Google Pixel Fold vs Samsung Galaxy Z Fold 5 vs Oppo Find N2 Flip இந்த மூன்று போனில் எது உங்களின் தேர்வு ?

Google Pixel Fold vs Samsung Galaxy Z Fold 5 vs Oppo Find N2 Flip இந்த மூன்று போனில் எது உங்களின் தேர்வு ?
HIGHLIGHTS

உலகின் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் சந்தையானது, போல்டப்பில் வகையிலான தேர்வுகளின் கொண்டு வரப்பட்டுள்ளது

தொழில்நுட்பத் துறையில் மிகப்பெரிய பெயர்களில் இந்தியாவில் வெளியிட பல போல்டப்பில் போன்கள் தயாராக உள்ளன

Google Pixel Fold, Samsung Galaxy Z Fold 5 மற்றும் Oppo Find N2 Flip ஆகியவை மக்களின் கவனத்தை ஈர்க்கத் தயாராக உள்ளன.

உலகின் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் சந்தையானது, போல்டப்பில் வகையிலான தேர்வுகளின் கொண்டு வரப்பட்டுள்ளது . இந்த ஆண்டு மே முதல் ஜூலை வரையிலான காலக்கட்டத்தில், தொழில்நுட்பத் துறையில் மிகப்பெரிய பெயர்களில் இந்தியாவில் வெளியிட பல போல்டப்பில் போன்கள் தயாராக உள்ளன. Google Pixel Fold, Samsung Galaxy Z Fold 5 மற்றும் Oppo Find N2 Flip ஆகியவை மக்களின் கவனத்தை ஈர்க்கத் தயாராக உள்ளன.

Google Pixel Fold vs Samsung Galaxy Z Fold 5 vs Oppo Find N2 Flip  டிசைன் 

 போனின் டிசைன் பற்றி பேசினால், Samsung Galaxy Z Fold 5 அகலமாகவும் உயரமாகவும் 154.9 mm x 67.1 mm  x 13.4mm  டைமென்ஷன் மற்றும் வெயிட் 254 கிராம் எடையுடையது. அதேசமயம், கூகுள் பிக்சல் ஃபோல்ட் 139.7 மிமீ x 79.5 mm x 12.1 mm டைமென்ஷன் மற்றும் 283 கிராம் எடை கொண்டது. கடைசியாக, Oppo Find N2 Flip அளவுகள் 132.2 mm x 72.6 mm x 14.6 mm டைமென்ஷன் மற்றும் 233 கிராம் எடை உள்ளது..

கூகுள் பிக்சல் ஃபோல்ட் வெள்ளை நிறத்தில் கிடைக்கும் என்றும் கூகுளின் சமீபத்திய டீஸர் கருப்பு நிற வேரியண்ட்டை வெளிப்படுத்துகிறது என்றும் வதந்திகள் தெரிவிக்கின்றன. Oppo Find N2 Flip ஆனது Cloud White, Black மற்றும் Pine Green ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது. இருப்பினும், Samsung Galaxy Z Fold 5 பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை.

Google Pixel Fold vs Samsung Galaxy Z Fold 5 vs Oppo Find N2 Flip: டிஸ்பிளே.

Samsung Galaxy Z Fold 5 ஆனது 7.8 இன்ச் ஸ்க்ரீன் அளவு, 1768×2208 பிக்சல்கள் ரெஸலுசன் மற்றும் 363 ppi டென்சிட்டி கொண்ட டைனமிக் AMOLED டிஸ்பிளே கொண்டுள்ளது. அதேசமயம், கூகுள் பிக்சல் ஃபோல்டில் 7.6 இன்ச் ஸ்க்ரீன் அளவு, 1840×2208 பிக்சல்கள் ரெஸலுசன் மற்றும் 378 பிபிஐ டென்சிட்டி கொண்ட OLED டிஸ்ப்ளே உள்ளது. Oppo Find N2 Flip ஆனது 7.1 இன்ச் ஸ்க்ரீன் அளவு மற்றும் 370 ppi டென்சட்டி 1792 x 1920 பிக்சல்கள் ரெஸலுசன் கொண்ட AMOLED அம்சத்தையும் கொண்டுள்ளது.

Google Pixel Fold மற்றும் Oppo Find N2 Fold இரண்டும் 1200 nits மற்றும் 1550 nits பிரைட்னஸ் உடன் 120 Hz அப்டேட் வீதத்தைக் கொண்டுள்ளது. Oppo Find N2 Flip HDR 10+ ஆதரவை வழங்குகிறது. Samsung Galaxy Z Fold 5 பற்றிய விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

Google Pixel Fold vs Samsung Galaxy Z Fold 5 vs Oppo Find N2 Flip: பார்போமான்ஸ் (SoC)

மூன்று போனியும் ஆக்டா கோர் CPUகளில் 64 பிட் மற்றும் 4 nm ஃபேப்ரிக்கேஷனுடன் 12ஜிபி ரேம் செயலாக்கத்தில் இயங்குகின்றன. Samsung Galaxy Z Fold 5 Qualcomm Snapdragon 8 Gen 2 மற்றும் Oppo Find N2 Flip Qualcomm Snapdragon 8 Plus Gen 1 யில் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், Google Pixel Fold அதன் சொந்த Google Tensor G2 ஐப் பயன்படுத்துகிறது. Samsung Galaxy Z Fold 5 மற்றும் Oppo Find N2 Flip ஆனது Android 12 யில் இயக்கும், அதேசமயம் Google Pixel Fold அதன் பயனர்களுக்கு போல்டப்பில் போன்களுக்கு Android 13 ஐ வழங்க அமைக்கப்பட்டுள்ளது. Google Pixel Fold மற்றும் Oppo Find N2 Flip ஆகியவை Samsung Galaxy Z Fold 5 போலல்லாமல் 5G பேண்டுகளுக்கு  சப்போர்ட் செய்யும் 

Google Pixel Fold vs Samsung Galaxy Z Fold 5 vs Oppo Find N2 Flip: பேட்டரி 

சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 5ல் 4700 Mah , கூகுள் பிக்சல் ஃபோல்ட் 4821 Mah மற்றும் ஒப்போ ஃபைண்ட் என்2 ஃபிளிப் 4520 Mah பயன்படுத்தும் சிறந்த பேட்டரி பவரை சாதனங்கள் வழங்குகின்றன. Samsung Galaxy Z Fold 5 மற்றும் Google Pixel Fold முறையே 25W மற்றும் 30W உடன் வேகமான சார்ஜிங்கை வழங்குகிறது. Oppo Find N2 Flip ஸ்போர்ட்ஸ் Super VOOC, 67W சார்ஜிங் 10 நிமிடங்களில் 37% சார்ஜ் செய்ய உதவுகிறது. போல்டப்பில் பிரிவில் இயக்குவதற்கான சிறந்த அம்சம் ஆகும்.. அனைத்து போனிலும் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிஎம் ஸ்டோரேஜ் வேரியண்ட்டை வழங்குகின்றன

Google Pixel Fold vs Samsung Galaxy Z Fold 5 vs Oppo Find N2 Fold: கேமரா 

 மூன்று போன்களும் ட்ரிப்பில் கேமரா செட்-அப்பை கொண்டுள்ளது , சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்டு 5 ஸ்போர்ட்டிங் 50 எம்பி பிரைமரி கேமரா, 12 எம்பி, அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா மற்றும் 10 எம்பி டெலிஃபோட்டோ கேமராவுடன் கொண்டுள்ளது . Google Pixel Fold ஆனது 48 MP f/1.7, பிரைமரி கேமரா, 10 MP f/2.2, அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா மற்றும் 10 MP f/3.0, டெலிஃபோட்டோ கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. அதேசமயம், Oppo Find N2 Flip ஆனது 50 MP f/1.8 (84° field-of-view) பிரைமரி கேமரா, 48 MP f/2.2, அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா மற்றும் 32 MP f/2.0 டெலிஃபோட்டோ கேமரா ஆகியவற்றின் சக்திவாய்ந்த கலவையைக் கொண்டுள்ளது.

முன் கேமராக்களைப் பொறுத்தவரை, Samsung Galaxy Z Fold 5 ஆனது 12 MP முதன்மை கேமராவைக் கொண்டுள்ளது, Google Pixel Fold 10 MP f/2.2 முதன்மைக் கேமராவையும், Oppo Find N2 Flip 32 MP f/2.4, வைட் ஆங்கிள் பிரைமரி கேமராவையும் கொண்டுள்ளது. Find N2 ஆனது இரட்டை LED ஃபிளாஷையும் கொண்டுள்ளது.

Google Pixel Fold vs Samsung Galaxy Z Fold 5 vs Oppo Find N2 Flip:விலை மற்றும் அறிமுக தேதி.

Samsung Galaxy Z Fold 5 ஆனது சாம்சங்கின் டெவலப்பர்கள் மாநாட்டில் வெளியிடப்பட உள்ளது, அது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வதந்திகளின்படி, ஜூலை 12, 2023 அன்று வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாதனத்தின் விலை ₹165,000/- என எதிர்பார்க்கப்படுகிறது.

கூகுளின் டெவலப்பர்கள் மாநாட்டில் கூகுள் பிக்சல் ஃபோல்டு விரைவில் தொடங்க உள்ளது கூகுள் ஐ/ஓ 2023. நிகழ்வின் தேதி மே 10 என வெளியிடப்பட்டுள்ளது மற்றும் பிக்சல் ஃபோல்டின் வெளியீடு மே 11 அன்று இந்திய சந்தைகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. போனின் விலை ₹145,000 என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதலாக, Oppo Find N2 Flip ஏற்கனவே Flipkart இல் ₹94.890/-க்கு விற்கப்படுகிறது.

போல்டப்பில் போனின் கம்பேரிசன் செய்ததில் எது பெஸ்ட் என்று நீங்கள் நினைக்கிறீர்கள், இதில் உங்களின் தேர்வு எது?

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo