Courier scam:கொரியரிலிருந்து பேசுவதாக கூறி ஓய்வு பெற்ற பெண்ணிடமிருந்து ரூ.1.75 கோடி அபேஸ்

Updated on 03-Jan-2025

Courier scam:டிஜிட்டல் ஸ்கேம் அதிகரித்து வரும் நிலையில் மும்பையின் பாந்ரா வெஸ்டைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆலோசகர் ஒருவர், அதிர்ச்சியூட்டும் இன்டர்நெட் மோசடியில் சிக்கி ரூ.1.75 கோடியை இழந்துள்ளார். தினந்தோறும் புதுப்புது முறைகளைக் கையாண்டு ஏமாற்றுக்காரர்கள் அப்பாவி மக்களைக் கொள்ளையடித்து வருவது இந்தச் சம்பவத்தின் மூலம் தெளிவாகிறது. 60 வயதான அந்தப் பெண் தனக்கு வந்த கால் உண்மையானது என்று நினைத்தார், ஆனால் அவர் ஒரு மோசடியால் பாதிக்கப்பட்டார் என்பது அவளுக்குத் தெரியாது, மேலும் அவரது பேங்க் அக்கவுன்டிலிருந்து பணம் எடுக்கப்பட்டது

இந்த ஸ்கேம் ஆனது அக்டோபர் 14, 2024 அன்று நடைபெற்றது அந்த பெண்ணுக்கு ரித்து ஷர்மா என்ற பெயரில் ஒரு போன் கால் வந்தது அதில் அவர் டெல்லியை சார்ந்த DHL கொரியரிலிருந்து பேசுவதாக கூறியுள்ளார் அதில் அந்த போன் காலர் உங்கள் பெயரில் ஒரு பார்சல் பேன்காங் அனுப்பப்பட்டதாகவும் அந்த பெண்ணின் பெயரில் ஒரு லேப்டாப், 140 கிராம் MDMA (மருந்து), ஐந்து பாஸ்போர்ட்கள் மற்றும் கிரெடிட் கார்டுகள் அடங்கிய பார்சல் பாங்காக்கிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, இந்த வழக்கு குழந்தை கடத்தல், பணமோசடி மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பானதாக இருக்கலாம் என்று அழைத்தவர், அதைக் கேட்டதும், அவர் சொன்னதைச் செய்தார்.

Scam Call

அந்தப் பெண் எந்தத் தொடர்பும் இல்லை என்று மறுத்தார், ஆனால் அவரது KYC விவரங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்பட்டது. இதற்குப் பிறகு, இந்த சிக்கலைத் தவிர்க்க விரும்பினால், சரிபார்ப்புக்காக உங்கள் பணத்தில் 90 சதவீதத்தை RBI அக்கவுண்டில் மாற்ற வேண்டும் என்று கூறப்பட்டது. டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் கூற்றுப்படி, காலை நம்பிய பெண், RTGS மூலம் பல பேங்க் அக்கவுண்டுக்கு பெரும் தொகையை மாற்றியுள்ளார்.

ஒட்டுமொத்தமாக அந்த பேன் ரூ,1.75கோடி ட்ரேன்செக்சன் செய்துள்ளார் மேலும் அதன் பின் தான் அந்த பெண் எம்ற்றப்பட்டதை உணர்ந்தார் மற்றும் தன் பணத்தை மோசடிகாரரிடம் பறிகொடுத்ததை உணர்ந்தார்.

இதையும் படிங்க: UPI யின் புதிய விதி இன்று முதல் மாறியது இந்த புதிய ஆண்டில் RBI என்ன கூறியது

இது போன்ற (Scam) மோசடியிலிருந்து எப்படி தப்பிப்பது?

  • காலர் விவரங்களை சரிபார்க்க வேண்டும்: எப்பொழுதும் ஒன்றுக்கு இருமுறை அதிகாரபூர்வ மையங்களில் வந்ததா என செக் செய்ய வேண்டும்
  • தெரியப்பத கால்களை குறித்து எச்சரிக்கையாக இருங்கள்: மோசடி செய்பவர்கள் பெரும்பாலும் பயம் மற்றும் அவசரத்தை நாடுகின்றனர். அழைப்பு பணம் அல்லது தனிப்பட்ட தகவலைக் கேட்டால், அதிகாரப்பூர்வ சேனல்கள் மூலம் மற்ற விவரங்களைச் சரிபார்க்கவும்.
  • உங்கள் தனிப்பட்ட மற்றும் முக்கியமான தகவல்களை யாருடனும் பகிர வேண்டாம்: உங்கள் KYC விவரங்கள், பாஸ்வர்ட் அல்லது தனிப்பட்ட தகவல்களை யாருடனும் போனில் பகிர வேண்டாம், குறிப்பாக கோரிக்கை சந்தேகத்திற்குரியதாகத் தோன்றினால்.
  • சந்தேகத்திற்கிடமான செயல்பாட்டைப் புகாரளிக்கவும்: ஏதேனும் மோசடி இருப்பதாக நீங்கள் சந்தேகித்தால், உடனடியாக காவல்துறை அல்லது உங்கள் பாங்க்குக்கு தெரிவிக்கவும்.
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :