ஸ்நாப்டீல், இணைய ரீசார்ஜ் தளமான ஃப்ரீசார்ஜ்-ஐ கைப்பற்றியுள்ளது, இந்திய இணைய நுகர்வு வெளியில் நடந்த மிகப்பெரிய வர்த்தக பரிமாற்றமாகும். இந்த வணிகத்தின் விவரங்கள் வெளியடிப்படவில்லை, ஆனால் ஆதாரங்கள்படி, இந்த ஒப்பந்தம், பணம் மற்றும் பங்கு என்ற வகையில் $450 மில்லியன் மதிப்புள்ளது என அனுமானிக்கப்படுகிறது.
பேடிஎம் உடன் போட்டியிடும் ஃப்ரீசார்ஜ், 20 மில்லியன் பயனாளர்களைக் கொண்டுள்ளது. பயனாளர்கள், இந்த தளத்தைக் கொண்டு தங்கள் கைப்பேசி மற்றும் இதர பயன்பாடுகளுக்கான பணத்தை, முக்கிய செயல்பாட்டாளர்களிடம் செலுத்துகிறார்கள்.கைப்பேசி ரீசார்ஜ் செய்யும் மில்லியன் கணக்கான நுகர்வோர்களுக்கு, ஒரு எளிதான தீர்வை இந்த தளம் அளிக்கிறது. ஒரு நாளைக்கு 1 மில்லியனுக்கு மேற்பட்ட பரிமாற்றங்கள் நடப்பதாக, நிறுவனம் பறை சாற்றுகிறது.இந்தியாவில்,ஒரு நாளில், 800 மில்லியன் கைப்பேசி வாடிக்கையாளர்களுக்காக 75 மில்லியன் கைப்பேசி ரீசார்ஜ்கள் செய்யப்படுகின்றன. இதில் 3 மில்லியன் ரீசார்ஜ்கள் மட்டுமே, இணையத்தில் செய்யப்படுகின்றன. இதனால் நிறுவனம் வளர்வதற்கான சாத்தியங்கள் உள்ளன.
ஜப்பானின் சாஃப்ட்பேங்க் கார்ப் மற்றும் ஈபே இவற்றால் ஆதரிக்கப்படும் ஸ்நாப்டீல், 40 மில்லியன் பயனாளர்களையும், ஸ்மார்ட் கைப்பேசி முதல் மகிழுந்து வரை பல தரப்பட்ட பொருட்களை விற்பனை செய்யும் 100,000 வர்த்தகர்களையும் கொண்டுள்ளது. ஸ்நாப்டீல், இணைய ரீசார்ஜ் தளமான ஃப்ரீசார்ஜ்-ஐ கைப்பற்றி இருப்பதால், அதன் போட்டியாளர்களான ஃப்ளிப்கார்ட் மற்றும் அமேசான், ஆகியவற்றை விட சற்று முன்னேறி உள்ளது. இதன் மூலமாக இந்தியாவில் உள்ள பெரிய கைப்பேசி வர்த்தக தளங்களில் ஒன்றாகவும் ஆகியுள்ளது.
ஸ்நாப் டீல்-இன் இணை நிறுவனரும், தலைமை நிர்வாகியுமான குணால் பால் தனது அறிக்கையில்,” இந்த ஒப்பந்தம், ஸ்நாப்டீல் தன் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும், இணையத்தில் பல தரப்பட்ட பொருட்களையும், சேவைகளையும், அணுக வாய்ப்பளிக்க உதவுகிறது”, எனக் கூறியுள்ளார்.
இந்த அறிவிப்பை பற்றி கூறும் போது, ஃப்ரீசார்ஜ் -இன் இணை நிறுவனரும், தலைமை நிர்வாகியுமான குணால் ஷா,” ஃப்ரீசார்ஜ், இந்தியாவில் தற்போது நடைபெறும் கைப்பேசி வர்த்தக புரட்சியில், முன்னணியில் இருக்கிறது.
நாங்கள் சற்று முன்னே உள்ளோம். அதனால்,எங்களுடைய 85% பரிமாற்றங்கள், கைப்பேசியில் இருந்து உண்டாகுகிறது. இது போன்ற பரிமாற்றங்கள்,வாடிக்கையாளர்களால், மீண்டும் மீண்டும் செய்யப்படுகிறது. ஸ்நாப்டீல்-உடனான எங்கள் கூட்டு, சரியான நேரத்தில் வந்துள்ளது. எங்களுடைய இந்திய வளர்ச்சிப்பாதையை முடுக்கி விடும் ஒன்றாகவும், நாட்டில் உள்ள பல உபயோகிப்பாளர்களை அணுக ஒரு வாய்ப்பாகவும் , இந்த கூட்டை நான் பார்க்கிறேன். ஸ்நாப்டீல் தனி ஒரு விற்பனை குறியீடாக மக்களால் நன்கு அறியப்படுகிறது. நாட்டின் பெரிய டிஜிட்டல் சூழலை உருவாக்கும் ஒரு அணியில் பகுதியாக இருப்பதில் நாங்கள் பெரு மகிழ்ச்சியடைகிறோம். ஃப்ரீசார்ஜ் வெற்றி, 2௦௦ அதீத திறமையுள்ள தொழில் நெறிஞர்களால் நடைபெற்றது. இதற்காக சிறப்பு நன்றிகளை, அலோக் கோயல், சந்தீப் டாண்டன் ஆகியோருக்கும், அமோகமான ஆதரவை தரும் முதலீட்டாளர்களுக்கும் தெரிவித்து கொள்கிறேன்”, எனக் கூறினார்.
அண்மைய ஐஏஎம்ஏஐ அறிக்கை, இந்தியாவின் இணைய வர்த்தக் துறை, இந்த வருட முடிவில் ரூ.1 லட்சம் கோடி-ஐ தாண்டும் விதமாக, 33% வளர்ச்சி அடைய வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளது. இந்திய நிறுவனங்களான ஃப்ளிப்கார்ட் மற்றும் ஸ்நாப்டீல், பில்லியன் கணக்கான டாலர்களில் மதிப்பிடப்படுகிறது. இது இந்த துறையில் பல மில்லியன் ஒப்பந்தங்கள் நடக்க வாய்ப்பளித்துள்ளது.
இணைய சில்லறை வர்த்தகரான ஃப்ளிப்கார்ட், மின்த்ரா-வை, $300 மில்லியன் ஒப்பந்தத்தில் சென்ற வருட ஜூன்-இல் வாங்கியது.அமேசான், ஃபேஷன் சில்லறை வர்த்தகரான ஜபாங்.காம்-ஐ வாங்குவதற்கான பேச்சுவார்த்தையில் உள்ளது. இது போன்ற ஒப்பந்தங்கள், நாட்டில் கைப்பேசி இணைய உபயோகிப்பாளர்கள் பெருகி வரும் வேளையில் நடைபெற்று வருகிறது.
ஒரு அறிக்கையின்படி, இந்தியா, ஜூன் 2015-இல் 213 மில்லியன்-க்கு மேலான இணைய கைப்பேசி உபயோகிப்பாளர்களை கொண்டிருக்கும் என்றும், 2018-இல் இது 500 மில்லியன் என அதிகரிக்க இருப்பதாகவும் கருத்துள்ளது. இணைய வர்த்தக துறையில்,கைப்பேசி வர்த்தக பரிமாற்றங்கள் பெருகி வருகின்றன. இணைய சில்லறை வர்த்தகர்களான ஃப்ளிப்கார்ட் மற்றும் மின்த்ரா, தங்கள் விற்பனைகளில் 70%-க்கும் மேல் ஸ்மார்ட் கைப்பேசி வாயிலாக நடை பெறுவதாக பறை சாற்றுகின்றன.