iQOO 13 vs iQOO 12: இந்த இரண்டு ப்ளாக்ஷிப் போனில் என்ன வித்தியாசம்

Updated on 15-Nov-2024

iQOO 13 விவோ வின் சப் பிராண்ட் ஆகும் போது லேட்டஸ்ட் ப்ளாக்ஷிப் ப்ரீமியம் ஹார்ட்வேர் கான்பிக்ரேசன் உடன் வருகிறது கடந்த ஆண்டு மிக பெரிய வெற்றி தந்த iQOO 12 போனாக இருக்கிறது இதனால் இப்பொழுது iQOO 13 போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய முழு தயார் நடந்து வரும் நிலையில் இத போனில் Qualcomm Snapdragon 8 Elite ப்ரோசெசருடன் போனாக இருக்கும் இந்த போன் தற்பொழுது சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது

iQOO 13 மற்றும் iQOO 12 இந்த இரண்டு போனுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது இதில் எது பெஸ்ட் என்பதை இதன் டிஸ்ப்ளே,கேமரா, பேட்டரி மற்று பர்போமான்ஸ் போன்றவற்றை ஒப்பிட்டு பார்க்கலாம்.

iQOO 13 vs iQOO 12: டிசைன்

  • iQOO 13 போன் Black, Green, Silver, மற்றும் White போன்ற மூன்று கலரில் வருகிறது, இதன் டைமென்சன் 163.4 x 76.7 x 8mm மற்றும் இடை 201g/213 கிராம் இருக்கிறது
  • iQOO 12 போன் Black, Red, மற்றும் White கலரில் வருகிறது, இது 163.2 × 75.9 × 8.1mm டைமென்சன் மற்றும் இதன் இடை 198.5g/203.7g கிராம் இருக்கிறது

இருப்பினும், iQOO 13 யில் உள்ள ஒரு குறிப்பிடத்தக்க மேம்படுத்தல் அதன் IP ரேட்டிங் ஆகும். இது IP68/69 ரேட்டிங்கை கொண்டுள்ளது, இது iQOO 12 இன் IP64 ரெசிச்டன்ட் விட சிறந்த டஸ்ட் மற்றும் மழை பாதுகாப்பை வழங்குகிறது.

iQOO 13 ലോഞ്ച് ഉടൻ!

iQOO 12 ஐப் போலவே இருப்பதால், iQOO 13 இன் டிசைனை நிறுவனம் முழுமையாக மறுவடிவமைப்பு செய்யவில்லை. புதிய நிறம் காரணமாக, iQOO 13 உடன் iQOO 12 யிலிருந்து வேறுபடுத்துவது எளிது. கருப்பு மற்றும் வெள்ளை நிறங்கள் இரண்டு போனும் ஒரே மாதுரியாக இருந்தாலும்.

iQOO 13 vs iQOO 12:டிஸ்ப்ளே

  • இந்த இரு போனின் டிஸ்ப்ளே பற்றி பேசினால் முதலில் iQOO 13 யில் 6.82-இன்ச் QHD+ LTPO AMOLED டிஸ்ப்ளே மற்றும் 144Hz ரெப்ராஸ் ரேட் உடன் இதன் ரேசளுசன் 1440×3168 பிக்சல் இருக்கிறது மற்றும் 510ppi இருக்கிறது
  • இதன் மறுபக்கம் iQOO 12 யில் 6.78-inch FHD+ LTPO AMOLED டிஸ்ப்ளே 144Hz ரெப்ராஸ் ரெப்ராஸ் ரேட் மற்றும் இதில் 1260×2800 pixel ரேசளுசன் ,453ppi டென்சிட்டி இருக்கிறது

iQOO 13 சைஸ் சற்று பெரியதாக இருப்பதால், நிறுவனம் iQOO 12 ஐ விட சற்று பெரிய திரையை அதில் பொருத்தியுள்ளது. கூடுதலாக, iQOO 12 இன் FHD+/1.2K தெளிவுத்திறனுடன் ஒப்பிடும்போது iQOO 13 சிறந்த Quad-HD+ ரேசளுசன் கொண்டுள்ளது.

iQOO 13 vs iQOO 12: பர்போமான்ஸ்

இந்த இரு போனிளிருக்கும் பர்போமான்ஸ் பற்றி பேசினால், iQOO 13 யில் புதிய Qualcomm Snapdragon 8 Elite ப்ளாக்ஷிப் ப்ரோசெசர் வழங்கப்படுகிறது iQOO 12 போன ஜெனரேசனின் Qualcomm Snapdragon 8 Gen 3 சிப்செட் இருக்கிறது.

iQOO 13 vs iQOO 12: சாப்ட்வேர்

iQOO 13 சாப்ட்வேர் துறையில் iQOO 12 ஐ விட ஒரு எட்ஜ் வழங்குகிறது. இது சமீபத்திய ஆரிஜின் OS அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 15 யில் இயங்குகிறது, அதே சமயம் iQOO 12 ஆனது ஆண்ட்ராய்டு 14 உடன் FuntouchOS யில் இயங்குகிறது.

iQOO 13 vs iQOO 12:கேமரா

  • கேமரா பிரிவில், iQOO 12 யில் 64MP டெலிஃபோட்டோ லென்ஸுடன் (3x ஜூம்) ஒப்பிடும்போது iQOO 13 தரமிறக்கப்பட்ட 50MP டெலிஃபோட்டோ சென்சார் (2x ஜூம்) உடன் வருகிறது . இரண்டு போன்களிலும் 50MP ப்ரைமரி கேமரா மற்றும் 50MP அல்ட்ராவைட் லென்ஸ் உள்ளது, மேலும் இரண்டும் 8K வீடியோவை 30fps இல் படமாக்க முடியும்.
  • செல்பி கேமரா பற்றி பேசினால், இருப்பினும், iQOO 12 யின் 16MP முன் கேமராவுடன் ஒப்பிடும்போது iQOO 13 மேம்படுத்தப்பட்ட 32MP முன் கேமராவைக் கொண்டுள்ளது, இது வைட் மற்றும் தெளிவான செல்ஃபிகளை வழங்குகிறது.

iQOO 13 vs iQOO 12: பேட்டரி

  • இதன் பேட்டரி பற்றி பேசுகையில் iQOO 13 யில் 6,150mAh பேட்டரி மற்றும் 120W பாஸ்ட் சார்ஜிங்க ஸ்பீட் வழங்கப்படுகிறது
  • அதுவே iQOO 12 யில் 5,000mAh பேட்டரி உடன் 120W பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க :Realme P1 Speed vs iQOO Z9: இந்த இரண்டு போனில் எது பெஸ்ட் மாஸ் ?

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :