அரசு நடத்தி வரும் BSNL (பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் ) குறைந்த விலையில் பல புதிய திட்டங்களை கொண்டு வருகிறது, மேலும் Jio-Airtel மற்றும் VI அதன் திட்டத்தின் விலை அதிகரித்த பின் பல BSNL பக்கம் சாய ஆரம்பித்தனர் ஏன் என்றால் BSNL அதன் திட்டத்தின் விலையோ அல்லது வேலிடிட்டி போன்ற எதையும் உயர்த்தவில்லை அதே போல இங்கு bsnl,Jio Airtel மூன்று நிறுவனங்களும் 249ரூபாய் கொண்ட திட்டத்தை கொண்டுள்ளது ஆனால் அதில் jio, airtel விட அதிக வேலிடிட்டி வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தில் வேலிடிட்டி மற்றும் நன்மைகள் பார்க்கலாம் வாங்க
BSNL 249ரூபாய் கொண்ட திட்டத்தை பற்றி பேசினால் இதில் தினமும் 2GB டேட்டா, அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் தினமும் 100SMS வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தின் கீழ் அன்லிமிடெட் டேட்டா ஸ்பீட் குறையும்போது 40 kbps ஆக குறைக்கப்படும் இந்த திட்டத்தில் இருக்கும் மிக பெரிய ஹைலைட் இதன் வேலிடிட்டி இந்த திட்டத்தில் மொத்தம் 45 நாட்களுக்கு வழங்குகிறது.
நீங்கள் ஜியோ நெட்வொர்க்கில் இருந்தால், உங்கள் தகவலுக்கு, இந்த திட்டத்தில், ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ.249க்கு 28 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகிறது. இது தவிர, இந்த திட்டத்தில் தினசரி 1 ஜிபி டேட்டாவுக்கான அணுகலைப் பெறுவீர்கள், இந்த விஷயத்தில் நீங்கள் 28 ஜிபி டேட்டாவையும் வழங்குகிறது, ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு இந்த திட்டத்தில் அன்லிமிடெட் கால்களுக்கான அக்சஸ் வழங்குகிறது. திட்டத்தில் 100 எஸ்எம்எஸ்களையும் வழங்குகிறது. இது தவிர, ஜியோவின் இந்த திட்டத்தில், ஜியோடிவி, ஜியோசினிமா மற்றும் ஜியோகிளவுட் ஆகியவற்றுக்கான இலவச அக்சஸ் உங்களுக்கு வழங்கப்படுகிறது.
ஏர்டெல் யின் 249ரூபாய் கொண்ட திட்டத்தை பற்றி பேசினால், இதில் தினமும் 1GB டேட்டா, அன்லிமிடெட் லோக்கல் STD , ரோமிங் கால் வசதி வழங்குகிறது மற்றும் இதுல தினமும் 100SMS நன்மையும் வழங்கப்படுகிறது இதை தவிர இதன் வேலிடிட்டி 24 நாட்கள் உடன் வருகிறது.மேலும் இதில் லைவ் சேனல் மற்றும் டிவி ஷோ லைவாக பார்க்கலாம் மற்றும் இதில் Wynk மியூசிக் இலவச ஹெலோ ட்யூன் வழங்குகிறது.
Bsnl,Jio Airtel மூன்று நிறுவனங்களும் 249ரூபாய் விலையில் வருகிறது BSNL யின் இந்த திட்டத்தில் தினமும் 2GB டேட்டா, அதுவே jio மற்றும் Airtel யின் இந்த இரு திட்டத்திலும் வெறும் 1GB டேட்டா மட்டுமே வழங்குகிறது அதுவே இப்பொழுது வேலிடிட்டி பற்றி பேசுகையில் பி.எஸ்.என்.எல் யின் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 45 நாட்களுக்கு வருகிறது அதுவே airtel மற்றும் ஜியோ 24 நாட்களும் மற்றும் 28 நாட்களும் வழங்குகிறது
இதையும் படிங்க: BSNL Vs Jio: 198ரூபாயில் வரும் இரு திட்டத்தில் என்ன வித்தியாசம் எது பெஸ்ட்