Google Pixel 9a vs Samsung Galaxy S24 FE: எந்த போன் பெஸ்ட் எது வாங்கலாம்

Updated on 24-Mar-2025

Google சமிபத்தில் அதன் குறைந்த விலை ஸ்மார்ட்போன் Google Pixel 9a அறிமுகம் செய்தது, மேலும் இதற்காக சரியான போட்டியை தரும் வகையில் Samsung Galaxy S24 FE சரியாக மோதும் விதமாக இருக்கிறது , மேலும் இந்த இரு போனின் டிஸ்ப்ளே,கேமரா, பேட்டரி போன்ற அம்சங்களை ஒப்பிட்டு இதில் எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம் வாங்க.

Google Pixel 9a vs Samsung Galaxy S24 FE: டிஸ்ப்ளே

Google Pixel 9a யில் 6.3 இன்ச் எக்டுவா pOLED டிஸ்ப்ளே வழங்குகிறது, இதில் 1080×2424 பிக்சல் ரேசளுசன் 120Hz ரெப்ராஸ் ரேட் 2700 நிட்ஸ் ப்ரைட்னாஸ் வழங்குகிறது. Samsung Galaxy S24 FE போனில் 6.7-இன்ச் யின் முழு HD+ AMOLED 2X டிஸ்ப்ளே உடன் வருகிறது 1080×2340 பிக்சல் மற்றும் 120Hz ரெப்ரஸ் ரேட் வழங்குகிறது.

Google Pixel 9a vs Samsung Galaxy S24 FE: ப்ரோசெசர்

கூகிள் பிக்சல் 9a நான்காவது தலைமுறை டென்சர் G4 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. அதே நேரத்தில், Samsung Galaxy S24 FE இல் Exynos 2400e ப்ரோசெசர் கொடுக்கப்பட்டுள்ளது.

Google Pixel 9a vs Samsung Galaxy S24 FE ஒப்பரேட்டிங் சிஸ்டம்

ஆண்ட்ராய்டு 15 இயங்குதளத்தில் இயங்குகிறது. அதே நேரத்தில், Samsung Galaxy S24 FE ஆனது Android 14 இயக்க முறைமையில் இயங்குகிறது.

Google Pixel 9a vs Samsung Galaxy S24 FE :ரேம் மற்றும் ஸ்டோரேஜ்

Google Pixel 9a யில் 8GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் வழங்குகிறது, Samsung Galaxy S24 FE யில் 8GB RAM மற்றும் 512GB வரையிலான அன்போர்ட் ஸ்டோரேஜ் வழங்குகிறது.

Google Pixel 9a vs Samsung Galaxy S24 FE :கேமரா

Google Pixel 9a யின் பின்புறம் OIS சப்போர்ட் மற்றும் f/1.7 அப்ரட்ஜர் கொண்ட 48-மெகாபிக்சல் ப்ரைமரி கேமராவையும், f/2.2 அப்ரட்ஜர் கொண்ட 13-மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமராவையும் கொண்டுள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ காலுக்காக f/2.2 அப்ரட்ஜர் கொண்ட 13 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது. Samsung Galaxy S24 FE யின் பின்புறம் OIS சப்போர்டுடன் 50-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா, 3x ஆப்டிகல் ஜூம் கொண்ட 8-மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா மற்றும் 12-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. செல்ஃபிக்களுக்காக 10 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது. கூகிள் பிக்சல் 9a யில் உள்ள கனெக்சன் வழங்குகிறது

Google Pixel 9a vs Samsung Galaxy S24 FE :பேட்டரி

Google Pixel 9a இந்த ஸ்மார்ட்போன் 33W வயர்டு மற்றும் 7.5W வயர்லெஸ் சார்ஜிங் சபோர்டுடன் 5,100mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. அதுவே Samsung Galaxy S24 FE போனில் 4,700mAh பேட்டரி வழங்குகிறது

Google Pixel 9a vs Samsung Galaxy S24 FE: கனெக்டிவிட்டி

Google Pixel 9a இல் உள்ள இணைப்பு விருப்பங்களில் 5G, 4G LTE, Wi-Fi 6E, ப்ளூடூத் 5.3, NFC, GPS, NavIC மற்றும் USB 3.2 Type-C போர்ட் ஆகியவை அடங்கும். அதேசமயம் Samsung Galaxy S24 FE ஆனது இரட்டை சிம் 5G, LTE, Wi-Fi 6E, ப்ளூடூத் 5.3 மற்றும் USB Type C போர்ட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

இதையும் படிங்க: Nothing Phone 3a vs iQOO Neo 10R: ரூ,25000 பட்ஜெட்டில் வரும் இந்த இரு போனில் எது பெஸ்ட்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :