Honor 90 Vs Realme 11 Pro+:இதில் எது பெஸ்ட் கேமரா,பேட்டரி அனைத்தும் பட்டய கிளப்பும் ஸ்மார்ட்போன் எது?

Updated on 22-Sep-2023
HIGHLIGHTS

Honor அதன் புதிய Honor 90 5G ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது

இந்த போன் ரூ.30 ஆயிரம் விலையில் வருகிறது

இந்த இரண்டு போன்களுக்கு இடையே என்ன வித்தியாசம் இருக்கு

ஸ்மார்ட்போன் ப்ரண்டான Honor அதன் புதிய  Honor 90 5G ஸ்மார்ட்போனை இந்தியாவில்  அறிமுகம் செய்யப்பட்டது, இந்த ஃபோனில் Qualcomm Snapdragon 7 Generation 1 ப்ரோசெசர் மற்றும் 200 மெகாபிக்சல் கேமராவின் சப்போர்ட் கொண்டுள்ளது. Realme 11 Pro+ இந்த கேமராவுடன் வருகிறது, இது சிறிது நாட்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த போன் ரூ.30 ஆயிரம் விலையில் வருகிறது. இரண்டு போன்களிலும் பல அம்சங்கள் ஒரே மாதிரியாக உள்ளன., இந்த இரண்டு போன்களுக்கு  இடையே என்ன  வித்தியாசம்  இருக்கு கேமரா, டிஸ்ப்ளே, பேட்டரி  போன்ற  அணைத்தலும்  எது பேஸ்டாக  இருக்கும்.

Honor 90 5G Vs Realme 11 Pro Plus: டிஸ்ப்ளே

Honor 90 5G யில் 6.7 இன்ச் AMOLED டிஸ்ப்ளே இருக்கிறது, இதில்  (2664 x 1200 பிக்சல் ) ரேசளுசளுசனுடன் 1600 நிட்ஸ் யின்  பீக்  ப்ரைட்னாஸ் உடன்  வருகிறது, மேலும் இந்த போன் மூன்று  கலர்  விர்ப்பத்தில் வருகிறது டயமண்ட் சில்வர், எமரால்டு கிரீன் மற்றும் மிட்நைட் பிளாக் போன்றவை ஆகும்.

Realme 11 Pro Plus ஆனது 6.7-இன்ச்  FullHD+ வளைந்த AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, இது 120Hz அப்டேட்  வீதம் மற்றும் Dolby Atmos சப்போர்டுடன் வருகிறது. Realme 11 Pro Plus ஆனது அஸ்ட்ரல் பிளாக், சன்ரைஸ் பீஜ் மற்றும் ஒயாசிஸ் கிரீன் ஆகிய மூன்று வண்ண விருப்பங்களிலும் வருகிறது.

Honor 90 5G Vs Realme 11 Pro Plus:ப்ரோசெசர்

Honor 90 5G யில் குவல்கம் ஸ்னப்டிராகன் 7 ஜென் 1 ப்ரோசெசர் Adreno 644 GPU, 12GB வரை LPDDR5 ரேம் மற்றும் 512GB UFS 3.1 இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு உள்ளது. ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான மேஜிக் ஓஎஸ் 7.1 போனில் கிடைக்கிறது. நிறுவனம் இரண்டு வருட ஆண்ட்ராய்டு அப்டேட்களையும், மூன்று வருட பாதுகாப்பு அப்டேட்களையும் போனுடன் வழங்க உள்ளது.

Realme 11 Pro Plus ஆனது MediaTek Dimensity 7050 ப்ரோசெசர் 12 GB ரேம், 256 GB வரை ஸ்டோரேஜ் ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான Realme UI 4.0, இன்-டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் ஸ்கேனர் மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களுக்கான சப்போர்டுடன் வருகிறது இதை  தவிர இதில் இரண்டு வருட ஆண்ட்ராய்டு அப்டேட்களும் மற்றும் மூன்று வருட செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கின்றன.

Honor 90 5G Vs Realme 11 Pro Plus:கேமரா

Honor 90 5G யில் மூன்று பின் கேமரா செட்டப் வழங்கப்படுகிறது ஃபோனில் ப்ரைமரி கேமரா 200 மெகாபிக்சல்கள், செகண்டரி கேமரா 12 மெகாபிக்சல்கள் அல்ட்ரா வைட் ஆங்கிள் மற்றும் மூன்றாவது 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ்கள் உள்ளன. செல்ஃபிக்களுக்காக 50 மெகாபிக்சல் செல்ஃபி  கேமராவைக் கொண்டுள்ளது.

Realme 11 Pro Plus யில் மூன்று பின் கேமரா செட்டப் வழங்கப்படுகிறது, மேலும் இந்த போனில் 200 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா (OIS), 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் உள்ளது. இதனுடன் 32 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

Honor 90 5G Vs Realme 11 Pro Plus:பேட்டரி.

Honor 90 5G 5,000mAh பேட்டரியுடன் இதில் 66W வயர்ட் பாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன்  வருகிறது 

Realme 11 Pro Plus 5,000mAh பேட்டரியுடன் இதில் 100W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன்  வருகிறது 

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :