நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போன் அல்லது மொபைல் போன் மூலம் பேங்க் சேவைகளைச் செய்தால் அல்லது UPI மூலம் ட்ரேன்செக்சன்களைச் செய்தால், இந்தச் செய்தியை கவனமாகப் படிக்க வேண்டும். அதாவது ஏப்ரல் 1 முதல் இந்த காரங்களால் உங்களின் National Payments Corporation of India NPCI படி உங்கள் நம்பர் ப்ளாக் செய்யப்படலாம் எது என்ன என்ன பாருங்க
நீங்கள் UPI அல்லது மொபைல் பேங்கிங் பயன்படுத்தினால் இந்த விஷத்தை கவனிப்பது அவசியமாகும், அதாவது ஏப்ரில் 1 2025 முதல் புதிய விதியின் படி சில மொபைல் நம்பர்கள் பேங்க் மற்றும் UPI-க்காக வேலை செய்வதை நிறுத்திவிடும் இந்திய நேஷனல் பேமன்ட் கார்பரேசன் NPCI ஒரு புதிய விதியை உருவாக்கியுள்ளது பேங்கில் இனி செயலில் இல்லாத அல்லது வேறொரு நபருக்கு கொடுக்கப்பட்ட மொபைல் நம்பர்களை அகற்றும் இந்த விதி மோசடி மற்றும் தவறான பணம் செலுத்துதல்களை நிறுத்த உதவும்.
UPI பேமண்ட் பொறுத்தவரை, மொபைல் நம்பர் அடையாளமாகச் செயல்பட்டு, மற்ற நபருக்கு சரியான பணம் கிடைக்கிறதா இல்லையா என்பதை உறுதி செய்கிறது. மொபைல் நம்பர் பயன்பாட்டில் இல்லாமல், வேறு யாராவது அதை வைத்திருந்தால் , அது தொழில்நுட்ப சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும். பணம் செலுத்துவதில் தோல்வி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். அதனால்தான் அத்தகைய நம்பர்களை நீக்க உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
இந்த புதிய விதிகள் ஏப்ரல் 1 2025 முதல் தொடங்கும் பேங்க் மற்றும் UPI ஆப்யின் மார்ச் 31 2025 க்குள் இந்த விதிகளைப் பின்பற்ற வேண்டும்.
நீங்கள் மொபைல் நம்பர் அப்டேட் செய்யாமல் இருந்தால், நீங்கள் OTPs பேமண்ட் செய்ய முடியாமல் போகலாம், உங்கள் UPI ஆப்ஸ் நம்பர் வேலையை நிறுத்துகிறது மற்றும் நீங்கள் பேங்கிலிருந்து வரும் முக்கியமான மெசேஜ் மிஸ் செய்யலாம்.
தங்கள் பேங்க் அக்கவுண்டுடன் மொபைல் நம்பர் இணைக்கப்பட்டு, நீண்ட காலமாக அதை ரீசார்ஜ் செய்ய முடியாதவர்கள், அந்த நம்பர் உங்கள் அக்கவுண்டில் செயலில் உள்ளதா இல்லையா என்பதை ஜியோ, ஏர்டெல் அல்லது வோட-ஐடியா போன்ற தங்கள் மொபைல் ஆபரேட்டருடன் உறுதிப்படுத்த வேண்டும். உங்கள் பெயரில் நம்பர் இயங்கினால், உடனடியாக அதை ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள். எண் டிஎக்டிவாக இருந்தால் , அதைச் செயல்படுத்தவும்.
அறிக்கையின்படி, ஒரு மொபைல் எண்ணை 90 நாட்களுக்கு ரீசார்ஜ் செய்யவில்லை என்றால், அது செயலிழக்கச் செய்யப்படலாம். இருப்பினும், பயனருக்கு 15 நாட்கள் சலுகை காலம் வழங்கப்படுகிறது, அந்த காலகட்டத்தில் அவர் தனது நம்பரை மீண்டும் செயல்படுத்தலாம். அந்த எண் செயல்படுத்தப்படாவிட்டால், சிம் செயலிழந்து, வேறு ஒருவருக்கு ஒதுக்கப்படலாம்.
எந்தவொரு பிரச்சனையையும் தவிர்க்க இன்றே உங்கள் பேங்க் மற்றும் UPI பயன்பாடுகளுடன் உங்கள் மொபைல் நம்பரை சரிபார்க்கவும். இதன் படி உங்கள் கட்டணங்களை சீராகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்கும்.
இதையும் படிங்க:VI யின் 5G திட்டம் ரூ,299 யில் அறிமுகம் இனி ஜாலியா அன்லிமிடெட் 5G நன்மை பெற முடியும் ஆனால் இவர்களுக்கு மட்டும் தான்