அரசு அதன் PAN 2.0 ப்ரொஜெக்ட் அறிவித்துள்ளது. அனைத்து வரி செலுத்துவோருக்கும் பான் கார்டு 2.0 இலவசமாக வழங்கப்படும். பட்ஜெட் 2023 அறிவிப்புக்கு ஏற்ப, குறிப்பிட்ட அரசு நிறுவனங்களின் அனைத்து டிஜிட்டல் அமைப்புகளுக்கும் PAN ஐ “பொது பிஸ்னசை அடையாளங்காட்டியாக” மாற்ற அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இந்த புதிய PAN சிஸ்டம் மூலம் ஒன்றுக்கு மேற்பட்ட PAN card வைத்திருப்பவர்களை கண்டிபிடிக்கலாம் மேலும் தவறான PAN கார்ட் கொடுப்பவர்களுக்கும இது பொருந்தும் மேலும் இவை இரண்டு மிக பெரிய குற்றங்கள் ஆகும் மேலும் இதன் மூலம் 10,000ரூபாய் அபராதம் விதிக்கப்படும். வரி விதிப்பு துறை நிபுணர்களின் படி PAN 2.0 ஆனது டைனமிக் QR கொட போன்ற உள்ளமைக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கொண்டுள்ளது, இது போலி பான் கார்டுகளையும் தவறான தகவல்களையும் தானாகவே கண்டறியும்.
வருமான வரி சட்டம் 1961 கீழ் எந்த ஒரு குடிமகனுக்கும் ஒன்றுக்கும் அதிகமான பான் கார்ட் வைத்திருக்க அனுமதி இல்லை அப்படி வைத்திருந்தால் 10,000ரூபாய் வரையிலான அபராதம் செலுத்த வேண்டி இருக்கும்.டூப்ளிகேட் பான்களை சரிபார்க்க தேவையான தொழில்நுட்பம் அரசிடம் இப்பொழுது உள்ளது வருமான வரிச் சட்டம், 1961 யின் விதிகளின்படி, எந்த நபரும் ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்ட் வைத்திருக்க அனுமதி இல்லை, அப்படி யாரவது பல PAN கார்ட் வைத்திருப்பது கண்டறியப்பட்டால் அது விதியின் அதிகாரத்தை மீரப்ட்டது ஒன்றாகும் மேலும் அத்தகைய பேன்கார்டை தடை அல்லது நீக்கப்படும். மேலும் இந்த புதிய PAN விதி நவம்பர் 26,2024 அன்று கொண்டு வரப்பட்டது.
அதாவது தற்பொழுது பல போலியான பெயரை கொண்டு PAN card வைத்துள்ளனர் இதன் மூலம் யாரோ ஒருவரின் PAN card பெயரை பயன்படுத்தி அலுவலத்தில் சேர்வது மேலும் GST மோசடி, உள்ளீட்டு வரிக் கடன் மோசடி போன்றவை மோசடி நிறுவனங்கள் போலியான டாக்யுமென்ட் பயன்படுத்திய சம்பவங்கள் பதிவாகியுள்ளன. சமிபத்தில் பல போலியான நிருவங்களில் போலியான PAN card பயன்படுத்தப்பட்டது என்பது தெரிய வந்துள்ளது இதில் வேடிக்கை என்னவென்றால் தங்களின் PAN card தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது உண்மையான PAN கார்ட் உரிமயலருக்கே தெரியாமல் இருப்பது தான. மேலும் இது போன்ற சிக்கலில் இருந்து தப்பிக்க உங்கள் பெயரில் எத்தனை பேன்கார்ட் இஸ்யு செய்யப்பட்டிருக்கிறது என்று நிச்சயம் தெரிந்து அதை உடனே டி எக்டிவேட் செய்யுங்கள்.
உங்கள் பெயரில் எத்தனை PAN கார்ட் இருக்கிறது என்று தெரிந்து கொள்ள ஒரு வேலை உங்களின் பேன் நம்பர் தெரியாமல் இருந்தால், இங்கு நீங்கள் வருமான வரி துறையின் இ-ஃபைலிங் வெப்சைட்டில் இந்தத் தகவலைத் தெரிந்துகொள்ளலாம். உங்கள் பெயர் மற்றும் பிறந்த தேதியை நீங்கள் வழங்க வேண்டும்.
இதையும் படிங்க :PAN 2.0 என்றால் என்ன PAN card QR கோட் எப்படி வேலை செய்யும்