இணைய நடு நிலையால் நடக்கக்கூடியது என்ன?

இணைய நடு நிலையால் நடக்கக்கூடியது என்ன?
HIGHLIGHTS

இணைய நடு நிலை குறித்த விவாதங்களால் குழம்பி இருக்கிறீர்களா? அப்படியானால், இந்த கட்டுரை உங்களுக்கானது தான்.

நீங்கள் சமூக வளைத்தளங்களில் கடந்த ஒரு மாதமாக கவனித்திருந்தால், உங்கள் நண்பர்கள் இணைய நடு நிலை குறித்து செய்தி பகிர்வதையோ, அவ்வாறான செய்திகள் குறித்து பேசுவதையோ கண்டிருப்பீர்கள். உங்களில் பலர் இந்த கருத்துரு குறித்து அறிந்து கொண்டு, நன்கு உருவாக்கப்பட்ட எண்ணங்களை கொண்டிருப்பீர்கள் என நான் அநுமானித்தாலும், உங்களில் சிலர் இது குறித்து ஒன்றும் புரியாதவராக இருக்கலாம். நீங்கள் இரண்டாம் வகையறாவை சேர்ந்தவராக இருந்தால், உங்களுக்கு, கீழே கொடுக்கப்பட்டுள்ளதை போல சில கேள்விகளும் இருக்கும் என நான் நம்புகிறேன்.

  •  இணைய நடுநிலை என்றால் என்ன?
  •  இணைய நடுநிலை குறித்து நான் ஏன் அறிந்து கொள்ள வேண்டும்?
  •  அனைவரும் இணைய நடுநிலையை ஆதரித்தாலும், இது குறித்து வேறு விதமான கருத்து உள்ளதா?
  •  இணைய நடுநிலை என்பது அமெரிக்க நாட்டை சேர்ந்த  பிரச்சனை அல்லவா?இது ஏன் இந்தியாவில் பேசப்பட வேண்டும்?

இணைய நடுநிலையின், உள்ளும் வெளியும் முழுதும் புரிந்து கொள்ள, இந்த கேள்விகளை ஒன்று ஒன்றாக சமாளிப்போம்.

இணைய நடு நிலை என்றால் என்ன?

இணையே நடுநிலையை ஒரு வரியில் சொல்ல வேண்டும் என்றால், அது இவ்வாறு இருக்கும்: 
“இணைய நடுநிலை என்பது இணையத்தின் அனைத்து தரவுகளையும், சமமாக பாவிப்பது.”

மேலே சொன்னதன் விரிவான வரையறை கீழ் கண்டவாறு இருக்கும்:

“இணைய நடுநிலை என்றால், இணைய சேவை வழங்குபவர்கள்(உங்களுக்கு பிராட்பாண்ட் மற்றும் கைப்பேசி இணைய சேவையை வழங்கும் ஏர்டெல்,ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள்), ஒரு சில இணையதளத்திற்கு, இணைய சேவைகளுக்கு, பயன்பாடுகளுக்கு மட்டும் சலுகைகளை அளிக்க அனுமதி கூடாது. இது போன்ற ஐஎஸ்பி-கள், எந்த இணையதளத்திற்கும், இணைய சேவைக்கும், பயன்பாடுகளுக்கும் பாரபட்சம் காட்ட அனுமதிக்கக்கூடாது,
மேலே சொன்ன வரையறை-யை பகுதிகளாக பிரித்து தெளிவு படுத்தி கொள்வோம்.

சலுகை முறை: இது என்னவென்றால் ஐஎஸ்பிகள் சில இணைய தளங்களை, இணைய சேவைகளை, பயன்பாடுகளை, வாடிக்கையாளர்கள் எளிதாக உபயோகிக்கும் விதமாக, அதிக கட்டணம் செலுத்துமாறு கேட்கக் கூடாது. எடுத்துக்காட்டாக ஏர்டெல், ஃப்ளிப்கார்ட்-இடம் இருந்து கட்டணம் பெற்று கொண்டு, ஏர்டெல் பிராட்பாண்ட் மற்றும் இணைய கைப்பேசி தொடர்புகளில், ஃப்ளிப்கார்ட் இணைய தளம் வேகமாக இயங்குமாறு செய்வதோ, அல்லது ஃப்ளிப்கார்ட் பயன்பாடு உபயோகிக்கும் போது, இணைய தரவுகளுக்கான கட்டணத்தை கைவிடுவதோ கூடாது. 

பாகுபாடு: ஒரு ஐஎஸ்பி, எந்த இணையதளத்திற்கோ, இணைய சேவைக்கோ, பயன்பாடுகளுக்கோ, அதிக கட்டணம் செலுத்தவில்லை என்ற காரணத்துக்காக எந்த வித தண்டனையும் கொடுக்கக் கூடாது. மேலே சொன்ன எடுத்துக் காட்டை தொடர்ச்சியாக சொல்வதென்றால், ஏர்டெல், ஃப்ளிப்கார்ட் கட்டணம் செலுத்திய காரணத்தால் அதற்கு நன்மை செய்வதற்காக, அதனோடு போட்டியிடும் ஏனைய இணைய வர்த்தக தளங்களான அமேசான்  அல்லது ஸ்நாப்டீல் ஆகியவற்றை அனுகூலமற்ற நிலையில் விட்டிடக் கூடாது.இப்போதுள்ள நிலையில் இந்த பாகுபாடு, ஐஎஸ்பி-க்கு கட்டணம் செலுத்திய நிறுவனங்களுக்கு நன்மைகள் செய்வது என்ற நிலையில் மட்டும் இருக்கிறது. கூடிய விரைவில் இது, சில இணையதளங்கள் மற்றும் பயன்பாடுகள், அவை கட்டணம் செலுத்தவில்லை என்ற காரணத்தால் சில பிணையத்தில் உபயோகிக்க முடியாத நிலையிலோ,முழுதும் நிறுத்தப்பட்டோ போகக் கூடிய வாய்ப்புள்ளது. 

இணைய நடுநிலை குறித்து நான் ஏன் அறிந்து கொள்ள வேண்டும்?

இணையத்தை எந்த வடிவில் இன்று நீங்கள் உபயோகித்தாலும், இணைய நடு நிலை உங்களை நேரடியாக பாதிக்கும். டெலிகாம் ரெகுலேட்டரி அத்தாரிட்டி ஆஃப் இந்தியா(டி.ஆர்.ஏ.ஐ), இந்த விஷயத்தில், டெலிகாம் நிறுவனங்கள் மற்றும் ஐஎஸ்பிகளுக்கு ஆதரவான நிலையை எடுத்தால், இணைய தளங்கள் மற்றும் குறுஞ்செயலிகள் ஆகியவற்றை பார்வையிடுவதில் பெரிய மாற்றத்தை நீங்கள் உணருவீர்கள். இணையம் முழுதும் இணையதளம் மற்றும் இணைய சேவை, துண்டுகளாக பிரிக்கப்படும் ஒரு அபாயமான வாய்ப்பு எதிர்காலத்தில் இருப்பதாக தோன்றுகிறது. இது டிடிஹெச் சேவை வழங்குவோர் சேனல்களை பிரித்து வைத்துள்ளது போலாகும். நீங்கள் எப்போதும் பயன்படுத்தும் இணைய திட்டத்தை தவிர்த்து, ஒரு சில இணையதளங்கள் மற்றும் இணைய சேவைகளை பயன்படுத்த தனிக் கட்டணம் செலுத்த வேண்டும்.

ஐஎஸ்பிகள் மற்றும் டெலிகாம் நிறுவனங்களின் வாதம் குறித்து நாம் நல்ல விதமாக நினைக்க வேண்டுமென்றால்(இது யதார்த்தமாக இல்லாவிடினும்), இணைய நடுநிலை இல்லாத நாட்டில், மிகவும் பிரபலமான மற்றும் வழக்கமான பயன்பாடுகள், இலவசமாக, தரவு கட்டணம் இல்லாமல் இருப்பதை நாம் பார்க்க வேண்டி வரும். இதனால் இணைய தரவு கட்டணம் ஒரேடியாக குறைய வாய்ப்புள்ளது. ஏனெனில், ஐஎஸ்பிகள், பண வசூலுக்காக,முற்றிலும் நுகர்வோரை சார்ந்திருக்க தேவையில்லை. நான் முன்னர் சொன்னது போல, இது யதார்த்தமாக தோன்றவில்லை.

இந்த விவாதத்தில் நீங்கள் எந்த நிலை எடுத்தாலும், இணைய நடுநிலை உங்களை நேரடியாக பாதிக்கும் எனபது திண்ணம். எனவே இதை குறித்து நீங்கள் அறிந்து கொள்வதும், கவலைப்பட வேண்டியதும் அவசியம்.

அனைவரும் இணைய நடுநிலையை ஆதரித்தாலும், இது குறித்து வேறு விதமான கருத்து உள்ளதா?

விவாதத்தில் எப்போதும் நடப்பது போல,இணைய நடுநிலை, ஒரு சாராரால் எள்ளி நகையாடப்பட்டும்,ஒரு சாராரால் ஆதரவாக பேசப்பட்டும் வருகின்றது.

இணைய நடுநிலைக்கு ஒட்டு மொத்த ஆதரவு இருப்பதாக தோன்றினாலும்,இந்த விவாதத்தின் இன்னொரு பக்கத்தை தேர்ந்து கொள்வது அவசியம். 

ஆனால் அதற்கு முன்னர் இணைய நடுநிலை எதனால் ஆதரிக்கப்படுகின்றது என்பதைக் காண்போம்:

1. இணைய நடுநிலை இல்லாமல், ஐஎஸ்பிகளால், உபயோகிப்பாளர்களின் இணைய உலவும் பழக்கத்தை, விலைப் பிரிவு கொண்டு, வெவ்வேறு இணையதளத்துக்கு வெவ்வேறு வேகம் என பல முறைகள் கொண்டு எளிதாக மாற்ற இயலும். ஏர்டெல் அதன் உபயோகிப்பாளர்கள் ஃப்ளிப்கார்ட்-ஐ பயன்படுத்த வேண்டும் என நினைத்தால், ஃப்ளிப்கார்ட் உபயோகத்தை மிகவும் எளிதாகவும், நன்மை அளிக்கும் விதமாகவும் மாற்ற முடியும். அதே நேரத்தில் போட்டி இணையதளங்களை ஒரு அனுகூலமற்ற நிலையில் தள்ள முடியும். இது போட்டிக்கு எதிரான ஒரு செயலாகும். 

2. இணைய நடுநிலை கொண்டு, சிறிய,புது நிறுவனங்கள், இணையத்தில் நன்கு பெயர் எடுத்துள்ள பெரிய நிறுவனங்களோடு போட்டியிட இயலும். இணைய நடு நிலை இல்லை என்றால், பெரிய நிறுவனங்கள் ஐஎஸ்பிக்கு கட்டணம் செலுத்தி மேம்பட்ட சேவைகள் பெரும் காரணத்தால், போட்டிகளை அழுத்தி விட நேரிடும். இது போன்று கட்டணம் செலுத்தி மேம்பட்ட சேவைகளை பெற தொடக்க நிலை நிறுவனங்களால் இயலாது.

3. இப்போது சொல்லப்போகும் சூழ்நிலை வருவதற்கான வாய்ப்புகள் குறைவு. இருப்பினும் இணைய நடுநிலை என்றால், ஐஎஸ்பி, குறிப்பிட்ட நிறுவனங்களிடம் இருந்து கட்டணம் பெற்று கொள்ளும். இந்த ஒரு உறவு இருப்பதால், ஐஎஸ்பி, இந்த கட்டணம் செலுத்தும் நிறுவனத்துக்கு எதிரான இணைய விமர்சனங்களை அடக்க முயற்சி செய்யலாம். 

4. இணைய நடுநிலை இல்லாமல்,மற்றுமொரு சூழ்நிலை உருவாக வாய்ப்புள்ளது, அதாவது இணையம் முழுதும் பிரிக்கப்பட்ட ஒழுங்கில்லாத கூறுகளாக மாறி,அந்த கூறுகளில் இருந்து தேவையான தளங்கள் மற்றும் சேவைகள் தெரிவு செய்யும் நிலைக்கு நாம் தள்ளப்பட வாய்ப்பு உள்ளது. இது, டிடிஹெச் சந்தா செலுத்துவது போன்றதாகும். தடைகளற்ற வகையில் இணையத்தை நீங்கள் உபயோகிக்க விரும்பினால், நீங்கள் ஐஎஸ்பிக்கு மூக்கால் அழ வேண்டி வரும். 

5. வாய்ப் எனப்படும் இணைய வழி பேச்சு, மற்றும், செய்தி அனுப்பும் பயன்பாடுகளான வாட்ஸ்ஆப் மற்றும் வைபர் ஆகியவற்றைப் பற்றி சொல்லும் போது, இணைய நடுநிலைக்கு எதிரான கருத்துகள் வேகமாக வீசப்படுகின்றன. இந்த சேவைகள், டெலிகாம் நிறுவனங்களின் வர்த்தகத்தை நேரடியாக பாதிப்பதால், இந்த சேவைகளை நடத்தும் நிறுவனங்கள், இந்தியாவில் இயங்குவதற்கு, உரிமம் பெற வேண்டிய சூழலுக்கு தள்ளப்படலாம். இந்த உரிமத்திற்கான கட்டணத்தை இந்த நிறுவனங்கள் அரசாங்கத்திற்க்கு செலுத்த விரும்பவில்லை என்றால், உங்களால் இவற்றை பயன்படுத்த இயலாது.
இணைய நடுநிலைக்கு, அதன் ஆதரவாளர்கள் கூறும் பல்வேறு கருத்துகளில், இவையெல்லாம் சிலவாகும்.

இணைய நடுநிலைக்கு எதிரான விவாதத்தைப் பார்த்தால், இவற்றின் குறி வேறொன்றை நோக்கி இருக்கிறது. இணைய நடுநிலை அதரவு கருத்துகள், நுகர்வோரைக் கருத்தில் கொண்டு விவாதித்தால், அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் டெலிகாம் நிறுவனங்ளைக் கருத்தில் கொண்டு பேசுகின்றனர். இணைய நடுநிலை இந்த நிறுவனங்களுக்கு நிதி நெருக்கடியை ஏற்படுத்தும் என கருதுகின்றனர். டிஆர்ஏஐ அண்மையில் ஒரு கலந்துரையாடல் அறிக்கையை வெளியிட்டது. இது பிரத்யேகமாக, வாய்ப் சேவைகள், பயன்பாடுகள், இணையதளங்கள் ஆகியன, டெலிகாம் நிறுவனங்கள், பெரியளவு பணம் கொண்டு உருவாக்கிய கட்டுமானத்தை எவ்வாறு மிதமிஞ்சி உபயோகப்படுத்தி கொள்கிறது என்பதை குறித்து பேசுகிறது. இது நீளமான அறிக்கை,ஆனால் இதை மேலோட்டமாக படித்தால் கூட உங்களால் இந்த கருத்தைப் புரிந்து கொள்ள முடியும்.

 டிஆர்ஏஐ கொள்கை அறிக்கையில் இருக்கும் வரைபடம், குறுஞ்செய்தி பயன்பாடு வீழ்ச்சி அடைந்துள்ளதை காட்டுகிறது.

இணைய நடுநிலைக்கு எதிரான வாதத்தை ஆதரிக்க விரும்பினால், டெலிகாம் நிறுவனங்கள்,வாய்ப் சேவைகள் மற்றும் யூட்யூப் போன்ற தளங்களில் இருந்து வருவாய் ஈட்டவில்லை என்றால்,இதை சரி செய்ய உபயோகிப்பளர்களிடம் அதிக கட்டணத்தை வசூலிக்க வேண்டும் அல்லது பெருத்த நஷ்டத்தை சந்திக்க வேண்டும் என்ற அவர்களின் கூற்றை, நம்ப வேண்டும்.

டிஆர்ஏஐ கொள்கை அறிக்கையில் இருக்கும் வரைபடம், கைப்பேசி அழைப்புகள் வீழ்ச்சி அடைந்துள்ளதையும், வாய்ப் அழைப்புகள் பெருகி உள்ளதையும் காட்டுகிறது.

இணைய நடுநிலைக்கு எதிராக எடுத்து வைக்கப்படும் மற்ற வாதங்களை காண்போம்:

1. ஐஎஸ்பிகள், தங்கள் பிணையத்தை தாங்கள் நிர்வகிக்கும் போது, ஒட்டுமொத்த இயங்கு திறனை மேம்படுத்த இயலும் என்று விவாதிக்கின்றனர். அப்படியென்றால் ஐஎஸ்பிகள் இணையப் போக்குவரத்தை குறித்து முடிவு செய்வதன் மூலமாக, அதீத இணைய பயன்பாட்டாளர்களின் செயல்பாடு, குறைவாக பயன்படுத்துவோரின் அனுபவத்தை பாதிக்காதவாறு பார்த்து கொள்ளலாம். சில தேவையான மற்றும் முக்கியத்துவம் தரப்பட வேண்டிய இணைய சேவைகளான மருத்துவ தொடர்பு சேனல்கள்,பேரிடர் அவசர தொடர்பு ஆகியவற்றிற்கு இதனால் சலுகைகள் அளிக்க முடியும் என ஐஎஸ்பிகள் கூறுகின்றன.

2. ஒட்டுமொத்தமாக இணைய நடுநிலை கொள்கையை கையாள்வதால், பாதுகாப்பு சிக்கல்கள் மற்றும் இணையத்திருட்டு, இணைய குற்றங்கள் பெருக வாய்ப்பிருப்பதாக ஐஎஸ்பிகள் வாதிக்கின்றன. இணையத்தை ஐஎஸ்பிகள் நிர்வாகம் செய்வதே, இணையத்தை மேம்பட்ட முறையில் கண்காணிக்க தாங்கள் அரசாங்கத்துக்கு உதவி செய்யக்கூடிய ஓரே வழியாகும் என அவர்கள் கூறுகின்றனர்.
 
3. இணைய நடுநிலைக்கு எதிரான மற்றுமொரு வாதம், சித்தாந்தத்தை அடிப்படையாக கொண்டது. அரசாங்கமே இணைய நடுநிலையை செயல்படுத்த கூடிய அமைப்பாதலால், இது, அரசாங்கத்துக்கு அதிக அதிகாரத்தை தர வல்லது. ஐஎஸ்பிகள் தானாகவே நிர்வாகம் செய்து கொள்வது, தனிப்பயன் அந்தரங்க பாதுகாப்பிற்கும், போட்டிக்கும் சிறப்பானது என்று இணைய நடுநிலை எதிர்ப்பாளர்கள் சிலர் விவாதித்துள்ளனர்.  

இணைய நடுநிலைக்கு எதிரான விவாதங்கள் ஒரு குறிப்பட்ட கருத்தை தெரிவிக்கிறது என சொல்வது எளிதானது. ஆனால் அவ்வாறு தான் தோன்றுகிறது.

நீங்கள் ஐஎஸ்பி-ஐ கண் மூடிக் கொண்டு நம்ப வேண்டும், ஏனெனில் அவர்கள் எப்போதும் உங்கள் நலனையே மனதில் கொண்டிருக்கிறார்கள். இந்த கருத்தை நீங்கள் ஒப்பு கொள்கிறீர்களா என்பதை பொருத்து, இணைய நடு நிலை விவாதத்தில் உங்கள் பக்கத்தை அறிந்து கொள்ளலாம்.

டெலிகாம் நிறுவனங்களின் இணைய நடுநிலைக்கு எதிரான ஒரு வாதம், குறிப்பாக இந்தியா போன்ற நாட்டில் கவனிக்கப்பட வேண்டியது. இன்டர்நெட்.ஆர்க் என்ற சேவையைக் குறித்து நான் பேசுகிறேன்.இணைய தொடர்பு ஒரு வசதியாக கருதப்படும் கிராமப்புறங்களில், இந்த சேவை இணைய ஊடுருவலை சாத்தியமாக்கும். இந்த சேவையின் கீழ், ரிலையன்ஸ் கைப்பேசி உபயோகிப்பாளர்கள், 38 இணையதளங்களை இலவசமாக பயன்படுத்தலாம். இதில் பிரபலமான  ஃபேஸ்புக், ஃபேஸ்புக் மெசஞ்சர், விக்கிபீடியா, என்டிடிவி, ஆஜ்தக், பிபிசி கிரிக்இன்ஃபோ, பிங், ஓஎல்எக்ஸ் ஆகியவை அடக்கம். ஆம், இந்த பட்டியல் தன்னிச்சையாக உருவாக்கப் பட்டுள்ளதாக தோன்றலாம், ஆனால் இவை அனைத்தும் பிரபலமானவை என்று

றுப்பதற்க்கில்லை. மனசாட்சிப்படி, இணைய பயன்பாடு கிட்டப் பெறாதவர்கள்,அதை எவ்வகையிலும் பயன்படுத்தக் கூடாது என நான் நினைக்கவில்லை. இன்டர்நெட்.ஆர்க் போன்ற சேவைகள் இன்னும் பல தெரிவுகளை தந்திருக்கலாம் என்றோ, அல்லது உபயோகிப்பாளர்கள் தங்களுக்கு தேவையான இலவச தளங்களை தாங்களே தேர்வு செய்யும் வாய்ப்பு

ருந்திருக்கலாம் என்றோ நான் விரும்புகிறேனா? ஆம், அவ்வாறு இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். ஆனால் பொருளாதார யதார்த்தங்களையும் நான் அறிவேன். இன்டர்நெட்.ஆர்க் போன்ற சேவைகளின் நோக்கம் கிராமப்புற  ஊடுருவலாக இருந்தால், அவற்றிக்கு எதிராக, என்னால் உண்மையில் வாதிக்க இயலாது. குறிப்பாக, ஏற்புடைய வேகத்தில் ஒரு நல்ல இணைய தொடர்பு எனக்கு இருக்கும் போது, மற்றவர்களுக்கு அது இல்லாத போது, என்னால் இதற்கு எதிராக வாதிக்க இயலாது. 

 இன்டர்நெட்.ஆர்க் போன்ற சேவைகள் இணைய நடுநிலையை மீறுகின்றதா, இணைய வறட்சியால் பீடிக்கப்பட்டிருக்கும் இந்தியாவின் பகுதிகளில், இந்த இணைய பிரிவை ஈடு கட்டும் பாலமாக இது அமைகின்றதா எனபது போன்ற வாதங்கள் மீடியாநாமா-வில் அசத்தலாக பேசப்பட்டிருக்கிறது.

இணைய நடு நிலை என்பது அமெரிக்க நாட்டை சேர்ந்த  பிரச்சனை அல்லவா?இது ஏன் இந்தியாவில் பேசப்பட வேண்டும்?

இணைய நடுநிலை, யூஎஸ்-இல் பெரிய விவாதங்களை துவக்கிய போது, இந்த கருத்து எங்கள் கண்களை பறித்தது என்பது உண்மை. ஆனால் இந்த விவாதம் நமது கரையை இப்போது பெரிய விதத்தில் வந்தடைந்துள்ளது. ஏர்டெல் ஜீரோ குறித்த அண்மைய செய்திக்குப் பிறகு, அது எவ்வாறு சில இணையதளங்களை இலவசமாக தர இயலும் என்றான பிறகு, இந்த விவாதம் மேலும் முக்கியமானதாகிறது. இந்தியாவின் இணைய கொள்கை இன்னும் வளர்ச்சியில் இருக்கிறது. அதை எவ்வாறு வேண்டுமானாலும் இப்போது வளைக்கலாம். அது திறந்த வெளியாகவும், ஜனநாயகத்தொடும் இருக்குமாறு ஒரு உருவுக்கு கொண்டு வர இதுவே சரியான நேரம். இணையே நடுநிலை குறித்த விவாதங்கள், இந்திய இணைய பயன்பாட்டை ஆட்சி செய்யும்  கொள்கை கட்டமைப்பில் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றன. இப்போது இணையத்தில் இருக்கும் அனைவருக்கும்,அதில் பங்கேற்க விரும்புவோர்க்கும் இணையம் சமமாக கிடைக்குமாறு செய்வதில் நம் உதவி முக்கியமாகும்.

டிஜிட், இணைய நடுநிலையை ஆதரிக்கிறது. நீங்கள் இது குறித்து ஒரு கருத்தை உருவாக்கி, ஒரு நிலையை எடுக்கும் விதமாக, உங்களுக்கு வாதத்தின் இரண்டு பக்கத்தையும்  புரிய வைப்பதில் உதவி செய்தோம் என நாங்கள் நம்புகிறோம்.

குறிப்பு: மீடியாநாமா, இணைய நடுநிலை குறித்த அனைத்து விவாதங்களையும் நல்ல முறையில் பதிவு செய்த வண்ணம் உள்ளது. எனவே இதை நீங்கள் தவறாமல் இங்கே படியுங்கள். டிஆர்ஏஐ-இன் முழு கலந்துரையாடல் அறிக்கையை இங்கே வாசிக்கலாம். மீடியாநாமாவை சேர்ந்த நிகில், இணைய நடு நிலை குறித்து உதவக்கூடிய கேள்வி பதில் ஒன்றை இங்கே தொகுத்துள்ளார்.

Nikhil Pradhan

Nikhil Pradhan

https://plus.google.com/u/0/101379756352447467333 View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo