PAN 2.0 Scam:போலியாக பரவும் ஈமெயில் தப்பி தவறிகூட இதை க்ளிக் செய்யாதிங்க அரசு எச்சரிக்கை

PAN 2.0 Scam:போலியாக பரவும் ஈமெயில் தப்பி தவறிகூட இதை க்ளிக் செய்யாதிங்க அரசு எச்சரிக்கை

இந்திய அரசு சமிபத்தில் PAN 2.0 என ஆரம்பித்துள்ளது, இதன் கீழ் QR கோடுடன் கூடிய ரீப்ரின்ட் கார்டை வெறும் 50 ரூபாய்க்கு பெறலாம். ரெஜிஸ்டர் செய்யப்பட்ட ஈமெயில் முகவரிக்கு வருமான வரித்துறை புதிய கார்ட்களை வழங்கி வருகிறது. இருப்பினும், இப்போது இது தொடர்பான மோசடியும் தொடங்கியுள்ளது, அதில் மக்கள் ஈமெயில்கலை பெறுகிறார்கள், அதில் PAN 2.0 ஐப் பெறும் முறை விளக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த இமெயிலில் ஒரு லிங்க் வழங்கப்படுகிறது அந்த லிங்கில் க்ளிக் செய்வதன் மூலம் Scam மோசடியில் பாதிக்கப்படலாம், மேலும் ஈமெயில் செய்பவர்கள் தங்களை இன்கம் டேக்ஸ் டிப்பர்த்மென்ட் என கூறி வருகிறார்கள் எனவே மக்கள் இதில் எளிதாக மாட்டி கொள்கிறார்கள்.

PAN 2.0 என்ற பெயரில் தற்பொழுது புதிய மோசடி ஒன்று நடைபெற்று வருகிறது, எனவே அரசாங்கம் இது போலியான ஈமெயில் அதை யாரையும் நம்ப வேண்டாம் என கேட்டு கொண்டுள்ளது.

இமெயிலில் e-PAN கார்ட் டவுன்லோட் செய்வதற்க்கு ஸ்டேப் பை ஸ்டேப் வழிமுறையை கொடுக்கப்பட்டுள்ளது, அதன் பிறகு அங்கு ஒரு லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் மக்கள் டேட்டாவை எளிதாக திருடப்படலாம் மேலும் உங்கள் பணமும் பறிபோகும் அபயம் உண்டு, எனவே இங்கு PIB Fact Check மூலம் சர்க்குலர் அனுப்ப படுகிறது மேலும் அதில் இந்த இமெயில் முற்றிலும் போலியானது மக்கள் யாரும் இதை நம்ப வேண்டாம் இதை தவிர்க்கவ்வும் என கேட்கப்பட்டுள்ளது.

PIB Fact Check, X இல் ஒரு போஸ்ட் மூலம், ஒரு புதிய மோசடி பற்றி எச்சரிக்கையாக இருக்குமாறு மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. தற்போது மக்கள் வருமான வரித் துறையின் ஈமைல்களை பெறுவதாகக் கூறுகிறது. அதன் பதிவில், PIB எழுதுகிறது, “இ-பான் கார்டைப் டவுன்லோட் செய்ய உங்களுக்கும் ஏதேனும் ஈமெயில் வந்ததா? இந்த ஈமெயில் போலியானது. நிதி மற்றும் முக்கியமான தகவல்களைப் பகிருமாறு கேட்கும் எந்த ஈமெயில் , லிங்க் , கால் மற்றும் எஸ்எம்எஸ் ஆகியவற்றிற்கு பதிலளிக்கவும். அதை அனுமதிக்காதீர்கள். “

மேலும் போஸ்டில் , அத்தகைய ஃபிஷிங் ஈமெயில் புகாரளிக்க ஒரு லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது, அது https://incometaxindia.gov.in/pages/report-phishing.aspx இதன் மூலம் போலி ஈமெயில் மெசேஜை புகரளிக்கலம்.

QR கொட மூலம் PAN கார்ட் ரீப்ரின்ட் எப்படி செய்வது ?

  • முதலில் நீங்கள் https://www.onlineservices.nsdl.com/paam/ReprintEPan.html யில் செல்ல வேண்டும்.
  • இப்பொழுது அடுத்த பக்கம் திறக்கும், அங்கு உங்களின் பேன், ஆதார்,பிறந்த தேதி போன்றவற்றை போடா வேண்டும் பாக்சை தேர்ந்டுத்து இப்பொழுது Submit என்பதை தட்ட வேண்டும்.
  • சுப்மிட் செய்யும்போது , ​​வருமான வரித் துறையால் வழங்கப்பட்ட முகமூடி விவரங்களை அடுத்த பக்கத்தில் சரிபார்க்க வேண்டும். மொபைல், ஈமெயில் அல்லது இரண்டையும் உள்ளடக்கிய OTP ஐப் பெற விரும்பும் முறையைத் தேர்ந்தெடுக்கவும். அனுப்புவதற்கான ரெஜிஸ்டர் செய்யப்பட்ட காண்டேன்ட் முகவரியை உறுதிசெய்து, ‘OTPஐ உருவாக்கு’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
    உருவாக்கப்பட்ட 10 நிமிடங்களுக்குள் பெறப்பட்ட OTP ஐ உள்ளிட்டு அதை சரிபார்க்கவும்.
  • சரிபார்த்த பிறகு, பணம் செலுத்த தொடரவும். QR-குறியிடப்பட்ட PAN கார்ட் மறுபதிப்புக்கான கட்டணம் ரூ.50. சேவை விதிமுறைகளை ஏற்று Submit என்பதைக் கிளிக் செய்யவும்.
  • அடுத்த பக்கத்தில் 50 ரூபாய் செலுத்தவும். e-PAN ஆனது 24 மணிநேரத்திற்குப் பிறகு NSDL வெப்சைட்டிலிருந்து டவுன்லோட் செய்யப்படுவதால், பின்னர் உருவாக்கப்பட்ட எக்நோலேஜ்மென்ட் ரசீதைச் சேமிக்கவும்.
  • பான் கார்டு உங்கள் ரெஜிஸ்டர் செய்யப்பட்ட முகவரிக்கு அனுப்பப்படும், இது வழக்கமாக வந்து சேர 15 முதல் 20 நாட்கள் ஆகும்.

UTIITSL லிருந்து QR கோடுடன் PAN கார்ட் எப்படி டவுன்லோட் செய்வது?

  • முதலில் நீங்கள் https://www.pan.utiitsl.com/reprint.html யில் செல்ல வேண்டும்.
  • இங்கு நீங்கள் ரீப்ரின்ட் பேன் கார்ட் என்பதை தட்ட வேண்டும்.
  • அதை தட்டிய பிறகு இப்பொழுது புதிய பக்கம் தோன்றும்
  • உங்கள் பான் நம்பர் , பிறந்த தேதி மற்றும் காட்சியில் தெரியும் கேப்ட்சா குறியீடு உள்ளிட்ட தேவையான தகவல்களை இங்கே உள்ளிட வேண்டும், அதன் பிறகு சமர்ப்பி என்பதை அழுத்தவும்.

இதையும் படிங்க:Christmas 2024: உங்கள் அன்பானவர்களுக்கு WhatsApp யில் ஸ்டிக்கர்,GIFஎப்படி அனுப்புவது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo