Xiaomi Pad 6 vs Realme Pad X 25,000 ரூபாயில் இருக்கும் ஆண்ட்ராய்டு டேப்லெட்டில் எது பெஸ்ட்?

Updated on 14-Jun-2023
HIGHLIGHTS

Xiaomi அதன் புதிய டேப்லெட் Xiaomi Pad 6 இந்தியாவில் அறிமுகம் செய்தது

சரியான போட்டியை தர கூடிய Realme Pad X வருகிறது

இந்த இரண்டில் சிறந்த டேப்லெட் எது என்பதை தெரிந்து கொள்வோம்?

Xiaomi அதன் புதிய டேப்லெட்  Xiaomi Pad 6 இந்தியாவில் அறிமுகம் செய்தது மேலும் இதில்  சரியான போட்டியை தர கூடிய  Realme Pad X வருகிறது, Xiaomi Pad 6 யில் 11 இன்ச் யின் LCD டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது  இது தவிர, இந்த டேப்பில் ஸ்னாப்டிராகன் 870 செயலி உள்ளது. ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான MIUI 14 உடன் டேப் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.. இந்த இரண்டில் சிறந்த டேப்லெட் எது என்பதை தெரிந்து கொள்வோம்?

Xiaomi Pad 6 vs Realme Pad X யின் விலை

  • Xiaomi Pad 6 யில் 6GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜின் விலை  26,999 ரூபாய் மற்றும் 8GB ரேம் உடன் 256 GB ஸ்டோரேஜின் விலை 28,999 ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது.Xiaomi Pad 6 யின் கிராஃபைட் கிரே மற்றும் மிஸ்ட் ப்ளூ நிறங்களில் இதை வாங்கலாம். ICICI பேங்க் கார்டு மூலம் வாங்கினால், டேபின் இரண்டு வகைகளுக்கு முறையே ரூ.23,999 மற்றும் ரூ.25,999 செலவாகும். இந்த டேப் விற்பனை ஜூன் 21 முதல் அமேசான், நிறுவனத்தின் தளம் மற்றும் ரீடைலர் விற்பனைக் கடைகளில் இருந்து தொடங்கும். Xiaomi Pad 6 இன் கீபோர்டு ரூ.4,999, கவர் ரூ.1,499 மற்றும் ஸ்மார்ட் பேனா ரூ.5,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • Realme Pad X யின் விலை ரூ.19,999 ஆக வைக்கப்பட்டுள்ளது. இந்த விலை 64 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 4 ஜிபி ரேம் கொண்ட வைஃபை மாடல் ஆகும். அதே நேரத்தில், 5ஜி சப்போர்ட் கொண்ட மாடலின் விலை ரூ.25,999 ஆக வைக்கப்பட்டுள்ளது. 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் டேபின் விலை ரூ.27,999. க்ளேசியர் ப்ளூ மற்றும் க்ளோயிங் கிரே நிறங்களில் டேப்பை வாங்கலாம்.

Xiaomi Pad 6 vs Realme Pad X சிறப்பம்சம்

  • Xiaomi Pad 6 ஆண்ட்ராய்டு 13 உடன் MIUI 14 கிடைக்கும், இதில் 11 இன்ச் 2.8K  IPS LCD ஸ்க்ரீன் இருக்கிறது, மற்றும் இதன் பிரைட்னஸ் 550 நீட்ஸ் இருக்கிறது.Xiaomi Pad 6 உடன் டால்பி விஷன் சப்போர்ட் கிடைக்கிறது மற்றும் இதில் ரெப்பிரஸ் ரேட் 144Hz இருக்கிறது, இதன் டிஸ்பிளே 30Hz, 48Hz, 50Hz, 60Hz, 90Hz, 120Hz மற்றும் 144Hz ரெப்பிரஸ் ரேட் பயன்படுத்தப்படுகிறது, Xiaomi  யின் இந்த டேப்பில் ஸ்னேப்ட்ரகன் 870 ப்ரோசெசருடன் 8 GB LPDDR5 ரேம் மற்றும் 256 GB வரையிலான UFS 3.1 ஸ்டோரேஜ் கிடைக்கிறது
  • Realme UI 3.0 ஆனது Realme Pad X இல் Android 12 உடன் வழங்கப்பட்டுள்ளது. இது 1200×2000 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 11 இன்ச் WUXGA+ டிஸ்ப்ளே கொண்டுள்ளது. ஸ்னாப்டிராகன் 695 ப்ரோசெசர் , 6 ஜிபி வரை ரேம் மற்றும் 128 ஜிபி வரை ஸ்டோரேஜ் டேப்லெட்டுடன் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தாவலில் 5 ஜிபி வரை வெரஜுவல் ரேம் உள்ளது, அதாவது டேப்பின் சேமிப்பகத்தை தேவைப்பட்டால் ரேமாகப் பயன்படுத்தலாம்.

Xiaomi Pad 6 vs Realme Pad X:  யின் கேமரா

  • Xiaomi யின் இந்த டேப்பில் 13 மகாபிக்ஸல் பின் கேமரா மற்றும் 8 மெகாபிக்ஸல் முன் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது, முன் கேமரா பீல்டு ஆஃப் வ்யூ 105 டிகிரி வழங்கப்படுகிறது.
  • Realme Pad X யில் 13 மெகாபிக்ஸல் பின் கேமரா மற்றும் 8 மெகாபிக்ஸல் வைட் என்கில் முன் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது, மாற்று இதில் முன் கேமரா வீடியோ காலிங்க்கின் மூலம் தேவைப்படும்போது தானாகவே ஜூம் மற்றும் பிரேம் மேனேஜ் செய்ய முடியும்.

Xiaomi Pad 6 vs Realme Pad X பேட்டரி

  • Realme Pad X டால்பி அட்மோஸ் உடன் நான்கு ஸ்பீக்கர் இருக்கிறது, இதை தவிர இதில் 8340mAh யின் பேட்டரி இருக்கிறது, இதனுடன் 33W யின் பாஸ்ட்  சார்ஜின்க சப்போர்ட் செய்யும், Realme Pad X உடன் லோ லேட்டாசி   Realme Pencil யின் சப்போர்ட்டும் வழங்கப்பட்டுள்ளது, பென்சிலின் பேக்கப் 10.6 மணி நேரம் இருக்கும், பென்சில் மற்றும் ஸ்மார்ட் கீபோர்டை தனித்தனியாக வாங்க வேண்டும்.
  • Xiaomi Pad 6 யில் நான்கு ஸ்பீக்கர் இறுக்கிறது, இதனுடன் அட்மோஸ் சப்போர்டுடன் வருகிறது, மேலும் கனெக்டிவிட்டிக்கு  Xiaomi Pad 6 யில் Wi-Fi 6, ப்ளூடூத் 5.3 மற்றும் USB Type-C போர்ட் இருக்கிறது, டேப்பில் Xiaomi Smart Pen யின் சப்போர்ட் இருக்கிறது   Xiaomi Pad 6 யில் 8840mAh  பேட்டரி வழங்கப்படுகிறது இதன் மூலம் இரண்டு நாட்கள் பெக்கப்பை வழங்கும். இதனுடன், 33W வயர் சார்ஜிங்கிற்கான சப்போர்ட் உள்ளது, இது 100 நிமிடங்களில் முழு பேட்டரியைக் சார்ஜ் செய்து விடும்.

இப்போது ஒட்டுமொத்தமாக, இரண்டு டேப்களுக்கு ஒரே மாதிரியாக இருக்கிறது. இரண்டிலும் சார்ஜ் ஒன்றுதான். கேமராவும் அப்படித்தான். இரண்டு ஸ்க்ரீன்களுக்கு ஒரே அளவில் உள்ளன. Xiaomi யின் டேப் செயலியின் அடிப்படையில் வெற்றி பெறுகிறது. இரண்டு டேப்களிலும் 5G ஆதரவு உள்ளது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :