ரூ.50,000க்கு கீழ் உள்ள எந்த மிட் ரேன்ஜ் ஃபோன் எது சிறந்தது என்பதில் குழப்பமா? எனவே கூகுள் தனது Google Pixel 8a ஸ்மார்ட்போனை சமீபத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது இந்த போனனது கூகுளின் சொந்த டென்சர் ஜி3 சிப்செட்டில் இயங்குகிறது மற்றும் 7 வருட OS அப்டேட்கள் ஜெமினி AI அம்சங்கள் மற்றும் டுயல் கேமரா செட்டிங்களுடன் வருகிறது.
இருப்பினும், சந்தையில் இன்னும் பல சிறந்த விருப்பங்கள் உள்ளன, அவை உங்களுக்கு குறைந்த அல்லது ஒத்த விலையில் சிறந்த அம்சங்களையும் பர்போமான்ஸ் வழங்க முடியும். இங்கே நாம் குறிப்பாக நத்திங் ஃபோன் 2 பற்றி பேசினால் இது தனித்துவமான டிசைனுடன் சிறந்த சிறப்பம்சங்கள் மற்றும் அம்சங்களை வழங்குகிறது. எனவே, இந்த இரண்டு போன்களையும் விரிவாக ஒப்பிட்டு, உங்களுக்கு எது சிறந்தது என்பதைக் கண்டறியவும்!
கூகுள் Pixel 8a யில் நீங்கள் ஒரு மெட்டல் பிரேம் வழங்குகிறது, இது தவிர, கொரில்லா கிளாஸ் 3 ப்ரோடேக்சன் அதன் டிஸ்ப்ளேயில் கிடைக்கிறது. தவிர, இந்த ஸ்மார்ட்போன் IP67 ரேட்டிங்கை வழங்குகிறது. மறுபுறம், நத்திங் ஃபோன் 2 ஐபோன் போன்ற பில்டை வழங்குகிறது, இந்த போனில் கஸ்டமர்கள் பிரீமியம் அலுமினிய பிரேம் பெற்றாலும், கிளாசும் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இப்போது டிஸ்ப்ளே பற்றி பேசினால், புதிய Pixel 8a போனனது 6.1-இன்ச் டிஸ்ப்ளேவுடன் வருகிறது, இது 2000 nits ஹை ப்ரைட்னஸ் வழங்குகிறது 120Hz வரை ரெப்ராஸ் ரெட்டை வழங்குகிறது. இதற்கிடையில், நத்திங் போன் 6.7-இன்ச் AMOLED ஸ்க்ரீனை கொண்டுள்ளது, இது 120Hz ரெப்ராஸ் ரேட் மற்றும் 500 nits பரைட்னஸ் சப்போர்ட் செய்கிறது.
கூகுளின் சமீபத்திய ஸ்மார்ட்போனில் கூகுள் டென்சர் ஜி3 சிப் பொருத்தப்பட்டுள்ளது, இது 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் உடன் சப்போர்ட் செய்கிறது இது தவிர, ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 ப்ரோசெசர் நத்திங் ஃபோன் 2 யில் கிடைக்கிறது.
OS மற்றும் சாப்ட்வேர் பற்றி பேசுகையில், கூகிளின் சமீபத்திய பிரீமியம் மிட்ரேஞ்ச் ஆண்ட்ராய்டு 14 ஒப்பரேட்டிங் சிஸ்டமில் இயங்குகிறது, மேலும் இந்த போனிர்க்கான 7 வருட OS அப்டேட் மற்றும் செக்யூரிட்டி கனேக்சங்களை நிறுவனம் உறுதியளித்துள்ளது. அதேசமயம், ஆண்ட்ராய்டு 13 பிளாட்பார்மை அடிப்படையாகக் கொண்ட நத்திங் ஓஎஸ் 2.0 உடன் ஃபோன் (2) அறிமுகம் செய்யப்பட்டது
போட்டோ எடுப்பதற்காக, Pixel 8a ஆனது இரட்டை பின்புற கேமரா செட்டிங் கொண்டுள்ளது, இதில் 64MP ப்ரைம் லென்ஸ் மற்றும் 13 அல்ட்ராவைட் லென்ஸ்கள் உள்ளன. மொபைலின் முன்பக்கத்தில் 13எம்பி செல்ஃபி ஷூட்டர் உள்ளது. ஒப்பிடுகையில், Nothing Phone 2 இல் 50MP ப்ரைமரி கேமரா, 50MP அல்ட்ராவைடு கேமரா மற்றும் 32MP முன்பக்க கேமரா உள்ளது.
இது தவிர, புதிய கூகுள் போனை இயக்க, 4492 mAh பேட்டரி இதில் வழங்கப்பட்டுள்ளது. நத்திங் ஃபோன் 2 இல் 4700mAh பேட்டரி உள்ளது, இது 45W வயர்லெஸ் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட கூகிள் பிக்சல் 8A யின் மிகப்பெரிய அம்சம் என்னவென்றால், சிறந்த தொழில்நுட்பம், மேஜிக் எடிட்டர் மற்றும் ஆடியோ மேஜிக் எரேசர் உள்ளிட்ட AI-இயங்கும் போட்டோ மற்றும் வீடியோ எடிட்டிங் டூலுடன் வரும் பிரிவில் முதல் ஸ்மார்ட்போன் இதுவாகும். 8x வரை சூப்பர் ரெஸ் ஜூம் மற்றும் மேஜிக் எரேசர் நைட் சைட் மற்றும் போட்டோ அன்ப்ளர் போன்ற அம்சங்களுடன் இந்த போன் வருகிறது.
இது தவிர, ஜெமினி பிக்சல் 8a-யிலும் வந்துள்ளது. இந்த இன் பில்ட் AI அசிஸ்டன்ட் அனைத்து வகையான படங்களையும் டைப் செய்யவும், பேசவும் மற்றும் சேர்க்கவும் உங்களை அனுமதிக்கிறது – உங்களுக்கு எந்த யோசனை தேவைப்பட்டாலும், thanks Note எழுதினாலும் அல்லது உங்கள் அடுத்த விடுமுறையைத் திட்டமிடினாலும், எல்லாவற்றையும் செய்ய முடியும். போனில் மற்ற அம்சங்களில் சர்க்கிள் டு சர்ச், AI-ஆல் இயங்கும் பிக்சல் கால் அசிஸ்ட் அம்சங்கள், ஆடியோ ஈமோஜி மற்றும் பல அடங்கும்.
மறுபுறம், நத்திங்ஸ் ஃபோனைப் பற்றி பேசினால், இந்த சிறப்பு அம்சங்கள் அதில் இல்லை. இந்த AI அம்சங்களுக்கு நன்றி, Pixel 8a இரண்டின் சிறந்த ஃபோன் என்ற தலைப்பை தெளிவாகக் கொடுக்க முடியும்.
இந்தியாவில் Google Pixel 8A இன் 8GB + 128GB வேரியண்டின் விலை ரூ.52,999 ஆக வைக்கப்பட்டுள்ளது. மறுபுறம், 8GB + 256GB வேரியண்டின் விலை ரூ.59,999. ஒப்பிடுகையில், நத்திங் ஃபோன் 2 யின் வெண்ணிலா வேரியன்ட் அதாவது 8 ஜிபி + 128 ஜிபி வேரியண்ட் தற்போது ஃபிளிப்கார்ட்டில் ரூ.37,999 விலையில் கிடைக்கிறது. இது தவிர, 12ஜிபி + 256ஜிபி மற்றும் 12ஜிபி + 512ஜிபி மாடல்களின் விலை முறையே ரூ.40,999 மற்றும் ரூ.49,999. ஆகும்
இதையும் படிங்க:OnePlus 12R VS Google Pixel 8a: இந்த புதிய போனில் எது பெஸ்ட்?
‘