இந்திய ரயிலில் தினமும் பல் கோடிகணக்கானோர் பயணித்து வருகிறார்கள். ஆனால் ரயில் டிக்கெட்டில் தவறான பெயர் அல்லது தவறான தேதியில் டிக்கெட் புக் ஆகியிருன்தலோ கவலை பட வேண்டாம், நீங்கள் முன்பதிவு செய்த டிக்கெட்டில் பெயரை மாற்ற விரும்பினால், அல்லது தேதியை மாற்ற விரும்பினால், அல்லது சில காரணங்களால் உங்களால் பயணம் செய்ய முடியாமல் போனால், உங்கள் டிக்கெட்டை ஒருவருக்கு மாற்ற விரும்பினால், எளிய வலி முறைகள் பற்றி பார்க்கலாம் வாங்க
டிக்கெட் புக் செய்யும்போது தவறான பெயர் இருந்தால் எப்படி மாற்றுவது ?
இந்திய ரயில்வே ட்ரைன் டிக்கெட் தகவலை எளிதாக மாற்றலாம், ஆனால் உங்களின் சரியான தகவல் இருக்க வேண்டும் கன்பார்ம் ட்ரைன் டிக்கெட்டில் பெயர் மற்றும் தேதி மாற்றுவதற்க்கு இந்த விதியை தெரிந்து கொள்ளுங்க. உங்கள் டிக்கெட்டை வேறொருவருக்கு மாற்ற விரும்பினால், அதற்கும் விதிகள் உள்ளன.
தந்தை, தாய், சகோதரர், சகோதரி, மகன், மகள், கணவன் அல்லது மனைவி போன்ற குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே டிக்கெட்டுகள் மாற்றப்படும். அரசு அலுவலர்கள், ஆய்வுப் பயணங்களில் மாணவர்கள் அல்லது அதுபோன்ற நிகழ்வுகளில் க்ரூப் முன்பதிவுகளில், டிக்கெட்டுகள் க்ரூப்பிற்கு மாற்றப்படலாம்.
ஆப்லைனில் ட்ரைன் டிக்கெட் புக்கிங் பெயர் மாற்றம் எப்படி செய்வது?
முன்பதிவு அலுவலகத்தைப் பார்வையிடவும் : ரயில் புறப்படுவதற்கு குறைந்தபட்சம் 24 மணிநேரத்திற்கு முன்பாக அருகிலுள்ள ரயில்வே முன்பதிவு அலுவலகத்திற்குச் செல்லவும்.
எழுத்துப்பூர்வ ரெகுவஸ்ட் : பெயர் மாற்றத்தைக் கோரி எழுத்துப்பூர்வ விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவு
அடையாளச் சான்று : அசல் டிக்கெட் வைத்திருப்பவருக்கும் புதிய பயணிக்கும் செல்லுபடியாகும் அடையாளச் சான்றுகளை வழங்கவும்
சமர்ப்பிப்பு : ரயில்வே அதிகாரிகளிடம் தேவையான ஆவணங்களை ஒப்படைக்கவும், அவர் கோரிக்கையை செயல்படுத்துவார்.
முக்கிய விதி மற்றும் நிபந்தனை
பெயர் மாற்றம் ஒரு டிக்கெட்டுக்கு ஒரு முறை மட்டுமே செய்ய முடியும்.
IRCTC யின் ஆன்லைன் பிளாட்பர்மிளிருந்து டிக்கெட் புக் செய்பவர்களுக்கு இந்த வசதி கிடையாது
மேலும் இது குறிப்பிட்ட நேரங்களில் இந்த மாற்றத்தை செய்யாவிட்டால் அதை நிராகரிக்க படும்
ஆன்லைன் மற்றும் ஆப்லைனில் ரயில் டிக்கெட் தேதி மாற்றம் எப்படி செவது
பயணிகள் நீங்கள் பயணிக்கும் தேதியை சில விதியின் மற்றும் நிபதனையின் கீழ் இதை செய்ய முடியும், மேலும் இந்த வசதியானது ஆன்லைன் மற்றும் ஆப்லைனில் டிக்கெட் புக் செய்யலாம் ஆனால் அதன் புக்கிங்கில் சில வித்தியாசம் இருக்கும்.
ஆப்லைனில் டிக்கெட் புக்கிங் தேதியை எப்படி மாற்றம் செய்வது?
முன்பதிவு அலுவலகத்தைப் பார்வையிடவும் : ரயில் புறப்படுவதற்கு குறைந்தது 48 மணிநேரத்திற்கு முன்பாக அருகிலுள்ள ரயில்வே முன்பதிவு அலுவலகத்தை அணுகவும்.
அசல் டிக்கெட்டை வழங்கவும் : அசல் டிக்கெட்டை எடுத்துச் சென்று கோரிக்கையைச் சமர்ப்பிக்கவும்:
ஒத்திவைக்கவும் : பயணத்தை அசல் பயணத் தேதியை விட தாமதமான தேதிக்கு மாற்றவும்.
முன்பதிவு : பயணத்தை அசல் பயணத் தேதிக்கு முந்தைய தேதிக்கு மாற்றவும்.
மாற்றுத் தேதியைத் தேர்ந்தெடுக்கவும் : டிக்கெட் செல்லுபடியாகும் காலத்திற்குள் புதிய பயணத் தேதியைத் தேர்வு செய்யவும்.
ஆன்லைனில் ரயில் டிக்கெட் புக்கிங் தேதியை எப்படி மாற்றுவது?
ஆன்லைனில் டிக்கெட் புக் செய்வோருக்குக்கு தேதி மாற்றம் செய்வது சப்போர்ட் செய்வதில்லை
பயன்கள் ஏற்கனவே இருக்கும் டிக்கெட் கேன்ஸில் செய்து பிறகு புதியதாக எந்த தேதியில் வேண்டுமோ அதில் புக் செய்து கொள்ள முடியும்.
இந்திய ரயில்வே விதியின்படி கேன்சிலேசன் சார்ஜ் வசூலிக்கப்படும்.
புக் செய்யப்பட்ட பயணிக்கும் தேதியை மாற்ற சில நிபந்தனை
உறுதிப்படுத்தப்பட்ட அல்லது RAC (கேன்சிலேசன் எதிரான புக்கிங் ) டிக்கெட்டுகளுக்கு மட்டுமே தேதி மாற்றம் கிடைக்கும்.
தட்கல் மற்றும் வேய்ட்டிங் லிஸ்ட்டில் உள்ள டிக்கெட்டுகள் தேதி மாற்றங்களுக்கு தகுதியற்றவை.
புதிய பயணத் தேதியில் சீட் கிடைப்பதைப் பொறுத்து மாற்றங்கள் செய்யப்படுகின்றன.
ஒரு டிக்கெட்டுக்கு ஒருமுறை மட்டுமே மாற்றங்களைச் செய்ய முடியும், மேலும் சரியான அடையாளச் சான்று வழங்கப்பட வேண்டும்
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.