வெறும் மொபைல் நம்பர் வைத்து Aadhaar Card எப்படி பெறுவது

Updated on 09-Dec-2024

குழந்தைகளை அட்மிசன் முதல் பேங்க் அக்கவுன்ட் தொடங்குவது வரை Aadhaar card மிகவும் முக்கியமான ஆவணமாகும். அத்தகைய சூழ்நிலையில், ஆதார் கார்டின் ஹார்ட் காப்பி எடுக்க முடியும். அத்தகைய சூழ்நிலையில், உங்களுக்கு எங்காவது ஆதார் அட்டை அவசரமாக தேவைப்பட்டால், உங்கள் மொபைல் எண்ணிலிருந்தும் ஆதார் அட்டையை எடுக்கலாம். இருப்பினும், இதற்கு உங்கள் மொபைல் எண்ணை இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தில் (UIDAI) பதிவு செய்திருப்பது அவசியம். மொபைல் எண்ணில் இருந்து ஆதார் கார்டை டவுன்லோட் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

மொபைல் நம்பரிலிருந்து Aadhaar card எப்படி டவுன்லோட் செய்வது?

உங்களுக்கு ஆதார் அவசரமாகத் தேவைப்படும் மற்றும் ஆதார் எண் இல்லை என்றால், உங்கள் மொபைல் எண்ணின் உதவியுடன் ஆதார் அட்டையையும் பதிவிறக்கம் செய்யலாம். இதற்கு நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்டேப்களை பின்பற்ற வேண்டும்:

aadhaar update

ஸ்டேப் 1:- இதற்காக, இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI) அதிகாரப்பூர்வ இணையதளத்தை முதலில் பார்வையிடவும் https://uidai.gov.in/en/. முகப்புப் பக்கத்தில் My Aadhaar என்ற விருப்பத்தைக் காணலாம், அதற்குச் செல்லவும்.

ஸ்டேப் 2:- இங்கே நீங்கள் பல விருப்பங்களைக் காண்பீர்கள், அதில் நீங்கள் ஆதார் சேவைகளைத் Retrieve Lost or Forgotten EID/UID (Retrieve EID / Aadhaar number) தேர்ந்டுடுக்கவும் அதை க்ளிக் செய்யவும்.

ஸ்டேப் 3:- ஒரு புதிய பக்கம் திறக்கும், அதில் நீங்கள் ஆதார் எண் மற்றும் என்ரோல்மென்ட் ஐடி நம்பர் என்ற விருப்பத்தைக் காண்பீர்கள், அங்கு ஆதார் நமப்ருடன் கூடிய விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஸ்டேப் 4:– இப்போது நீங்கள் உங்கள் முழுப்பெயர், மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் முகவரி, கேப்ட்சாவை உள்ளிட்டு Send OTP என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் OTP வரும், அதை நீங்கள் உள்ளிட வேண்டும்.

ஸ்டேப் 5 :-இப்போது UIDAI இலிருந்து உங்கள் மொபைலில் SMS ஒன்றைப் பெறுவீர்கள், அதில் உங்கள் ஆதார் நம்பர் இருக்கும். இதன் மூலம் ஆதார் கார்டை எளிதாக எடுக்க முடியும்.

இதையும் படிங்க:- Facebook அக்கவுண்டை மொபைல் நம்பர் மற்றும் ஈமெயில் ID இல்லாமல் எப்படி ரெகவர் செய்வது?

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :