Honor 90 5G Vs Moto Edge 40: இந்த இரு மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போனில் எது பெஸ்ட் எது வாங்கலாம் ?

Honor 90 5G Vs Moto Edge 40: இந்த  இரு மிட்  ரேன்ஜ்  ஸ்மார்ட்போனில்  எது பெஸ்ட்  எது  வாங்கலாம் ?
HIGHLIGHTS

Honorஅதன் புதிய 5ஜி ஃபோன் Honor 90 5ஜி இந்தியாவில் அறிமுகம் செய்தது

ரூ.30 ஆயிரத்திற்கும் குறைவான ஆரம்ப விலையில் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

இரண்டு போன்களும் விலைக்கு ஏற்ப வலுவான அம்சங்களை வழங்குகிறது

ஸ்மார்ட்போன் பிராண்டான Honorஅதன் புதிய 5ஜி ஃபோன் Honor 90 5ஜி இந்தியாவில் அறிமுகம் செய்தது.இதன் விலை  ரூ.30 ஆயிரத்திற்கும் குறைவான ஆரம்ப விலையில் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போன குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜெனரேஷன் 1 ப்ரோசெசர் மற்றும் 200 மெகாபிக்சல் கேமரா சப்போர்ட்  கொண்டிருக்கும் . இந்த போனுக்கு  சரியான போட்டியாளராக Moto Edge 40 இருக்கும்  உடன் உள்ளது. இரண்டு போன்களும் விலைக்கு ஏற்ப வலுவான அம்சங்களை வழங்குகிறது  இந்த இரு ஸ்மார்ட்போன்களில்  எது பெஸ்ட்.

Honor 90 5G Vs Moto Edge 40: டிஸ்ப்ளே 

Honor 90 5G போனில்  6.7 இன்ச் கொண்ட AMOLED டிஸ்ப்ளே இருக்கிறது, டிஸ்ப்ளே (2664 x 1200 பிக்சல்கள்) ரேசளுசன் 1600 நைட்ஸ் ஹை ப்ரைட்னஸ்  கொண்ட இந்த போன் டயமண்ட் சில்வர், எமரால்டு கிரீன் மற்றும் மிட்நைட் பிளாக் ஆகிய நிற விருப்பங்களில் வருகிறது.

Honor 90 5G display

Motorola Edge 40 போனில் 6.55 இன்ச் கொண்ட முழு HD ப்ளஸ்  pOLED  டிஸ்ப்ளே கொண்டிருக்கும், இது 144Hz அப்டேட் வீதம், 360Hz டச் செம்பளிங் வீதம் மற்றும் 1,200 நிட்களின் ஹை ப்ரைட்னஸ் வருகிறது. HDR10+ டிஸ்ப்ளே உடன் வருகிறது  மேலும் இந்த போனில் மூன்று நிற விருப்பங்களில் வருகிறது – எக்லிப்ஸ் பிளாக், லூனார் பிளாக் மற்றும் நெபுலா கிரீன்.ஆகும்.

Motorola edge 40 display

Honor 90 5G Vs Moto Edge 40:ப்ரோசெசர் 

Honor 90 5G யில் குவல்கம் ஸ்னப்டிராகன் 7 ஜென் 1 ப்ரோசெசர்  கொண்டிருக்கும்  இது Adreno 644 GPU, 12GB வரை LPDDR5 ரேம் மற்றும் 512GB UFS 3.1 இன்டெர்னல் ஸ்டோரேஜ்  உடன் வருகிறது. சாப்ட்வேர் பற்றி பேசுகையில், Android 13 அடிப்படையிலான Magic OS 7.1 போனில் கிடைக்கிறது. இரண்டு வருட ஆண்ட்ராய்டு அப்டேட்கள் மற்றும் மூன்று வருட செக்யுரிட்டி அப்டேட்கள் நிறுவனத்தின் ஃபோனுடன் கிடைக்கின்றன.

Motorola Edge 40 யில் மீடியாடேக்  Dimensity 8020 ப்ரோசெசர் கொண்டிருக்கும் இந்த  ஃபோன் 8GB LPDDR4X ரேம் மற்றும் 256GB UFS 3.1 ஸ்டோறேஜிர்க்கான சப்போர்டை கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 13 மற்றும் IP68 ரேட்டிங் போனுடன் கிடைக்கிறது. இதனுடன், இரண்டு வருட ஆண்ட்ராய்டு அப்டேட்களையும், மூன்று வருட பாதுகாப்பு அப்டேட்களையும் வழங்குவதாக நிறுவனம் உறுதியளித்துள்ளது.

Honor 90 5G Vs Moto Edge 40:கேமரா 

Honor 90 5G யில் ட்ரிப்பில் பின் கேமரா செட்டப் கொண்டிருக்கும் இந்த போனில் ப்ரைமரி கேமரா 200 மெகாபிக்சல்கள், செகண்டரி  கேமரா 12 மெகாபிக்சல்கள் அல்ட்ரா வைட் ஆங்கிள் மற்றும் மூன்றாவது 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ். செல்ஃபிக்களுக்காக 50 மெகாபிக்சல் முன்பக்கக் கேமராவைக் கொண்டுள்ளது.

Honor 90 5G

அதுவே  Moto Edge 40 யில் டுயள் பின் கேமரா செட்டப்  கொடுக்கப்பட்டுள்ளது, ஃபோனில் உள்ள ப்ரைமரி கேமரா இதில் 50 மெகாபிக்சல்கள், (ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன்) மற்றும் செகண்டரி லென்ஸ் 13 மெகாபிக்சல்கள் அல்ட்ரா வைட் ஆங்கிள் ஆகும். இதனுடன் ஒரு மேக்ரோ பார்வையும் உள்ளது. முன்பக்கத்தில் செல்பி எடுக்க 32 மெகாபிக்சல் கேமரா சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

Moto edge camera

Honor 90 5G Vs Moto Edge 40: பேட்டரி 

Honor 90 5G யில் 5,000mAh பேட்டரியுடன்  66W வயர்ட் சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது இந்த போனில் செக்யுயுரிட்டிக்கு  பின்கர்ப்ரின்ட் சென்சார் உள்ளது. போனில் கனெக்டிவிட்டி பற்றி பேசுகையில், இது 5G, 4G LTE, டூயல்-பேண்ட் Wi-Fi, ப்ளூடூத் 5.2, NFC, GPS மற்றும் USB Type-C போர்ட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

Honor 90 5G

Motorola Edge 40 யின் 4500எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது. இதன் மூலம், 68W டர்போபவர் வயர் சார்ஜிங் மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவு கிடைக்கிறது. கனெக்டிவிட்டி பற்றி பேசுகையில், டூயல் பேண்ட் வைஃபை, புளூடூத் 5.2, ஜிபிஎஸ், NFC மற்றும் USB டைப்-சி போர்ட் கிடைக்கிறது.

ஆகமொத்தம் இந்த இரு போனையும்  ஒப்பிடும்போது Honor 90 5ஜி கேமரா, பேட்டரி பவர் மற்றும் ப்ராசசர் போன்றவற்றில் முன்னணியில் உள்ளது., அதுவே மோட்டோ எட்ஜ் 40 வயர்லெஸ் சார்ஜிங், டிஸ்ப்ளே மற்றும் ஐபி68 மதிப்பீட்டில் முன்  நிலையில் இருக்கிறது..

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo