே ரேஞ்சில் இருப்பதால் இதன் டிஸ்ப்ளே, கேமரா ப்ரோசெசர் மற்றும் பேட்டரி போன்றவற்றை ஒப்பிட்டு எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம் வாங்க

Infinix Note 50x 5G vs Redmi 14C:டிசைன் மற்றும் டிஸ்ப்ளே

Infinix Note 50x 5G ஒரு வேகன் லெதர் மற்றும் மெட்டாலிக் பினிஷ் கொண்ட பேணல் இதன் பின்புறத்தில் இருக்கிறது இதனுடன் இதில் யூனிக டுயல் கேமரா செட்டப் உடன் டுயல் LED ப்ளாஷ் வழங்குகிறது , இதனுடன் இதில் அதிகம் நீடிதுலைக்க Military கிரேட் வழங்குகிறது மற்றும் IP64 ரேட்டிங் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் வழங்குகிறது

அதுவே Redmi 14C யில் பிளாஸ்டிக் பேணல், சர்க்குலர் கேமரா மாட்யுல் வழங்குகிறது மேலும் இதன் பின்புற பேணல் பார்க்க அட்ராக்டிவ் லுக் தருகிறது

Infinix Note 50x 5G ஆனது 6.67-இன்ச் HD+LCD டிஸ்ப்ளே மற்றும் 120Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் 672nits உச்ச பிரகாசம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. அதேசமயம், Redmi 14C ஆனது 6.88-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே மற்றும் 120 ஹெர்ட்ஸ் ரெப்ராஸ் ரேட் மற்றும் 600நிட்ஸ் ஹை ப்ரைட்னாஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

Infinix Note 50x 5G vs Redmi 14C:பர்போமான்ஸ்

Infinix Note 50x 5G யில் MediaTek Dimensity 7300 அல்டிமேட் சிப் வழங்குகிறது, இதனுடன் இது 8GB LPDDR4x RAM மற்றும் 128GB UFS 2.2 ஸ்டோரேஜ் வழங்குகிறது அதுவே இதன் மறுபக்கம் Redmi 14C யில் Mediatek Helio G81 Ultra சிப் வழங்குகிறது மற்றும் இதில் 8GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் வழங்குகிறது.

Infinix Note 50x 5G vs Redmi 14C: கேமரா

இப்பொழுது கேமரா பற்றி பேசுகையில் Infinix Note 50x 5G ஆனது இரட்டை LED ஃபிளாஷ் மற்றும் 4K வீடியோ பதிவுடன் கூடிய 50MP இரட்டை கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. அதேசமயம் Redmi 14C ஆனது 50MP டூயல் கேமரா மற்றும் 8MP செல்ஃபி கேமராவுடன் வருகிறது. எனவே, இரண்டு சாதனங்களும் ஒரே மாதிரியான கேமரா அனுபவத்தை வழங்கக்கூடும்.

Infinix Note 50x 5G vs Redmi 14C: பேட்டரி

பேட்டரி : கடைசியாக பேட்டரி பற்றி பேசினால், Infinix Note 50x 5G யில் 5500mAh பேட்டரி மற்றும் 45W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்குகிறது. அதுவே இதன் மறுபக்கம் Redmi 14C யில் 5160mAh பேட்டரியுடன் இதில் 18W பாஸ்ட் சார்ஜிங் வழங்குகிறது

Infinix Note 50x 5G vs Redmi 14C: விலை தகவல்

Infinix Note 50x 5G ஆனது ரூ. ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 6ஜிபி + 128ஜிபி ஸ்டோரேஜ் வகைக்கு ₹11499. மறுபுறம், Redmi 14C ஆனது 4GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் ₹10999 விலையில் வருகிறது.

இதையும் படிங்க : ட்ரில், சுவரை ஓட்டை போடும் தொல்லை இனி இல்லை Portable AC உங்கள் வீட்டை ஆக்கும் ஷிம்லா போன்ற கூல்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo