நீங்கள் உங்கள் குடும்பத்தின் மொத்த Aadhaar கார்டை எல்லா இடத்திற்கும் சுமந்து செல்ல கடினமாக இருக்கும்போது உங்களுக்கான சரியான தீர்வு mAadhaar app. ஆம் நீங்கள் பல ஆப் வைத்திருக்க தேவை இல்லை, அதாவது இந்த ஆப் யின் மூலம் பல ஆதார் கார்ட் ப்ரொபைலை ஒரே ஆதாரில் வைக்கலாம் மேலும் உங்களின் aadhaar கார்ட் டேட்டா பாதுகாப்பாக இருக்கும் மேலும் உங்கள் ஆதார் கார்ட் தகவலை எப்பொழுது வேடுமானாலும் எங்கு வேண்டுமானாலும் அணுக முடியும்
அது எப்படி mAadhaar app யில் பல மொத்த குடும்பத்தின் ஆதார் கார்ட் ஒரே இடத்தில் வைப்பது பார்க்கலாம் வாங்க.
mAadhaar App என்றால் என்ன?
mAadhaar App என்பது இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI ) அதிகாரபூர்வ ஆப் ஆகும். இதன் மூலம் உங்களின் ஆதார்கார்ட் தகவல்களை டிஜிட்டல் முறையில் சேவையை பயன்படுத்தலாம் மேலும் உங்களின் aadhaar கார்டை eAadhaar எப்பொழுது வேண்டும்னாலும் டவுன்லோட் செய்து கொள்ளலாம் இதில் தகவல் அப்டேட் மற்றும் பயோமெட்ரிக் டேட்டா லோக்/அன்லாக் கூடுதலாக உங்களின் மொய்த்த குடும்பத்தின் ஆதார் ப்ரோபைலையும் ஒரே ஆப் யில் வைக்க முடியும்.
mAadhaar யின் நன்மை என்ன ?
mAadhaar ஆப் மேனேஜ் செய்வது எளிதானது, உங்கள் குடும்ப உறுப்பினர்கள் போன்ற பல ஆதார் ப்ரொபைலை ஒரே ஆப்ப்யிர்க்குள் கையாள உங்களை அனுமதிக்கிறது, பல அக்கவுண்ட்கள் லோகின் தேவையை நீக்குகிறது.
two factor authentication சிஸ்டம் பயன்படுத்தி உங்கள் டேட்டா பாதுகாப்பாக இருப்பதை இது உறுதி செய்கிறது. இது உங்கள் மற்றும் உங்கள் குடும்பத்தின் ஆதார் விவரங்களை எந்த நேரத்திலும், ஆஃப்லைனில் கூட வசதியாக அணுக முடியும்.
ஒரே ஆப்யில் பல ஆதார் ப்ரோபைல் எப்படி செட் செய்வது?
mAadhaar App டவுன்லோட் செய்து நிறுவவும் : உங்களிடம் mAadhaar App இல்லமல் இருந்தால் கூகுள் ப்ளே ஸ்டோர் அல்லது IOS ஆப் ஸ்டோரிலிருந்து டவுன்லோட் செய்யவும்.
உங்களின் சொந்த ஆதார் ப்ரோபைல் பதிவு செய்யவும்:– ஆப்பை திறந்து உங்களின் ஆதார் நம்பர் அல்லது Virtual ID (VID) போட்டு லோகின் செய்யலாம்.
லோகின் செய்த பிறகு உங்களின் ப்ரொபைலை சரிபார்க்க OTP (ஒன்-டைம் பாஸ்வர்ட்) உங்களின் ரெஜிஸ்டர் மொபைல் நம்பருக்கு அனுப்ப படும்.
வெரிபை செய்த பிறகு உங்களின் ஆதார்ப்ரோபைல் டேஷ்போர்டில் காமிக்கப்படும்.
. குடும்ப உறுப்பினரின் ப்ரோபைல் எப்படி சேர்ப்பது?
இப்போது உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்காக 5 ஆதார் ப்ரோபைல் (உங்கள் சொந்தம் ப்ரோபைல் உட்பட) சேர்க்கலாம்.
“ப்ரோபைல் செக்சன் ” என்பதைத் தட்டவும்: டாஷ்போர்டில், புதிய ப்ரோபைல் சேர்க்கத் தொடங்க, “Add profile” விருப்பத்தைக் கிளிக் செய்யவும்.
குடும்ப உறுப்பினரின் ஆதார் நம்பரை போடவும் : உங்கள் குடும்ப உறுப்பினரின் ஆதார் அட்டையில் ஆதார் நம்பர் உள்ளிடவும் அல்லது QR கோடை ஸ்கேன் செய்யவும்.
OTP மூலம் அதேடிகேசன் : நீங்கள் சேர்க்கும் ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்ட ரெஜிஸ்டர் செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு OTP அனுப்பப்படும். OTP ஐப் பெற, குடும்ப உறுப்பினரின் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கான அணுகல் இருப்பதை உறுதிசெய்யவும்.
கிடைத்த OTP ஆப் யில் உள்ளிட்டு குடும்ப உறுப்பினர் தகவல்களை சரி பார்க்கவும்.
உங்களின் குடும்ப உறுப்பினரின் ஆதார் நம்பர் வெரிபை செய்யப்பட்ட பின் அவர்களின் ப்ரோபைல், mAadhaar App யில் தோன்றும். இதன் பிறகு வேறு ஒருவரின் ப்ரொபைலுக்கு செல்ல Profile செக்சனில் க்ளிக் செய்யவும் மற்றும் நீங்கள் தகவலை பார்க்க விரும்பும் ப்ரொபைலை தேர்ந்டுத்து அதை நீங்கள் மேனேஜ் செய்ய முடியும்.
குடும்ப உறுப்பினர் ப்ரோபைலில் என்னவெல்லாம் அம்சம் கிடைக்கும்.
ஒவ்வொரு ப்ரோபைலையும் பல்வேறு அம்சங்களை நீங்கள் அணுகலாம்: eAadhaar ஐப் டவுன்லோட்: ஆதார் கார்டின் டிஜிட்டல் வெர்சன் டவுன்லோட் செய்யலாம் . ஆதார் ப்ரோபைல் அப்டேட் : ஒவ்வொரு உறுப்பினருக்கும் முகவரி மற்றும் பிற விவரங்களைப் அப்டேட் செய்யலாம் .
மேலும் உங்களின் ஆதார் கார்ட பயோமெட்ரிக் மூலம் லோக் அல்லது அன்லாக் செய்யலாம்.
QR கோட் ஷேர் : வெரிபிகேசன் நோக்கங்களுக்காக ஆதார் QR கோடை நேரடியாகப் பகிரவும்.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.